search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvilakku Puja"

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு.
    • சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம்.

    ஆலயத் தோற்றம்

    நம் பாரதத்தில் மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு. அப்படி ஒரு ஆலயம்தான், சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம். திரவுபதியுடன் பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த நேரத்தில், உபமன்யு முனிவரிடம் ஆசி பெறுவதற்காக தில்லை வனத்திற்கு வந்தனர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அப்படி அவர்கள் வந்து தங்கியிருந்த இடத்தில்தான், தற்போது திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு காலச் சூழல்களில் சிதிலமடைந்ததன் காரணமாக, சமீப காலங்களில் புதியதாக கட்டப்பட்டிருக்கிறது.

     இந்த ஆலயம் பல காலமாக சிதிலமடைந்து கிடந்ததால், அதில் இருந்த அம்மனை மட்டும் ஒரு இடத்தில் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனா். ஒரு முறை திரவுபதியை வணங்கும் ஒரு பெண்ணிற்கு, கிணற்றில் குதித்து நீராடுவது போல் கனவு வந்துள்ளது.

    கனவில் கிணற்றில் குளித்து விட்டு வெளியே வந்த பக்தையை, கரையில் நின்ற ஒரு பெண் பார்த்து, "நீ தினமும் நீராடுகிறாய்.. நான் எவ்வளவு நாளைக்கு தான் நீராடாமல் இருப்பது?" என்று கேட்டு புன்னகைத்தாளாம். அதற்கு அந்த பக்தை, "யாரம்மா நீ?" என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் "இந்த இடத்தின் சொந்தக்காரி" என்று கூறி மறைந்துவிட்டாளாம்.

    தான் கண்ட கனவை மறுநாள் காலையில் வீட்டாரிடமும், ஊர்க்காரர்களிடமும் அம்மனை வழிபடும் பெண் கூறியிருக்கிறார். மேலும், "என் கனவில் வந்தது வேறு யாருமல்ல. இங்கே சிதைந்து கிடக்கும் ஆலயத்தில் இருந்தபடி நம்மை எல்லாம் காத்து ரட்சிக்கும் திரவுபதி அம்மன்தான்" என்று கூறியிருக்கிறார்.

    இதையடுத்து அந்த ஊர் மக்கள் சார்பில், சிதைந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கட்டும் பணி தொடங்கப்பட்டது. திரவுபதி அம்மனின் அருளால் ஆலயம் கட்டும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றது. சிறு ஆலயமாக கட்டி முடித்து குடமுழுக்கும் செய்தனர்.

    அதன்பிறகு ஆலயம் மீண்டும் சிதலமடைந்து சுமார் 50 ஆண்டு காலமாக அப்படியே இருந்தது. இதையடுத்து மீண்டும் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இணைந்து ஆலயத்தை திருப்பணி செய்து புதுப்பித்தனர். இந்தப் பணி 1988-ம் ஆண்டு தொடங்கி, 1989-ம் ஆண்டு முடிந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் ஆலயம் முன் மண்டபம் கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

     ஆலய அமைப்பு

    ஆலய முகப்பில் இருப்பது சுப மண்டபம். அதனுள் நுழைந்தால், கருடாழ்வார், கொடிமரம், பலிபீடம், நந்தி, காவல் தெய்வமான முத்தால் வழிவகுத்தார், விநாயகர், பாலமுருகன், அரவான், உள்ளடியார், அய்யனார் சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. கருவறையில் திரவுபதி அம்மன் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இரு திருக்கரங்களோடு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோஷ்டத்தில் சன்னிதிகள் இல்லை.

    திருமணத் தடை உள்ளவர்கள், தொடர்ந்து 9 வாரம் வெள்ளிக்கிழமைகளில் பூசணிக்காய், அன்னாசிபழம் ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், அர்த்த மண்டபத்தில் அம்மனுக்கு நேராக தலை வாழை இலை போட்டு, அதில் அட்சதை நிரப்பி, அதன் மேல் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

    கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்காகவும் இங்கே வழிபாடு செய்கிறார்கள். அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இந்த ஆலயத்தின் சுப மண்டபத்தில் வைத்து வளைகாப்பு செய்து கொள்கிறார்கள். அப்போது திரவுபதி அம்மனிடம் இருந்து பெறப்பட்ட வளையலையே, முதல் வளையலாக கருவுற்ற பெண்ணுக்கு அணிவிக்கிறார்கள்.

     இவ்வாலயத்தில் வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் பெருந்தீமிதித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தவிர கார்த்திகை தீப விழா, ஆடி கடைசி வெள்ளியில் திருவிளக்கு பூஜை, மாத பவுர்ணமி பூஜை ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து வீரராகவன் தெரு வழியாக சென்றால் ½ கிலோமீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம்.

    • தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.
    • உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். 2-ம் நாள் விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் கோமாதா பூஜை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தேனூர் விடி பாலு திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-ம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் ராஜா, நிர்வாகிகள் தனசேகரன், பொன்னையா, சுரேஷ்குமார், பாபு, காசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனூர் கவுன்சிலர்கள் சவுத்ரி நல்ல மணி திருவிடம் கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலை ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை பச்சமுத்து, பாலகிருஷ்ணாபுரம் இந்து முன்னணி மற்றும் விநாயகர் கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். சமயநல்லூர் ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில் பெண்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் வேண்டுதலை வைத்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

    • திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது.
    • 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.

    திருச்செங்கோடு:

    உலக நன்மைக்காகவும் வன்முறை ஒழியவும் சகோதரத்துவம் நிலவும் சகிப்புத்தன்மை ஓங்கவும் சர்வ மத நல்லிணக்கம் ஏற்படவும் மழை வேண்டியும் நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும் திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டமும் திருச்செங்கோடு திருவிளக்கு பூஜை விழா கமிட்டியும் திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது. இதில் 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அருணா சங்கர், அர்ஜுனன், தியாகராஜன், விசாகவேல், பரமசிவம் சாமி, லட்சுமண சாமி, மயில் முருகேசாமி, நீலமேகம், ஆசிரியர் மணி, ராஜேஷ்வரன், மீனாட்சி ரவிச்சந்திரன், ரேணுகா லட்சுமண சாமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப் பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப் பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில 14-ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. கல்வி அபிவிருத்தி, திருமண பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழி லில் நல்ல மேன்மை, நவகி ரக தோஷங்கள் விலக, குழந்தை பாக்கியம் என்பது உள்பட பல்வேறு பலன்கள் கிடைப்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டது.முன்னதாக லட்சுமி, கணபதி ஹோமம் நடந்தது. விநா யகர், பாலமுருகன், மாரி யம்மன் நித்திய சுமங்கலி கம்பம் ஆகிய வற்றுக்கு அபிஷேகம், ஆரா தனை நடந்தது. மாலையில் திரு விளக்கு பூஜை நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பூஜை வைத்து அம்மனை வழிபட்டனர்.

    நித்திய சுமங்கலி மாரி யம்மன் ராஜ மாதங்கி அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் வளா கம் முழுவதும் வேப்பிலை, வாழை, மா இலை தோர ணங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    • 308 பெண்கள் பங்கேற்றனர்
    • சிறப்பு தீபாராதனை நடந்தது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர்.

    மேலும் 308 பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    விழாவையொட்டி உற்சவர் எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கணபதி ஹோமம், வரலட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், ஆடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பூஜை நிறைவடைந்ததும் சிறுமிகள் பங்கேற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை குமார் தேன்மொழி குடும்பத்தினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி செய்திருந்தனர்.

    • ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது.
    • யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் உலக சமாதான ஆலயம் சார்பில் உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.

    பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். இதில் நிர்வாகிகள் ஆனந்தன், கேசவராஜ், சீனிவாசன், நாகராஜ் உள்பட பலர் பூஜையில் பங்கேற்றனர்.

    • 108 பெண்கள் கலந்து கொண்டனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதைதொடர்ந்து சுமங்கலி பெண்களை வரிசையாக அமர வைத்து வேதம் மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்கள் திருவிளக்கிற்கு குங்கும் அர்ச்சனை செய்தனர்.

    இதையடுத்து மங்கள மேல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த திருவிளக்கு பூஜையை காண திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காமாட்சி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டியும், இயற்கை வளங்கள் பெறவும், மழைவளம் வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.

    காலையில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலையில், உப்பு மற்றும் கலர் பவுடர்களால் ஸ்ரீகுபேர சக்கரம் வரையப்பட்டு, அதில் குத்து விளக்குவைத்தும், 450 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

    திருவண்ணாமலை ஜி.ஆர்.டி.தங்கமாளிகை மேலாளர் மூர்த்தி, சென்னை ஸ்டடி சென்டர் தமிழ்வேந்தன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து, விழாவை தொடங்கி வைத்தனர்.

    ஆரிய வைசிய சமாஜ சங்க துணை தலைவர் கே.என்.பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் என்.ரமேஷ், ஏழுமலை, செல்வன், சண்முகம், காஞ்சிபுரம் சுந்தர், திருவண்ணாமலை சிவா, விழுப்புரம் அரவிந்தன், செய்யாறு ஜெயவேலு, செஞ்சி விஜயகுமார், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கவிதா ஏழுமலை, பாக்யராஜ், கே.பி.மணி, ஆதிபராசக்தி மன்ற செவ்வாடை தொண்டர்கள் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×