என் மலர்
நீங்கள் தேடியது "திருவிளக்கு பூஜை"
- ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது
- உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறாமல் இருந்தது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 19-ந்தேதி அன்று ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் விளக்கு பூஜை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நேற்று 18 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்த திருவிளக்கு பூஜையுடன் கார்த்திகை சோமவார பிரதோஷமும் சேர்ந்து வந்தது தனி சிறப்பாக பார்க்கப்பட்டது. மேலும் 18 படிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாதரனை காட்டி சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.
- காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.
- மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் குன்றுப்பாறை-மாதேசிலிங்கம் கோவில் உள்ளது.இந்த கோவிலில் 28-ஆம் ஆண்டு ஸ்ரீ அய்யப்பன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக குன்றுப்பாறை மாதேசிலிங்கம் கோவிலில் நேற்று காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.
பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ அய்யப்பன்,ஸ்ரீ மாதேசிலிங்க சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மாதேசிலிங்க சுவாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது . மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தார்கள். சங்கரேஸ்வரி, சுப்பாராஜ் தொடங்கி வைத்தார்கள். பூஜைகளை விளக்கு பூஜை குழுவினர் பத்மாவதி தலைமையில், லட்சுமணன் சுவாமி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், சண்முகத்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய காட்சி குழுவினர் செய்தனர்.
- நாராயணசாமி கோவில் கொடைவிழா கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறில் தர்மபதி நாராயணசாமி கோவில் கொடைவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.அன்றுமுதல் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏடு வாசிப்பு, சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கினர். கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அய்யா வைகுண்டர் பூம்பல்லக்கில் பவனி வந்தார். வழிநெடுக பக்தர்கள் மாலை அணிவித்து வணங்கி சென்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
- இதை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவிலில் தை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மாரியம்மன் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாளை மாலை சக்தி அழைத்தல் மற்றும் அம்மனுக்கு கும்பம் போடுதல், 8-ந் தேதி கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி வண்டி வேடிக்கையும், 10-ந் தேதி மாரியம்மன் கோவில் திடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
11-ந் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சிறப்பிக்கும்படி கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக் கொண்டனர்.
- 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
- ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.
வல்லப விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு பால் ,தயிர், தண்ணீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நேற்று காலையில் பாலசுப்பிரமணியனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் மஹா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட காவடிகளுக்கு காவடி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை அனைவருக்கும் நீர் மோர் பாணகமும் மகா அன்னதானமும் நடைபெற்றது .விழா ஏற்பாட்டினை வல்லவ விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி திருவிளக்கு பூஜை செய்த போது எடுத்த படம்.
- கொடை விழாவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
- திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா 2நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு மாக்காப்பு பூஜை, அலங்கார பூஜை, வில்லிசை. 2-ம் நாள் காலை அபிஷேக ஆராதனை, கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். பூஜையினை திசையன்விளை அம்பிகை தாசன் ஆர். ஜி. பாலன் வழி நடத்தினார். தொடர்ந்து விஷேச புஷ்பாஞ்சலி, தீபாராகனை நடைபெற்றது. பின்னர் கனியான் கூத்து, வில்லிசை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
- காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா நடத்தப்பட்டது.
- சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. உச்சிகால பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. மாலை சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது.
- யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் உலக சமாதான ஆலயம் சார்பில் உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.
பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். இதில் நிர்வாகிகள் ஆனந்தன், கேசவராஜ், சீனிவாசன், நாகராஜ் உள்பட பலர் பூஜையில் பங்கேற்றனர்.
- இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னதாக நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 350 சுமங்கலி பெண்கள், தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.
வேத விற்பனர்கள் மந்திரங்களை உச்சரிக்க அதனைத்தொடர்ந்து சுமங்கலிகள் மந்திரங்களை உச்சரித்தவாறு குங்குமம், மஞ்சள், மலர்கள், அக்ஷதை ஆகியவற்றை கொண்டு திருவிளக்கிற்கு அர்ச்சனை செய்தனர்.
இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ஹரிராம் சேட் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.
- மேலூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
- விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலூர்
மேலூர் காந்திஜி பூங்கா அருகில் உள்ள பாலமுருகன் கோவிலின் 38-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் வழங்கினர். இன்று காலை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினரும், செயலாளர் மலைச்சாமி, நிர்வாக கமிட்டியாளர்கள் தயாநிதி சிங்காரம், கார்மேகம், சீத்தாராமன், மணி, ஹரிகிருஷ்ணன், மோகன், ராமச்சந்திரன், வைராத்தாள் ஆகியோரும் செய்திருந்தனர்.






