மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகா கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. Consecrated, Deeparathana, கும்பாபிஷேகம், தீபாராதனை
கள்ளங்காடு மகா கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கள்ளங்காடு மகா கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெரிய கள்ளங்காடு மகா கணபதி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியகள்ளங்காடு கிராமத்தில் அருள் பாலித்து வரும் மகா கணபதி திருக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல், மூன்றாம் காலயாக பூஜை, நான்காம் காலயாக பூஜை, ரக்ஷா பந்தனம், கோமாதா பூஜை, யாத்ரா தானம், மங்கல இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை காண கள்ளங்காடு, குருவிக்கரம்பை, குண்டாமரைக்காடு, நாடாகாடு, கொன்றைக்காடு, காலகம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com