search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படையல்"

    • விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, படையல் இட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு, யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.

    இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

    முன்னதாக தெத்தேரியிலிருந்து பக்தா்கள் புனித நீராடி, கம்ப விளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து வடை மாலை, வாழைத்தார், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடா்ந்து, அரிச்சந்திரா புராண நாடகம் நடந்தது.

    விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, வருகிற 9-ந் தேதி விளக்கு பூஜை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை விழா நிர்வாக குழுவினரும், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.

    • உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • வேளாங்கன்னி பேராலயம் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை.

    இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும்.

    தங்களுடைய உறவினர்களின் கல்லரைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

    ×