என் மலர்

  நீங்கள் தேடியது "Anointing"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தினமும் மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
  • விழாவின் முதல் நாளான நாளை பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம்.

  அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

  அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.

  நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7:30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

  விழாவின் முதல் நாளான நாளை பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படும். 26-ந் தேதி மீனாட்சி அலங்காரமும், 27-ந் தேதி சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் செய்யப்படும்.

  30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படும்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேண்டுவோருக்கு அருள்புரியும் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
  • புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருகோலக்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

  வேண்டுவோருக்கு வேண்டிய மாத்திரத்திலேயே அருள்புரியும் இந்த கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9ம் தேதி பூர்வாங்க பூஜை, 10ம் தேதி யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜையும் தொடங்கியது.

  இன்று காலை 4ம் கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

  தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மல்லாரி வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.

  காலை 7:10 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஓத கடத்தில் இருந்து புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

  தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

  யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர்.

  கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.

  ஏற்பாடுகளை நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பி ரமணியன் தலைமையில செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆவணி மாத வளர்பிறை சதுர்தசியினை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் ஆவணி மாத வளர்பிறை சதுர்தசியினை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

  கைலாய வாத்தியம் முழக்கத்துடன் தேவாரம் ,திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட18 வகையான வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

  அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 1 மணி அளவில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப் பட்டது.

  விழா ஏற்பாட்டினை திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகி சிவ. ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரமத்தி வேலூர் சிவனடியார்கள் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
  • 18 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

  பரமத்தி வேலூர்:

  பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

  கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

  அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன், பரமத்தி அங்காள பர மேஸ்வரி அம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், பொத்த னூர் மாரியம்மன், கொந்த

  ளம் மாரியம்மன், அய்யம்பா ளையம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பச்சையம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

  இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு பூஜைகள் நடந்தது.
  • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

  பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையத்தில் உள்ளஈஸ்வரன் கோவில்,மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,எல்லை யம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் பேட்டை மகா மாரியம்மன், வேலூர் செல்லாண்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

  அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

  அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், திருவேலீஸ்வரர் கோவில், காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், பேட்டை பகவதி அம்மன் கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில் ,சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கி ழமையன்று ஒவ்வொரு வரு டமும் பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
  • மகா மாரியம்மனுக்கு 32-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

  பரமத்திவேலூர்:

  பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கி ழமையன்று ஒவ்வொரு வரு டமும் பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

  அதே போல் இந்த வருடமும் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மகா மாரியம்மனுக்கு 32-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

  விழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால் குடங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். பிற்பகல் 12 மணிக்கு மகா மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

  அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இதில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பால்குட அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுவினர், பால்குட அபிஷேக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்திவேலூர் பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
  • சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் ஆகியோர்களுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

  பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பேட்டை மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

  இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
  • புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் அருகே புஷ்பவனம் ஸ்ரீபூர்ணாம்பிகா, ஸ்ரீபுஷ்களாம்பிகா சமேத காஞ்சியப்பர் சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 13-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகளும் மூன்று கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.

  கும்பாபிஷேகத்தன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனைகளுக்குப் பின்னர் தகட்டூர்ஞானசேகர சிவம், சபரிநாத சிவாச்சாரரியார்கள் தலைமையிலான குழுவினர் பூஜீக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமி, அம்பாள், முருகன், சப்தகன்னியர் உப்பட பரிவார சன்னதி கோயில்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிக்கும் மகா அபிஷேகமும் நடந்தது.

  பூஜை மற்றும் விழாக்களில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா, கோவில் திருப்பணி குருவினர்கள் மேரிகாந்த், அன்பழகன், சிவஞானம், செந்தில்குமார், திராவிடமணி உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிராம வாசிகளும் உபயதாரர்களும் கலந்து கொண்டனர். இரவு புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குழுவினாரின் நிகழ்ச்சி நடந்தது.

  ×