search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன்"

    • கடந்த 30-ம்தேதி திருப்பூ ருக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சாந்தியை தேடி வருகின்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 28)கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (28). இவர் ராமதாஸ்க்கு தெரியாமல் கடன் வாங்கிய நிலையில் கடந்த 30-ம்தேதி திருப்பூ ருக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீசில் ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சாந்தியை தேடி வருகின்றார்.

    • 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -

    படித்த வேலைவா ய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்கிட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் தமிழக அரசு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் ரூ.5 கோடி வரையிலான வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்து தொழில் முனைவேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் வங்கி கடன் பெற்று பயனடையும் பொருட்டு கீழ்குறிப்பிட்ட நாட்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திட்ட விளக்கவுரை மற்றும் அனைத்து திட்டங்களின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கமும், கூட்டம் நடைபெறும் இடத்தி லேயே விண்ணப்பி க்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

    இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4-ந்தேதி காலை பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், மாலை குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம், 11-ந்தேதி காலை வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்டுமன்னார்கோவில், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குமராட்சி, 18-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், புவனகிரி, மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கீரப்பாளையம், 25-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லூர், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மங்களூர் பகுதியில் கூட்டம் நடைபெறுகிறது. 

    கூட்டத்தின் போது கீழ்குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்கள் எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. கல்வித்தகுதி சான்றிதழ் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். எனவே, மகளிர் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர், ஆதிதி ராவிடர், மாற்றுதிறனாளிகள் ஆகிய அனைவரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினராக இருந்து வரும் நிலையில் சங்கத்தை அந்த கவுன்சிலில் ஆயுட்கால உறுப்பினராக மாற்றுவது என்றும், அதற்காக சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்வது என்றும், பின்னலாடை தொழில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் மின்கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என்றும், கடந்த 1½ ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் மந்தநிலை காரணமாக வங்கிகள் கடன் பெற்றவர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தொழிலை காப்பாற்ற வங்கிகள் வழங்கிய கடனை குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் இ-இன்வாய்ஸ் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஏ.எக்ஸ்.என். நிறுவனம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதேபோல் சங்க உறுப்பினர்கள் தங்களது நிறுவனங்களுக்கு காப்பீடும் செய்யும்போது அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், காப்பீடு செய்யாவிட்டால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் விளக்கமளித்தனர்.

    • கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நெசவாளர்கள் 60 பேருக்கு ரூ.30 லட்சம் கடன் வழங்கபட்டது
    • விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்

    கவுந்தப்பாடி,

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தலைவர், வாடிக்கை யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் கவுந்த ப்பா டி நெசவாளர் கூட்டு றவு சங்க உறுப்பினர்கள், க.புதூர் காஞ்சிகோவில், செந்தாம் பாளையம் கலை வாணர், தர்மபுரி திருவள்ளு வர், கவுண்ட ம்பாளையம் காமராஜர் சங்கம் மற்றும் நல்லா கவுண்டன்பாளையம் நல்லி டெக்ஸ் ஆகிய நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 60 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.30 லட்சம் கடன் வழங்க ப்ப ட்டது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்.

    கவுந்தப்பாடி கிளை மேலாளர் வேலுமணி வர வேற்றார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் தமிழ்ச்செல்வன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.  இந்நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்க மணி, மாவட்ட கவுன்சிலர் சிவ காமி சரவணன், கவுந்த ப்பாடி நெசவாளர் கூட்டு றவு சங்க தலைவர் மாதே ஸ்வரன், ஓடத்துறை திரு வேங்கடம், அய்ய ம்பாளையம் ரவிச்சந்திரன், மணல் சோமு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மேலாளர்கள், கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி விவசாயிகள் கடன் மேற்பார்வையாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி மேற்பார் வையாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நடந்தது.
    • மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார் கடன் கேட்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் பெரம்பலூர் தாலுகாவில் 16 விண்ணப்பங்களும், ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகாக்களில் தலா 12 விண்ணப்பங்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 9 விண்ணப்பங்கள் என மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.



    • போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது.
    • 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி, மேட வாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது. 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • ஜரினாபீயிடம் சலிமா ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
    • சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கமருதீன் மனைவி ஜரினாபீ (வயது51). இவரின் உறவினரான தியாகதுருகம் அன்சர் மனைவி சலிமா (வயது42) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜரினாபீ செல்போன் மூலம் சலிமாவிடம் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சலீமா, நிஷா ஆகியோர் மீது சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடன் தொல்லையால் ெரயில் முன் பாய்ந்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்தார்.
    • 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது.

    மதுரை

    மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(38) கட்டிட காண்ட்ராக்டர். இவருக்கு மாரி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தொழில் சம்பந்தமாக வாங்கிய கடனை தர முடியாத நிலையில் தவித்து வந்த இவர் பைக்காரா 7-வது ெரயில்வே பாலத்தில் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதைதொடர்ந்து ரெயில் முன் பாய்ந்த அவரை ெரயில் மோதியதில் துண்டு, துண்டாக சிதறியது 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் ெரயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.
    • வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.

    அதில் தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் 10-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளதால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.

    இந்நிலையில் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல் செய்யும் நபர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் கடும் நெருக்கடியோடு கடன் தொகை திருப்பி கேட்பதால் அவர்கள் கால அவகாசம் கேட்டு வந்தனர்.

    கால அவகாசம் தர இயலாததால் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல்தாரர்கள் இரவு பகல் முழுவதும் அங்கேயே முகாமிட்டு கடன் தொகையை திருப்பி கேட்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் கடன் வாங்கிய குடும்பத்தினர் அதிகாலையிலேயே நிதி நிறுவனங்களில் இருந்து வசூல்தாரர்கள் வந்து விடுவார்கள் என்ற பீதியில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பண்ணை வீடுகளில் தங்களது குழந்தைகளுடன் பயந்து தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.

    பின்னர் மீண்டும் நள்ளிரவிற்கு மேல் வீட்டிற்கு வரும் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் அதிகாலையிலேயே தலைமறைவாகிவிடும் சூழல் ஏற்பட்டு வருகிறது. பெற்றோர்களின் இந்த நிலைமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனையடுத்து கடந்த வாரம் அப்பகுதி பொதுமக்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து தப்பிக்கவும், கடன் தொகை செலுத்துவதற்கு ஏதுவாக எங்களுக்கு கால அவகாசம் வாங்கித் தருமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தான் வேலைக்கு செல்வதன் மூலம் போதிய வருமானம் கிடைக்கும். கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை.

    இதனால் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை ஏன் அனுப்பவில்லை என்று செல்போன் மூலம் ஆசிரியர் விளக்கம் கேட்கிறார். எனவே எங்களுக்கு 6 மாத காலம் கால அவகாசம் வேண்டும். நாங்கள் கடனை திருப்பி செலுத்தி விடுகிறோம். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிதி நிறுவனங்களிடம் இருந்து கால அவகாசம் வாங்கி கொடுப்பதோடு, கடன் வாங்கிய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.
    • மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் வேணுகோபால்.இவரது மகன் மாரிமுத்து (வயது32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு துணை செயலாளராக இருந்துள்ளார். தற்போது தொண்டாமுத்தூர் பேரூராட்சி தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இதுதவிர இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இ-சேவை மையமும் நடத்தி வந்தார்.

    32 வயதை கடந்து தனக்கு இன்னும் திருமணம் ஆகாததால் மாரிமுத்து மன வேதனை அடைந்தார். இதனால் கடந்த சில நாட்களாக இதுகுறித்து தனது தாய், தந்தையிடம் புலம்பியுள்ளார்.

    அவர்கள் மாரிமுத்துவுக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றி வந்தனர். இருந்த போதிலும் அவர் மனவருத்தத்துடனேயே காணப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.

    இதனால் மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று வழக்கம் போல இ-சேவை மையத்திற்கு மாரிமுத்து சென்று பணியாற்றினர்.

    அங்கிருந்து மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்த மாரிமுத்துவின் தாய், தந்தையினர் மாலையில் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்ததும் அவர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். வீட்டில் அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளரா என வீடு முழுவதும் சோதனையிட்டனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் மாரிமுத்து தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் தொந்தரவும் செய்ய வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

    அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இவருக்கு அதிகளவில் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற முயற்சித்ததாகவும், ஆனால் கடன் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதனால் அவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொ டக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாமிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புடன், மாற்றுத் திறனாளிகளுக்கான  கடன் மற்றும் குறைந்த வட்டியில் உதவிக் கடன். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன்கார்டு நதல், நிலவுடமை தொடர்பான   கணினி சிட்டா, பயிர்சாகுபடி தொடர்பான அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ  ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று உரிய பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உறுப்பினராக சேர்ந்து, உரிய ஆவணங்களுடன், மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் ஏதேனும் விபரங்கள் தேவைப்படுவோர் துணைப்பதிவாளர், முதன்மை வருவாய் அலுவலரை 94899 27003, பொது மேலாளரை 94899 27001 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×