search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Service"

    • சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன.
    • இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547) சனிக்கிழமை களில் காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணரா ஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங் கண்ணி சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்த டையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலம் தெரிவித்துள்ளது.

    • இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது‌ குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்:

    ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கி உபகரணங்களை ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால் ஏற்பாட்டில் மத்திய மண்டல தலைவர் செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ஆகியோர் முன்னி லையில் ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:- இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பணி மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வாகனம் மற்றும் உபக ரணங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ, பவுண்டேஷன் மற்றும் வங்கிக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். பாலாஜி நாதன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர். வரதராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிராந்திய தலைவர்கள் சீனிவாச யோகானந்த், கிருஷ்ண மூர்த்தி, பிராந்திய மேலா ளர்கள் ராதாகிருஷ்ணன், சிவராமன், கிளை மேலாளர் அரவிந்த், வளர்ச்சி அலுவலர் நவராஜா, ரெட்கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முகமதுரபி, ஜெயக்குமார், முனைவர் பிரகதீஷ், தஞ்சை ராமதாஸ், குருநாதன், அம்மாபேட்டை துணை கிளை சேர்மன் தர்ம புருஷோத்தமன், சுவாமி மலை துணை கிளை சேர்மன் இராகவ நாராயணன், பூதலூர் துணை கிளை சேர்மன் ரவிசங்கர், ஒரத்தநாடு துணை கிளை சேர்மன் நாராயணசாமி, சேதுபாவாசத்திரம் துணை கிளை தலைவர் ஷேக் அப்துல்லா, டாக்டர் சிங்காரவேலு, ஆர்க்கிடெக்ட் அருண் பாலாஜி, முனைவர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

    • விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
    • சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னி வீரம்பாளையம் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் கிராமிய சேவை திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல துணைத் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, பேராசிரியர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குரு ரங்கதுரை, வி.பி.எம். நந்தகுமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம் திட்ட விளக்க உரையாற்றினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல தலைவர் பச்சையப்பன், டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் காணொளி காட்சி வாயிலாக கிராமிய சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் நோயற்ற வாழ்வு கல்வியில் மேன்மை, சுற்றுப்புற சுகாதாரம், முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு, குடும்ப அமைதி, கர்மயோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு ,தூய்மையும் பசுமையும் மிக்க ஆரோக்கியமான அமைதியான கிராமம் என இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார் .

    சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காரமடை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • வில்லியனூரில் உள்ள பொது சேவை மையத்தை நாடவேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்பட்டனர்.
    • சிவா பொது சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சுல்தா ன்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதார் அட்டையில் விலாசம் மாற்றுதல், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட ஆன்–லைன் பரிவர்த்தனைகளுக்கு வில்லியனூரில் உள்ள பொது சேவை மையத்தை நாடவேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்பட்டனர்.

    சுல்தான்பேட்டை மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் புதிய பொது சேவை மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பொது சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், சுல்தான்பேட்டை பள்ளிவசால் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பெருஞ்சேரி கிராமத்திலேயே ஆஸ்பத்திரி அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.
    • மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி தெற்குத் தெருவை சேர்ந்த சேஷாசலம் என்பவரின் பேரன்கள் கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர்.

    இவர்களில் கண்ணா லண்டனிலும், டாக்டர் ராமகிருஷ்ணன் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது சேவை செய்ய எண்ணிய கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணனுடன் ஆலோசித்து பெருஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் தற்போது, மருத்துவ அவசர தேவைகளுக்கு 7 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மங்கைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்தனர்.

    இதையடுத்து பெருஞ்சேரி கிராமத்திலேயே மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.

    இதற்காக தங்கள் தாத்தா தனசேஷன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்தனர். தாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருப்பதால், இந்தியாவில் வசிக்கும் தனசேஷனின் பேத்தி வனிதா ஜெயராமனை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராகவும், உறவினர்கள் ராஜதிலக், சுரேகா, தீபக் ஆகியோரை நிர்வாகிகளாகவும் நியமித்து, தங்கள் பூர்வீக வீட்டையே மருத்துவமனையாக மாற்றி உருவாக்கியுள்ளனர்.

    இந்த மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து, ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளனர்.

    எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவமனை திறப்பு விழாவில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா கலந்துகொண்டு, கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் வட்டாட்சியர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராமத்தை விட்டுச் சென்று பல வருடங்கள் கடந்த பின்னரும், சொந்த ஊரை மறக்காத கண்ணா, ராமகிருஷ்ணன் குடும்பத்தினரை கிராமமக்கள் மனமார வாழ்த்தினர்.

    • திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.
    • அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரெயில் சேவைகள் வருகிற 29-ந்தேதி இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாக இருந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அகஸ்தியம்பள்ளி.

    இங்கிருந்து அண்டை நாடான இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கடல் பாதை வழியாகும். மேலும் பாக் ஜலச்சந்தி என்று சொல்லக்கூடிய பாக் நீர் இணையும் இடம் இங்கு தான் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அகத்தியன் பள்ளிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 6.45 மணிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கும் திருத்துறைப்பூண்டியில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும்.

    மறுமார்க்கத்தில் அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 7.55 மணிக்கும் மாலை 4.40 மணிக்கும் புறப்படும்.

    வெள்ளிக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கும் மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவைகள் திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவைக்கு திருத்–துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இணைப்பாக அமையும். எனவே பொதுமக்கள் இந்த ரெயில் சேவை–களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னை பாத்திமா கல்லூரியின் உணவக மேலாண்மை மாணவர்கள் கத்தார் நாட்டில் சேவை புரிந்து திரும்பியுள்ளனர்.
    • இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது.

    மதுரை

    கத்தார் நாட்டில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் விருந்தோம்பல் துறை மாணவர்கள் சென்றனர்.

    அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் கத்தாரில் தங்கி சேவை புரிந்து திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது. இதில் 80 மாணவர்களுடன் துறைத் தலைவர் பால்ராஜ், உதவிப்பேராசிரியர்கள் கங்காதரன், ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர்.

    பயிற்சியில் பங்கேற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 கல்லூரிகளுள் அன்னை பாத்திமா கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு பாராட்டிற்குரியதாக இருந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்றனர் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
    • முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.

    சபைகுரு அருள்தனராஜ் தலைமை தாங்கினார். பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களை இசையுடன் பாடினர். மதுரை -ராமநாதபுர முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார். இதில் உதவி குருக்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
    • மருத்துவ சேவைகளை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கத்தார் ஜமாத் அமைப்பு சார்பாக நாகையில் இலவசசிறப்பு மருத்துவ முகாம் நடை–பெற்றது.முகாமை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    குறிப்பாக பேச்சுதிறன் குறைபாடு, பாத நரம்பியல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவையை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை தந்து இருந்தனர்.

    மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.

    மருத்துவ முகாமிற்கு கத்தார் ஜமாத் நாகை மாவட்ட தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட துணைச் செயலாளருமான நாகை சாதிக் தலைமை வகித்தார்.

    இதில் பொருளாளர் அப்துல் ரகுமான், செயலாளர் சையது யூசுப், துணைச் செயலாளர் கரீம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
    • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    தமிழக அரசின் அவ்வையார் விருது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற டிச 10க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உலக மகளிர் தின விழா 8.3.2023-ம் அன்று நடைபெறவுள்ளது.

    இவ்விழாவின் போது பெண்களின் முன்னே ற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் தொடர்பான இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்விருதுகள் தொடர்பான கூடுதல் விபரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்ப படிவங்கள் ஆகியவை திருவாரூர் மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் இணையதளம் வாயிலாக 10.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டு க்கொண்டுள்ளார்.

    • கயிலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
    • தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில் அமைந்துள்ளதால் வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றது.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டது.மாமன்னன் ராஜராஜ சோழனின் மனைவி சோழமாதேவி தமது மன்னனின் வெற்றிகளுக்காகவும் தீர்க்காயுளுக்காகவும் வேண்டி மேற்கொண்ட ஆன்மீகச் சேவைப் பிரார்த்தனையின் பொருட்டு திருவையாறு ஐயாறப்பர் கோவில் வடக்குப் பிரகாரத்தில் கயிலாச நாதர் கோயிலைக் கட்டி, குடமுழுக்கு முதலிய திருப்பணிகளையும் செய்து வைத்துள்ளார். மேலும், பொன், பொருள் மற்றும் நிலம் முதலிய நிவந்தங்களையும் அளித்தார்.

    இதன்பொருட்டு தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஐயாறப்பர் கோயில் வடகயிலாயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    சதயவிழாவை முன்னிட்டு வடகயிலை கயிலாச நாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    சிவனடியார் பழனிநாதன் தலைமையிலான வடகயிலைச் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் திருவாசகம் முற்றோதல் வழிபாடும், திருமுறைகள் பாடிய அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் ஞானசம்மந்தர் ஆகிய நான்கு சைவசமயக் குரவர்களின் திருவுருவப்பட வீதிஉலா நடந்தது.

    அப்பர் காட்சி கண்ட தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில்அ மைந்துள்ளதால் இக் கயிலாசநாதர் கோயில் மற்றும் நந்தவனப் பகுதி வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வடகயிலைச் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தார்கள்.

    • உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • வேளாங்கன்னி பேராலயம் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை.

    இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும்.

    தங்களுடைய உறவினர்களின் கல்லரைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

    ×