என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுல்தான்பேட்டையில் புதிய பொது சேவை மையம்
    X

    புதிய பொது சேவை மையம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்த காட்சி.

    சுல்தான்பேட்டையில் புதிய பொது சேவை மையம்

    • வில்லியனூரில் உள்ள பொது சேவை மையத்தை நாடவேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்பட்டனர்.
    • சிவா பொது சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சுல்தா ன்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதார் அட்டையில் விலாசம் மாற்றுதல், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட ஆன்–லைன் பரிவர்த்தனைகளுக்கு வில்லியனூரில் உள்ள பொது சேவை மையத்தை நாடவேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்பட்டனர்.

    சுல்தான்பேட்டை மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் புதிய பொது சேவை மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பொது சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், சுல்தான்பேட்டை பள்ளிவசால் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×