search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் ஒப்படைப்பு
    X

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் ஒப்படைப்பு

    • இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது‌ குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்:

    ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கி உபகரணங்களை ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால் ஏற்பாட்டில் மத்திய மண்டல தலைவர் செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ஆகியோர் முன்னி லையில் ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:- இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பணி மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வாகனம் மற்றும் உபக ரணங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ, பவுண்டேஷன் மற்றும் வங்கிக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். பாலாஜி நாதன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர். வரதராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிராந்திய தலைவர்கள் சீனிவாச யோகானந்த், கிருஷ்ண மூர்த்தி, பிராந்திய மேலா ளர்கள் ராதாகிருஷ்ணன், சிவராமன், கிளை மேலாளர் அரவிந்த், வளர்ச்சி அலுவலர் நவராஜா, ரெட்கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முகமதுரபி, ஜெயக்குமார், முனைவர் பிரகதீஷ், தஞ்சை ராமதாஸ், குருநாதன், அம்மாபேட்டை துணை கிளை சேர்மன் தர்ம புருஷோத்தமன், சுவாமி மலை துணை கிளை சேர்மன் இராகவ நாராயணன், பூதலூர் துணை கிளை சேர்மன் ரவிசங்கர், ஒரத்தநாடு துணை கிளை சேர்மன் நாராயணசாமி, சேதுபாவாசத்திரம் துணை கிளை தலைவர் ஷேக் அப்துல்லா, டாக்டர் சிங்காரவேலு, ஆர்க்கிடெக்ட் அருண் பாலாஜி, முனைவர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

    Next Story
    ×