என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "men"
- சிறந்த மருத்துவர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்படும்.
- ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.3,100 வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருகிற 22-ந் தேதி ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிறந்த மருத்துவர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்படும். கத்தியின்றி, ரத்தமின்றி பக்க விளைவு இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.3,100 வழங்கப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிக்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.
- திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
- விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையாசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர். பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது.
இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் கலைந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவர்.
இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொர்க்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, குண்ணனம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.
ஜாதி மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக கறுப்பு நிறத்தில் உள்ள வெள்ளாடுகளை வளர்த்து நேர்த்திகடனாக செலுத்துவது வழக்கமாக உள்ளது.
- ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.3100 வழங்கப்படுகிறது.
- இது தொடர்பான விவரங்களை 97885-47625 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
திருப்பூர் :
கோவை, திருப்பூர் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருகிற 9-ந் தேதி ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்பட உள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்கவிளைவுகள் இன்றி செய்யப்படும். இந்த சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.3100 வழங்கப்படுகிறது.
இந்த சிகிச்சை மேற்கொள்வதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ அல்லது கடின உழைப்பிற்கோ தடை ஏதும் இல்லை. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பல மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இந்த சிகிச்சை முறையினை ஏற்று பயன்பெற தகுதிவாய்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பான விவரங்களை 97885-47625 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.
- அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்படி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் விஜயகுமார் அறிவுரைப்படி, தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதலில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வியை ஒவ்வொரு கிராமங்களாக சென்று வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வட்டாரத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள இயலாத உடல்நிலை அல்லது விருப்பப்படாத சூழலில் கணவனே தாமாக முன்வந்து குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றது.
இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறும்போது:-
ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு மிகவும் எளிய சிகிச்சை முறை மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.
இதனால், வாழ்வில் எவ்வித தடையுமில்லை, பக்கவிளைவுகள் ஏதுமில்லை, எப்போதும் போல் கடின உழைப்பை மேற்கொள்ளலாம், சிக்கனமான சிகிச்சை என்பதால் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது என்றார்.
- முகாமில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
- மருத்துவ சேவைகளை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கத்தார் ஜமாத் அமைப்பு சார்பாக நாகையில் இலவசசிறப்பு மருத்துவ முகாம் நடை–பெற்றது.முகாமை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
குறிப்பாக பேச்சுதிறன் குறைபாடு, பாத நரம்பியல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவையை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை தந்து இருந்தனர்.
மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.
மருத்துவ முகாமிற்கு கத்தார் ஜமாத் நாகை மாவட்ட தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட துணைச் செயலாளருமான நாகை சாதிக் தலைமை வகித்தார்.
இதில் பொருளாளர் அப்துல் ரகுமான், செயலாளர் சையது யூசுப், துணைச் செயலாளர் கரீம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்–பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பாபநாசம்:
தமிழக முதல்-அமைச்சர் அறிவுரைப்படி, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.
அதன் அங்கமாக, பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்–பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- அரசு பஸ்களில் பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து கொள்கின்றனர்.
- ஏதேனும் புகார் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் :
அரசு பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும்.முண்டியடித்து பஸ்சுக்குள் ஏறி நிற்கும் பயணிகள் சீட் கிடைக்காவிடினும், நெரிசலில் சிக்கியவாறு பயணிக்கின்றனர். அதேசமயம் சில ஆண்கள், பெண்களுக்கான சீட்டில் 'ஹாயாக' அமர்ந்து பயணிப்பதும், முன்புற படிக்கட்டில் நின்று கொண்டு சாகசத்தில் ஈடுபடுவதையும் வழக்கமாகக்கொண்டுள்ளனர்.இதனால் பெண்கள், பஸ்சில் ஏறி, இறங்குவதை சிரமமாக கருதுகின்றனர்.எனவேபெண்களுக்கான சீட்டில் ஆண்கள் அமர்ந்து ஏதேனும் புகார் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த சில கண்டக்டர்கள் கூறியதாவது:-
அரசு பஸ்களில் பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.ஆண்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பினால் பிரச்னை ஏற்படுகிறது. பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமரக்கூடாது என்பதை, அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டும் வருகிறது.ஆண்களை எழச்செய்து பெண்களை அமரச்செய்யவே முற்படுகிறோம் என்றனர்.
இந்தியாவில் முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 88.6 சதவீத குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் பிறந்துள்ளன. முந்தைய சர்வேயில் இது 78.9 சதவீதமாக இருந்தது. இது இந்தியா ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறப்பதை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.
* இந்தியாவில் முதல்முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்கிற அளவுக்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியா, வளர்ந்த நாடுகளுடன் சேருகிறது.
* பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, அருணாசலபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளன.
* குழந்தைகள் பிறப்பை பொறுத்தவரையில், 2015-16-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் என இருந்தது. இது 2019-20-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவுக்கு அதிகரித்தது.

* மொத்த கருத்தரிப்பு விகிதம், ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்கிற அளவை எட்டி உள்ளது. முந்தைய சர்வேயில் இது 2.2 ஆக இருந்து இருக்கிறது. இது பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் குழந்தை பெறுகின்றனர், குடும்பக்கட்டுப்பாடு, சற்றே தாமதமாக திருமணம் செய்தல் போன்ற அறிவினை பெண்கள் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.
* குழந்தைகள் பிறப்பு பதிவை பொறுத்தமட்டில் 5 வயது வரையில் பதிவு செய்வது 89.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய சர்வேயில் இது 79.7 சதவீதம் ஆகும்.
* 41 சதவீத குடும்பங்களில் குறைந்தது ஒருவராது சுகாதார காப்பீடு செய்துள்ளனர். முந்தைய சர்வேயில் இது 28.7 சதவீதமாக இருந்துள்ளது.
* தற்போது திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை (கருத்தடை முறைகள்) பயன்படுத்துகின்றனர்.
* நாட்டில் தற்போது திருமணமான 15-49 வயது பெண்களின் குடும்ப கட்டுப்பாட்டு தேவை 9.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2015-16-ல் 12.9 சதவீதமாக இருந்துள்ளது.
* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கடந்த சர்வேயில் இருந்து இந்த சர்வேயில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.
அதுவும் திருமணம் ஆன ஆண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நமக்கு தான் கல்யாணம், குழந்தை, என்றாகிவிட்டதே என்று சலிப்புடனேயே இருப்பார்கள். நாம் ஏன் தோற்றத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்று நினைத்தீர்களேயானால், நீங்கள் “உற்சாகமில்லா மனநிலை” என்ற படிக்கட்டில் ஏற ஆரம்பித்து விட்டீர்கள், இல்லை, இல்லை, இறங்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். வாழ்க்கை தொடங்குவதே திருமணத்திற்கு பின்பு தான் என்பதை உணருங்கள். உங்கள் செல்ல குழந்தை “எனது அப்பா” என்று நண்பர்களிடமும், உங்கள் அன்பு மனைவி “எனது கணவர்” என்று உற்றார், உறவினர்களிடமும் அறிமுகம் செய்வதில் எப்போதும் ஆனந்தம் அடைவார்கள். அப்போது நீங்கள் பார்க்க நன்றாக இருந்தால் தானே அவர்களுக்கும் பெருமை.
“நீங்கள் சொல்வதை பார்த்தால் நானும் சிலரை போல பணத்தை அழகு நிலையங்களில் செலவு செய்யவேண்டுமா? காசை கரியாக கரைக்கணுமா?” என்று கேட்பீர்களேயானால் அதுவல்ல நான் கூற நினைப்பது. சாதாரணமாக முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் என்று ஆரம்பித்து உங்களால் முடிந்ததை, இயன்றதை மாதம் தோறும் தவறாமல் செய்துகொள்ளுங்கள். இதை செலவு என்று ஒருபோதும் நினைக்காதீர், முதலீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளியுங்கள். ஆம், எப்பொழுதும் சிடுசிடு என்று இருப்பவர்களை யார் தான் ரசிப்பார், சொல்லுங்கள்? இதனால் உங்கள் தன்னம்பிக்கை மட்டுமல்ல செயல்திறனும் கூடும். உங்கள் மனைவி மக்களும் பெருமை கொள்வர்.
ஆண் அலங்காரத்தில் அடுத்த முக்கிய பிரச்சினை தொந்தி. திருமணமான பின்பு ஆண்கள் விளையாட்டு, உடற்பயிற்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலை, வேலை என்று அலைவார்கள். நீரிழிவுநோய், ரத்தகொதிப்பு என்று வந்த பின்பு தான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். ஏன் அதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டும்?. “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என்று திருமூலர் கூற்றிற்கேற்ப தினமும் குறைந்தது ஒரு முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்து நீங்கள் உடல்நலத்துடனும், மனநலத்துடனும் மட்டுமின்றி தொந்தி இல்லா புற அழகுடனும் இருக்கலாமே.
அடுத்து உடல் துர்நாற்றம். புறஅழகை காக்க நம் மேல் எந்தவித துர்நாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். தினமும் உண்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தினமும் குளிப்பது. வெயில் காலங்களில் அவசியம் ஏற்பட்டால் இருமுறை குளிப்பதும் தப்பில்லை. அதேபோல் வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இருமுறை பல்விளக்குதல், உணவு உண்ட பின்பு, வாய் கொப்பளித்தல், ஏலக்காய் சாப்பிடுதல் என்று சில செயல்களால் அதை தவிர்க்கலாம்.
“கூழ் ஆனாலும் குளித்து குடி, கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு” என்று பழமொழிக்கேற்ப ஆடைகளை துவைத்து அணியவேண்டும். ஆடையின் நிறம் மற்றும் அளவு நமக்கு தகுந்தாற் போல் பார்த்து கொள்வது முக்கியம். பொத்தான்கள் இல்லாமல் அணிவது, கிழிந்த ஆடைகளை அணிவது என்று இல்லாமல் நாம் அதனை உடனுக்குடன் சரி செய்து அணிதல் வேண்டும். வெயில் காலங்களில் மட்டுமின்றி முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிவது உடல் நலத்திற்கும் நல்லது, பார்க்கவும் நன்றாக இருக்கும். இதை நம்பி இருக்கும் நெசவாளர்களும் மகிழ்வர்.
புற அழகில், நாம் நமது தனிப்பட்ட சுகாதாரத்தை தொடர்ந்து பேணுதல் மிக முக்கியம். நகம் வெட்டுதல், முடி வாருதல், முகம் கழுவுதல் என்று நம்மை நாமே கவனித்து செய்துகொள்ள வேண்டும். காலணிகளுக்கும் முக்கியத்துவம் தந்து கருப்பு பூச்சு அணிந்து செல்ல வேண்டும்.
எனது நண்பர் ஒருவர், “பல மேடை பேச்சுகளை கேட்டும், நம்பிக்கை தரும் நூல்களை படித்தும் கிடைக்காத தன்னம்பிக்கை, முடிவெட்டி, சவரம் செய்த பின்பு கண்ணாடியை பார்க்கும் போது கிடைக்கிறது. அதற்கு அந்த சவரதொழிலாளிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்பார். உங்கள் புற அழகை பேணுவதால் உங்கள் தனித்துவம் மேம்படும் என்பதை மறவாதீர். நேர்காணலில், பணி இடங்களில் வெற்றி பெற, வாடிக்கையாளரிடம் நன்மதிப்பை பெற என்று மட்டும் இல்லாமல் உங்களுக்குள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் நாள் முழுக்க பெருக்கெடுத்து ஓடவைக்கும் வித்தை இது என்பதையும் மறவாதீர். தினமும் சிலநிமிடம் கண்ணாடி முன்பு நின்று உங்களை நீங்களே பார்த்து ரசியுங்கள், உங்களுக்கு நீங்களே முதல் ரசிகனாய்.
கமலேஷ் சுப்பிரமணியம்
* பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணெய் வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்துவது தான். ஜெல் பயன்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.
* முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணெய் அல்லது தூய பாதாம் எண்ணெயை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.
* கணினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெள்ளரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள். மாறாக பயன்படுத்திய டீ பேக்-களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும்.
* பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கருத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.
* ஆண்களின் சருமத்திற்கும் ஈரபதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வறண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும். அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.