search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curry feast"

    செக்கானூரணி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது.
    திருமங்கலம் 

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில்  கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றுவருகின்றனர்.  விழாவில் பலியிடப்படு வதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை தொடங்கியது.   சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 250 மூடை அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது.

    இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு கறி விருந்து  வழங்கப்பட்டது. 

    இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள்.
     
    கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்காம்பட்டி பெரு மாள் கோவில்பட்டி குன்னம்பட்டி, கரடிக்க ல், மாவிலிபட்டி, செக்கா னூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது.  குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு  செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×