என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தையின்மை"

    • நீர்க்கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.
    • மாதவிடாயும், நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

    பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் கருப்பை நீர்கட்டி பிரச்சனையும் ஒன்று. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் உருவாவதையே நீர்க்கட்டி என்கிறோம். இதை பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இந்த நீர்க்கட்டிகளும் ஒரு காரணம் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயும் இந்த நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இந்த கர்பப்பை நீர்க்கட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கும்.

    கர்பப்பை நீர்க்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

    கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். பெரும்பாலானோருக்கு ஏற்படும் அறிகுறி சரியாக மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது தான். அதாவது முறையற்ற பீரியட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். கர்பப்பை நீர்க்கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.

    ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால் பெண்களுக்கு முகத்தில் ரோமம் வளரும். பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறையும். முடிகொட்டும் பிரச்சினை ஏற்படும். குரலில் வேறுபாடு ஏற்படுகின்றது. முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. உடல் எடை அதிகரிக்கின்றது. மனஅழுத்தம் ஏற்படும், மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது.

    இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை சரி செய்வதற்கு இந்த பதிவில் பெண்கள் என்னென்ன உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும் என்று இனி பார்க்கலாம்.

    வெந்தயம்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். இதை தடுக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். அதாவது வெந்தயத்தை ஒரு நாள் முன்பு இரவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடவேண்டும். மேலும் மதியம் உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும் சாப்பிட வேண்டும். வெந்தயத்தை சாப்பிடும் பொழுது இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.

    துளசி:

    கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்கள் துளசி இலையை சாப்பிட வேண்டும். நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் என்று அழைக்கப்படும் ஆண் ஹார்மோன் அதிகம் சுரக்கும். எட்டு துளசி இலைகளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவதால் இந்த துளசி ஆன்றோஜென் ஹார்மோன் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

    ஆளி விதைகள்:

    ஆளி விதைகளையும் இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம். ஆளி விதைகளில் ஒமேகா சத்துக்கள் உள்ளது. மேலும் புரதச்சத்துக்களும் நிரம்பி உள்ளது. இதனால் இந்த ஆளி விதைகள் உடலில் உள்ள குளுக்கோஸ் பயன்பாட்டிற்கு உதவுகின்றது. ஆளி விதைகளை பொடி செய்து நீரில் கலந்தோ இல்லது பழச்சாறில் கழந்தோ குடிக்கலாம். இதனால் உடல் பருமனும் குறைகின்றது.

    லவங்கப் பட்டை:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் லவங்கப் பட்டையையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். லவங்கப் பட்டையை பொடி செய்து காலையில் குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிது கலந்து குடிக்கலாம். அல்லது தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம். லவங்கப் பட்டையும் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது. லவங்கப் பட்டையையும் கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம்.

    பாகற்காய்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் கசப்பு மிகுந்த பாகற்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை வாரத்தில் ஐந்து முறை சமைத்து உண்ண வேண்டும். பாகற்காயை சாப்பிடுவதால் இன்சுலின் அளவு கட்டுக்குள் வருகின்றது. இன்சுலின் கட்டுக்குள் இருப்பதால் ஆன்றோஜென் ஹார்மோன் அளவும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

    நெல்லிக்காய்:

    கர்பப்பை நீர்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காய் உடலில் இன்சுலின் அளவு சுர்ப்பதை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. நெல்லிக்காய் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இன்சுலின் அளவு குறைவதோடு உடல் எடையும் குறைகின்றது.

    தேன்:

    கர்பப்பை நீர்ககட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தேனை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்தால் கர்பப்பை நீர்க்கட்டிகள் தானாக கரைந்து விடுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் தேனையும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் கர்பப்பை நீர்க்கட்டி கரைந்து விடும்.

    உளுந்து:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் உளுந்தை தினசரி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து சாதத்தை சாப்பிடுவது ஹார்மோன்களை சீராக்கி பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்சினையை சரிசெய்ய உதவுகின்றது. மேலும் பூண்டு குழம்பு, எள்ளுத் துவையல் போன்றவற்றை சாப்பிடுவதால் ஹார்மோன்கள் சீராக்கப்பட்டு பிசிஓடி பிரச்சினை சரி செய்யப்படுகின்றது. சூடான சாதத்தில் வெந்தயப் பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு சாப்பிடுவது நல்லது.

    கற்றாழை:

    மாதவிடாய் காலத்தில் வயிறு வலி அதிகம் உள்ள பெண்கள் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குறைவதோடு கர்பப்பை நீர்கட்டிகள் உருவாமல் தடுக்கப்படுகின்றது.

    சின்ன வெங்காயம்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் சிறிய வெங்காயத்தை உணவில் அதிகம் சேரத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் 50 கிராம் அளவு சிறிய வெங்காயத்தை சேரத்துக் கொள்வதால் பிசிஓடி பிரச்சினை சரியாகின்றது.

    கீரை வகைகள்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தினமும் ஏதாவதொரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கை கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் சமைத்து சாப்பிட வேண்டும். மகப்பேறுக்கு ஏங்கும் பெண்களாக நீங்கள் இருந்தால் மேற்சொன்ன கிரைகளை பசு நெய் மற்றும் பாசிப்பயிறு கலந்து சாப்பிட வேண்டும்.

    முருங்கை :

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை குறைக்க முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதைகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசின், சாரைப் பருப்பு இவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகள்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் ஓட்ஸ், திணை, முளைக்கீரை போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. உருளைக்கிழங்கு, வெள்ளை சர்க்கரை, அரிசி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

    • வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார்.
    • பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

    108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக விளங்கும் மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில். காஞ்சிபுரம் மாவட்டம் உலக வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் 63 வது தேசமாக விளங்கும் தலசயன பெருமாள் கோவில்.

    சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிபி 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களில் ஒருவரான பரங்குசண் என்கிற மன்னன் ஆகம விதிப்படி இக்கோயிலைக் கட்டி பெருமாளை வழிபட்டு வந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாலயத்தின் மூலவராகத் தலசயனப் பெருமாள் படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாராக நிலமங்கை தாயாரும் காட்சி அளித்து வருகிறார். இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இத்தலம் 12 ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் ஆதரித்த தலமாகக் கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக்குளத்தில் மாசி மகத்தன்று தல சயன பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.

    மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி இல்லாமல் படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும், சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும், திருமணத் தடைகள் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும், குழந்தையின்மை நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


    பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் தல விருட்சமாகப் புன்னை மரமும், தல தீர்த்தமாகப் புண்டரீக புஷ்கரணி தீர்த்தமும் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்களால் மங்களா சாசனம் பாடப்பட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது.

    • ஆண் கருவுறாமை அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம்.
    • பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்றுகள் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    கருவுறாமை என்பது ஒரு ஜோடி பாதுகாப்பின்றி ஒரு வருடத்திற்குப் பிறகு கருத்தரிக்க இயலாமை என வரையறுக்கப்படுகிறது. ஆண் மலட்டுத்தன்மை என்பது ஒரு ஆண், ஒரு பெண் துணையுடன் கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும் உடல் ரீதியான பிரச்சினையால் அவதிப்படுவதைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், பரம்பரை கோளாறுகள், விரையைச் சுற்றியுள்ள விரிந்த நரம்புகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது விந்தணுக்களில் இருந்து விந்தணுக்கள் செல்வதைத் தடுக்கும் நிலை போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் கருவுறாமைக்கு பங்களிக்கும் சில சந்தர்ப்பங்கள் உள்ளன.

    ஆண் கருவுறாமை அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் கவனிக்க வேண்டிய சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன

    ஹார்மோன் சமநிலையின்மை: டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் சமநிலையின்மை விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.

    சில மருந்துகள் விந்தணு உற்பத்தியைக் குறைக்கலாம்.

    மது, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு: இவை அனைத்தும் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம்.

    பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்றுகள் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சில மரபணு குறைபாடுகள் விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.

    வயிறு அல்லது இடுப்பு பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் விந்து வழிப்பாதையில் அடைப்பை ஏற்படுத்தலாம்.

    விந்து வழிப்பாதையில் உள்ள சில பிறவி குறைபாடுகள் விந்தணுக்கள் வெளியேறுவதைத் தடுக்கலாம்.

    ஆண்கள் வயதாகும்போது, விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் குறையலாம்.

    வெப்பம், கதிர்வீச்சு மற்றும் சில வேதிப்பொருட்களுக்கு வெளிப்படுவது விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம்.

    நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில உடல்நலப் பிரச்சினைகள் ஆண் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

    உங்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது அதைப் பற்றிய கேள்விகள் இருந்தாலோ தனியாக உணர வேண்டாம். மருத்துவ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் மூலம் பெற்றோரின் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க வாய்ப்புகள் உள்ளன, எனவே உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் ஒரு நிபுணரை அணுக பயப்பட வேண்டாம்.

    • தைராய்டு சுரப்பி ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும்.
    • கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வளவு பேருக்கு இந்த தைராய்டு பிரச்சனை இருக்கும்? தைராய்டு பிரச்சனை குழந்தையின்மைக்கு வழி வகுக்குமா?

    பொதுவாக குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிற 15 சதவீதம் பெண்களில், கிட்டத்தட்ட 6 முதல் 22 சதவீதம் வரையிலான பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும்.


    தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீதம் பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். ஒருவேளை அவர்கள் கருத்தரித்தால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு ஹார்மோன் பரிசோதனை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    தைராய்டு தாக்கம் அனைத்து செல்களையும் பாதிப்பதால் கண்டிப்பாக குழந்தை பேறுக்கு தைராய்டு பரிசோதனை மிக முக்கியமானதாகும்.


    தைராய்டு சுரப்பி என்பது ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இணைக்கப்பட்ட 2 மடல்களை கொண்டுள்ளது. அந்த தைராய்டு சுரப்பியில் இருந்துதான் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது.

    இந்த தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சினைப்பையிலும் செயல்பாடுகளை ஊக்குவித்து கருமுட்டைகள் முதிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது.

    கருமுட்டைகளின் மேல் கிரானுலோசா என்ற செல் இருக்கும். அந்த கிரானுலோசா செல்கள்தான் கருமுட்டையின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது. அதன் மூலமாகத்தான் அனைத்து ஹார்மோன்களும் அந்த கருமுட்டையின் செயல்பாடுகளை ஊக்குவித்து முட்டையின் வளர்ச்சி, முட்டையின் முதிர்ச்சி ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.

    இதற்காக கிரானுலோசா செல்கள் மற்றும் கருமுட்டையை சுற்றியுள்ள அனைத்து செல்களிலும் தைராய்டு ஏற்பி காணப்படும். இந்த தைராய்டு சுரப்பியானது அந்தந்த செல்களில், அதனுடைய செயல்பாடுகளை ஊக்குவித்து அந்த கருமுட்டைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கும் பணிகளை செய்கிறது.

    எனவே தைராய்டு குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருமுட்டைகளை சுற்றியுள்ள செல்களில் இருக்கும் தைராய்டு சுரப்பியில் சரியான செயல்பாடு இருக்காது. இதனால் கருமுட்டைகளின் வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவை சீராக அமையாது.


    தைராய்டு பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? அதை எப்படி கணக்கிடுவது?

    குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

    இந்த தைராய்டு பரிசோதனையில் உங்களுக்கு இருக்கும் தைராய்டு அளவானது டி.எஸ்.எச். (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்) என்ற வகையில் கணக்கிடப்படுகிறது.

    இந்த டி.எஸ்.எச். அளவானது குறிப்பாக எல்லா பெண்களுக்கும் 3.5 ஆக இருக்கிறது. இது சரியான அளவுதான் என்பார்கள்.

    ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு இந்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் உயர் நிலையை கணக்கிடுவோம். ஏனென்றால் டி.எஸ்.எச். அளவானது 3 முதல் 3.5 வரை இருக்கும் பெண்களுக்கு கூட இந்த குறைபாடுகளால் கருமுட்டைகளின் தரம், கருமுட்டைகளின் கருத்தரிக்கும் தன்மை ஆகியவை குறைவாகிறது.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களில் தைராய்டு பிரச்சனை உள்ள 20 சதவீதம் பெண்களுக்கு தைராய்டு அளவு குறைவாக இருப்பதை இந்த வகையில் தான் நாம் கண்டுபிடிக்க முடியும்.

    கருமுட்டை வளர்ச்சிக்கான ஹார்மோன்களில் ஒன்றான கோனோ டோட்ரோபின் மூளையில் உள்ள ஹைப்போதலாமசில் இருந்து சுரக்கிறது. இந்த ஹார்மோனும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    ஏனென்றால் இதில் இருந்து வருகிற ஹார்மோன் மூளையில் உள்ள தைராய்டின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் போது தைராய்டு ஹார்மோன் அளவு குறைகிறது.

    தைராய்டு அளவு குறைவானால் தானியங்கி முறையில் தைராய்டு அளவை சரி செய்வதற்காக நமது மூளையில் இருந்து ஒரு சிக்னல் வரும். இதை தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் என்று சொல்வோம்.

    இந்த தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் ஹைபோதலாமசில் செயல்பட்டு தைராய்டு சிமுலேட்டிவ் ஹார்மோனை சுரக்கும். அதோடு சேர்த்து புரோலாக்டின் என்ற ஹார்மோனையும் அதிகரிக்கும்.

    இந்த புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, அதுவும் முட்டையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது. தைராய்டு குறைவாக இருக்கும் நிலையில், புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, மறைமுகமாக இது கோனோ டோட்ரோபின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது.

    இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பேறு பெறுவதில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் குறிப்பாக கரு முட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


    கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் மாதவிலக்கு தள்ளித் தள்ளி வரும். சில பெண்களுக்கு மாதவிலக்கு வரவே வராது. சில நேரங்களில் மாதவிலக்கு அதிகமாக போகும்.

    இந்த மாதிரியான பலவித குறைபாடுகளால் கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருமுட்டைகள் சரியாக வளரவில்லை என்றால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் முட்டைகளில் கரு உருவானால் கூட இந்த குறைபாடுகளால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு, குறைபாடுள்ள குழந்தை மற்றும் குறைவான எடை கொண்ட குழந்தை பிறக்கும்.

    குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தைராய்டு பாதிப்புகளை சரி செய்வதற்கும், அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன. 

    • IVF சிகிச்சை முறை.
    • IUI சிகிச்சை முறை.

    குழந்தையின்மைக்கு என்ன காரணம்?

    ஆணுக்கும், பெண்ணுக்கும் 30 வயதை கடந்தவுடன் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகிறது. இதற்கு காரணம் கருமுட்டை குறைந்துவருவதாலோ அல்லது உயிரணுக்கள் செயல்பாடு குறைவாக இருப்பதனால் இருக்கலாம்.


    குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் செய்ய வேண்டியவை?

    மேலும் ஒரு பெண்ணுக்கு அவருடைய இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை நன்றாக இருக்கிறதா அல்லது கட்டிகள், சதை வளர்ச்சி ஏதும் இருக்கிறதா, பெலோப்பியன் குழாய்களில் அடைப்புகள் ஏதும் இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    அடுத்து மிக முக்கியமான விஷயம் கருமுட்டையில் ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை அல்ட்ரா சவுண்ட் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் பரிசோதனை செய்யப்படும்.

    IUI சிகிச்சை

    ஆண்களுக்கு விந்தணுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, அவர்களுடைய விந்தணுக்களை எடுத்து அதில் தரமான உயிரணுக்களை பிரித்து எடுத்து அதனை ஒரு பெண்ணின் கருப்பையில் சேர்ப்பது தான் IUI சிகிச்சை முறை.

    இதை யார் யாருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றால் 30-ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும் தம்பதியினருக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும். இதற்கு ஒரு பெண்ணின் கருமுட்டையின் தரம் நன்றாக இருக்க வேண்டும், ஆணின் உயிரணுக்களின் தரமும் நன்றாக இருக்க வேண்டும்.

    மேலும் முக்கியமாக பெண்ணுக்கு கருப்பை டியூப்களில் அடைப்பு எதுவும் இருக்கக்கூடாது. அதன்பிறகு கருப்பையில் உள்ள எண்டோமெண்ட்ரியம் அது தான் கரு பதியும் இடம் எனவே அது உறுதியாக இருக்க வேண்டும்.

    இந்த சிகிச்சை முறையை 30-ல் இருந்து 35 வயதிற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் குறைந்தது 4 முறை மட்டுமே அளிக்கப்படுகிறது.

    40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த சிகிச்சை பலன் அளிக்குமா என்றால், சற்று சிரமம் தான். 40-ல் இருந்து 45 வயதிற்குள்ளாக ஒரு பெண்ணின் கருமுட்டையின் வளர்ச்சி குறையத் தொடங்குவதால் இந்த சிகிச்சை பலன் அளிக்காது.


    IVF சிகிச்சை என்றால் என்ன?

    இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகள் அல்லது கர்ப்பம் நிற்காத பெண்களுக்கு, IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த செயல்முறை பாதுகாப்பானதாகவும் வெற்றிகரமாகவும் கருதப்படுகிறது. இதனாலேயே இந்த சிகிச்சை இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.

    இதற்கு முதலில், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கரு எந்த தரத்தில் உள்ளது என்று பார்க்கப்படுகிறது. இரண்டாவது மிக முக்கியமான விஷயம் பெண்ணின் வயது. இந்த இரண்டு விஷயங்களும் சரியானதாக இருந்தால், IVF -ன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.

    இந்த IVF சிகிச்சைக்கு முன், பெண்ணின் கருப்பையின் திறன் மற்றும் ஆணின் விந்தணுவின் தரம் ஆகியவை ஆராயப்படுகின்றன. அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு IVF சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    IVF சிகிச்சையில் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமன விஷயம் என்னவென்றால் இதில் 2 பகுதி உள்ளது. முதல் பகுதியில் பெண்ணிடம் இருந்து கருமுட்டை எடுப்பது, தரமான கருமுட்டைகளை எடுத்து ஆணின் உயிரணுக்களுடன் சேர்த்து கருவை வளர வைப்பது எல்லாமே லேப்பில் நடக்கும், இரண்டாம் பகுதி எம்ரியோ டிரான்பர் அதாவது உருவான கருவிலேயே நல்ல தரமான கருவை எடுத்து கருப்பையில் சேர்ப்பது. இது தான் IVF சிகிச்சை முறை ஆகும்.

    • வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
    • குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.

    குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடைமுறை சரோகசி (Surrogacy) எனப்படும் வாடகைத்தாய் முறை ஆகும். வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.

    வாடகைத்தாய் என்பது ஒரு பெண், தன் உடல் திறனால் குழந்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்காக இன்னொரு பெண் கர்ப்பத்தை சுமந்து குழந்தை பெற்றுத் தருவதாகும்.


    இதை மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் குழந்தை வளருவதற்கு மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.

    அதாவது சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது. சில நேரங்களில் அவர்களுக்கு கர்ப்பப்பை இருந்தாலும் கூட அது சரியாக செயல்படாத நிலையில் இருக்கும்.

    ஒருவேளை கர்ப்பப்பையில் செயல்பாடு இருந்தால் கூட அதில் சரியான முறையில் குழந்தை வளர்வதற்கு தேவையான சூழல்கள் இல்லாத நிலை இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய மரபணு வழியிலான குழந்தையை வளர்த்து பெற்றெடுப்பதற்கு ஒரு வழிமுறைதான் வாடகைத்தாய் என்பதாகும்.

    இந்த வாடகைத்தாய் முறையில் எந்த தம்பதிக்கு வாடகைத்தாய் வேண்டுமோ, அவர்களை கமிஷனிங் தம்பதி என்று சொல்கிறோம். அதாவது அவர்கள் தான் அந்த குழந்தைக்கு தாய், தகப்பன்.

    வாடகைத்தாய் என்பவர் கர்ப்பப்பையை மட்டும் தான் இந்த குழந்தைக்கு கொடுப்பார்.

    எனவே இந்த குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.

    அந்த தம்பதியின் முட்டையையும், விந்தணுவையும் சேர்த்து கருவாக்கம் செய்து, அந்த கருவை வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் முறைதான் வாடகைத்தாய்.


    இந்த வாடகைத்தாய் முறை என்பது, ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கத் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகவே பலவிதமான ஆலோசனைகள், விமர்சனங்கள், விவாதங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.

    ஏனென்றால் வாடகைத்தாய் முறையில், குறிப்பாக குழந்தை தேவைப்படுகிறவர்கள் மட்டும் இல்லாமல், சில சமூக காரணங்களுக்காகவும், பிரபலங்கள் என்ற முறைகளிலும், சிலர் தாங்கள் குழந்தை பெற்றால் தங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், அல்லது அந்த கர்ப்பத்தை சுமப்பதால் தங்களின் வாழ்க்கை பாதிப்படையும் என்பது போன்ற சூழ்நிலைகளால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

    • குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்றார்
    • புது பைக்குடன் தர்மு சுற்றித்திரிவதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சந்தேகமடைந்தனர்.

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பாஸ்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹத்மாத் கிராமதத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவரது இரண்டாவது மனைவி சாந்தி பெஹரா.

    பிரசவத்திற்காக டிசம்பர் 19 அன்று பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சாந்தியை சேர்த்தார், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் டிசம்பர் 22 முதல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    பின்னர் பிறந்த 10 நாளே ஆன தனது மகனை தர்மு, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உடாலா சப்-டிவிஷனுக்கு உட்பட்ட சைன்குலாவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்று, அந்த பணத்தை வைத்து இஎம்ஐயில் பைக் வாங்கியுள்ளார்.

    புது பைக்குடன் தர்மு சுற்றித்திரிவதைப் பார்த்த கிராம மக்கள் சந்தேகமடைந்து குழந்தைகள் நலக் குழுவுக்கு (CWC) தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தர்மு மற்றும் சாந்தி மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதியினரை CWC விசாரணைக்கு அழைத்தது.

    உரிய நீதிமன்ற ஆவணத்தின் மூலம் சட்டப்படிதான் குழந்தையை தானம் செய்ததாக தம்பதியினர் கூறினர். இருப்பினும் பைக் வாங்க குழந்தையை விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • அனைத்திந்திய கருத்தரித்தல் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி நடந்துள்ளது.
    • ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தினர்.

    அனைத்திந்திய கர்ப்பமாகும் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி செய்யும் கும்பலை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

    பீகாரின் நவாடா மாவட்டத்தின் நர்டிகஞ்ச்சில் உள்ள கஹுவாரா கிராமத்துக்கு அருகே ஒரு கிடங்கில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.

    ரகசிய தகவலின் அடிப்படையில் சைபர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் என மூன்று பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பின்னர், குற்றவாளிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

    திருமணமான குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கும் சேவை, 'ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.

    இந்த கும்பல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளது. இதுவரை ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை போலீசார் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

     

    போலீஸ் கூறுகையில், மோசடி செய்பவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டனர். பேஸ்புக் விளம்பரங்களையும் வெளியிட்டனர்.

    பான் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற பல ஆவணங்களையும், பதிவு என்ற பெயரில் நபரின் செல்ஃபியையும் கேட்பார்கள்.

    குழந்தை பெற முடியாத பெண்களை வெற்றிகரமாக கருவூட்டுவதுதான் வேலை. அதில் வெற்றி பெற்றால் ரூ. 10 லட்சம், தவறினாலும் ரூ.50,000 தருவதாக பொய்யான உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.

    இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.500 முதல் ரூ.20,000 வரை வசூலித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 ஸ்மார்ட்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதிலுருந்து வாட்ஸ்அப் சாட்கள், ஏமாந்தவர்கள் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் தெரிவித்தது. கடந்த ஆண்டும் பீகாரில் இதே கான்சப்டில் செயல்பட்ட மற்றொரு சைபர் மோசடி கும்பல் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

    ×