search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "male child"

    கோவையில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்க்கப்பட்ட நிலையில் மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    கோவை:

    கோவையை அடுத்த சூலூர் மயிலம்பட்டி கரையான்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி(வயது 37).

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயலட்சுமிக்கு கடந்த 6-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் 9-ந் தேதி ஜெயலட்சுமி திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவர் தனது குழந்தையை விற்று விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும், சைல்டுலைன் அமைப்பினருக்கும் புகார் செய்தனர்.

    அதன்பேரில் அவர்கள் ஜெயலட்சுமியை பிடித்து விசாரித்த போது பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.25 ஆயிரத்துக்கு விற்றது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தையை வாங்கிய தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜெயலட்சுமி- வெங்கடேசன் தம்பதிக்கு ஏற்கனவே பிறந்த 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மதுரையில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதில் ஒரு ஆண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கும், ஒரு குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கும் விற்றுள்ளார். மற்றொரு குழந்தையை தங்களது உறவுப்பெண் ஒருவரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

    ஜெயலட்சுமிக்கு குழந்தைகளை விற்றுக் கொடுப்பதில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் புரோக்கராக செயல்பட்டுள்ளார். ஜெயலட்சுமி போலீசில் சிக்கியதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    இதுகுறித்து சைல்டுலைன் சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலட்சுமி ஏற்கனவே விற்பனை செய்ததாக கூறப்படும் 3 குழந்தைகள் தற்போது எவ்வாறு உள்ளனர்? ஜெயலட்சுமியிடம் குழந்தைகளை வாங்கி விற்றது போல பெண் புரோக்கர் வேறு பெண்களிடமும் குழந்தைகளை வாங்கி விற்றாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் பிடிபட்டால் பல தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மீட்கப்பட்ட ஆண் குழந்தையை உக்கடத்தில் உள்ள டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்க இருப்பதாக சைல்டுலைன் அமைப்பினர் தெரிவித்தனர். #tamilnews
    கோவை அருகே பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தையை விற்க முயன்ற தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் மயிலம்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ஜெயலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 6-ந் தேதி ஜெயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 9-ந் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகிவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஜெயலட்சுமி தனது குழந்தையை விற்க முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகள் நலவார்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக குழந்தையின் தான் ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயலட்சுமி தனக்கு ஏற்கனவே பிறந்த குழந்தையையும் விற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பெற்ற குழந்தையை தாய் விற்க முயன்ற சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருப்பூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் 1½ வயது ஆண் குழந்தையை கடத்திய வட மாநில தம்பதி கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பபிரான் பட்டயட் (வயது 28). பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு பபிரான் பட்டயட்டின் 1½ வயது மகன் உதய நாராயன் வீட்டு முன்பு உள்ள காம்பவுண்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென குழந்தை மாயமானது. இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பபிரான் பட்டயட் திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்தார். உடனடியாக துணை கமி‌ஷனர் உமா, உதவி கமி‌ஷனர் தங்கவேல், இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நீண்ட நேரமாக இங்கு சுற்றி திரிந்ததாகவும் அவர்கள் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல இருப்பதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சன்கர் சன் பேத்தி, இவரது மனைவி சுசித்ரா ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்ததும், தற்போது கோவை செட்டிப் பாளையத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இரவோடு இரவாக போலீசார் கோவைக்கு விரைந்து வந்து சன்கர்சன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு இருந்த 1½ வயது குழந்தை உதய நாரானனை மீட்டனர்.

    பின்னர் கணவன்- மனைவி இருவரையும் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாததால் வளர்ப்பதற்காக குழந்தையை கடத்தியதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருவண்ணாமலையில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெற்றோர் கண்முன் 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகிதா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 2 வயதில் சிவநேசன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மாலை ரமேஷ் தனது குடும்பத்துடன் மொபட்டில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார். பின்னர் அவர்கள் கடை வீதிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி உள்ளனர்.

    சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் ரமேஷ், சுகிதா மற்றும் பெண் குழந்தை ஒரு புறமும், சிறுவன் சிவநேசன் ஒரு புறமும் விழுந்தனர். குழந்தையின் தலை மீது லாரி ஏறி இறங்கியதில் சிவநேசன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தில் ரமேஷ், சுகிதா மற்றும் அவர்களது மகள் ஆகியோருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ரமேசும், சுகிதாவும் மகனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். விபத்து ஏற்படுத்திய லாரி அங்கிருந்து நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தை சிவநேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மடக்கி பிடித்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மேட்டுப்பாளையம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உப்பு பள்ளத்தை சேர்ந்தவர் பூபாலன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று இரவு 12.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் நந்தினியை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தது.

    வரும் வழியில் நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அதில் வந்த நந்தினியின் தாய் சரசு, ஆம்புலன்ஸ் டிரைவர் நந்த குமார், அவசர மருத்துவ உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.

    நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    ×