என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இரட்டை மகிழ்ச்சி.. தந்தையானர் சர்பராஸ் கான்
    X

    இரட்டை மகிழ்ச்சி.. தந்தையானர் சர்பராஸ் கான்

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சர்பராஸ் கான் முதல் சதத்தை பதிவு செய்தார்.
    • அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 462 ரன்கள் குவித்தது. இக்கட்டான சூழலில் பொறுப்புடன் ஆடிய சர்பராஸ்கான் டெஸ்ட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 150 குவித்து ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி விளையாடி வரும் அவர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.

    இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த கையோடு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

    அவர், தனது குழந்தையை கையில் ஏந்தி போஸ் கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×