என் மலர்
நீங்கள் தேடியது "birth rate"
- சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது.
- கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல் குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அதன்படி, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதிக்கப்பட்ட சட்டம் 2015-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அரசு அனுமதி அளித்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது. இதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி சீன தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்பட நாடு முழுவதும் உள்ள விந்தணு தான கிளினிக்குகள் மாணவர்களை, சில விதிகளுக்கு உட்பட்டு விந்தணு தானம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா மற்றொரு முயற்சியில் இறங்கியது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிப்பது என்பதே அந்தத் திட்டம். அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்படி, பேன் மெய் கல்வி குழுமத்தின் மியான்யாங் பிளையிங் கல்லூரியானது, முதன்முறையாக கடந்த மார்ச் 21-ம் தேதி இந்த விடுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த நாளில் காதலில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, 9 கல்லூரிகளில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மாணவ, மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்துக் காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி உள்ளன.
- இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை "ஒரு குழந்தை கொள்கை" நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் தொகை வல்லுநர்கள், இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டபோதே இதன் விளைவாக, சீனா ஒரு பணக்கார நாடாக ஆவதற்கு முன்பே, "வயதாகி விடும்" என்று எச்சரித்து வந்தனர். அது தற்போது உண்மையாகி வருகிறது.
ஏனெனில், அங்கு தற்போது இளம்வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும், கடன்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள் முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் ட்ரிப்.காம் எனும் இணையதள வர்த்தக குழுமம், வரும் ஜூலை 1 முதல், தனது பணியாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியை அறிவித்துள்ளது. அதாவது, பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.5,66,000 ($6,897.69) வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.
"அதிகளவு முதியோர்கள், குறைந்தளவு இளைஞர்கள்" என்ற ஒரு ஏற்றத்தாழ்வான நிலையுடன் போராடும் சீனாவில் இந்த நிலையை எதிர்கொள்ள செய்வதற்காக பெரிய தனியார் நிறுவனம் செய்யும் முதல் முயற்சியாகும்.
400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,14,000 ரொக்க மானியமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
மேலும் இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரிப்.காம் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறும்போது, "பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்து வருகிறேன். ஒரு சாதகமான கருவுறுதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு, தனியார் நிறுவனங்களாலும் தங்கள் பங்களிப்பை செய்ய முடியும்" என்றார்.
சீனாவில் 2021ல் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 என இருந்த நிலையில், கடந்தாண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோதுகூட தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் எனவும் 2021ம் ஆண்டே அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை பராமரிப்பு செலவு மற்றும் கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை இதற்கான காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார பின்னணியில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மக்கட்தொகை எவ்வாறு அமையும் என்றும் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
- பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும்.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் விதமாக கருத்தரங்கத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது - பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னே ற்றும் வகையில் "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க மற்றும் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும். 2022-2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுக்கவும், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகச் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் நடத்துபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சாரா செலின் பவுல் , சமூக நலத்துறை அலுவலர் கோமதி , அரசு டாக்டர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- இந்தியாவில் இயற்கை வளங்கள் மிகுந்த மாநிலமாக திகழ்வது கேரள மாநிலம்.
- ஒரு பிரிவினர் அரசு வேலை கிடைத்த பிறகு குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
கேரளா:
பிறப்பு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மக்கள்தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கையே ஆகும். மக்கள்தொகையில் 1000 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் நபர்களின் எண்ணிக்கை மனித பிறப்பு விகிதம் என குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக ஒரு வருடத்திற்கு 1000 பேருக்கு 45 பிறப்புகள் ஏற்பட்டால், பிறப்பு விகிதம் 45. இந்த விகிதம் சில நேரங்களில் ஒரு சதவீதமாக குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் இயற்கை வளங்கள் மிகுந்த மாநிலமாக திகழ்வது கேரள மாநிலம். மக்கள்தொகை பெருக்கத்திலும் அது பெரிய மாநிலமாகவே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 33 மில்லியன் மக்களுடன், மக்கள்தொகையில் 13-வது பெரிய மாநிலமாக கேரளா இருந்தது.
இந்நிலையில் தற்போது அங்கு குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு பெரிய அளவில் இருந்தது. அந்த ஆண்டில் அங்கு 5 லட்சத்து 60 ஆயிரத்து 268 குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆனால் அதன்பிறகு குழந்தைகள் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த 2019-ம் ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரத்து 113 குழந்தைகளே பிறந்தன. அது 2021-ம் ஆண்டு மேலும் குறைந்தது. அந்த ஆண்டில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 767 குழந்தைகளே பிறந்துள்ளன.
2011-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 501 குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளன. இது 25 சதவீதம் குறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
இளைஞர்களின் பார்வை மற்றும் வாழ்க்கை தொடர்பான கருத்துக்களில் அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றத்தால் கேரளாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பிறப்பு விகிதம் குறைவதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய புதிய தலைமுறையினர், நிதி பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். பலர் ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கிறார்கள். குழந்தையை தேவையில்லை என்று நினைப்பவர்களும் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் பிற்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.
இவைகள் பிரதான காரணங்களாக கூறப்பட்டாலும், மேலும் சில காரணங்களும் கேரளாவில் குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. கேரளாவில் கருக்கலைப்பு செய்யும் போக்கு சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், குழந்தை பிறக்காத நிலையில் கருவுறாமை சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. இவர்களில் ஒரு பிரிவினர் அரசு வேலை கிடைத்த பிறகு குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மற்றொரு பிரிவினர் வெளிநாடு செல்வதற்காக கர்ப்பமாவதை தவிர்க்கின்றனர்.
இளைஞர்களின் இந்த எண்ணம் காரணமாகவே கேரளாவில் குழந்தை பிறப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் புதிய தலைமுறைகள் கணிசமாக குறையும் என்றும், எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்படுகிறது.
அதாவது பெரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும். ஆள் இல்லாத வீடுகள் அதிகரிக்கக்கூடும்.
இது போன்ற பல விளைவுகளை கேரளா சந்திக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை பிறப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து இளைஞர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
- உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
- ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை.
1999 ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அந்நாட்டில் மக்கள்தொகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷியாவில் மக்கள்தொகை சரிந்து வரும் நிலையில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாக, பாலியல் அமைச்சகத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
குழந்தை பிறப்பை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தம்பதிகள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வசதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணையம் மற்றும் மின்சாரத்தை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
- ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் தென் இந்தியாவில் குழைந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் குழந்தை பிறப்பை அதிகரிக்க கூறியுள்ள உபாயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு பிறப்பு விகிதம் 5.1 சதவீதம் குறைந்து 758,631ஆகப் பதிவானது. இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,50,074 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே கால் இடைவெளியுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் குறைவாகும்.
இந்நிலையில் ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா கடந்த நவம்பர் 8 ஆம் தேதி யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் , 25 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்வதைத் தடைசெய்யவும், 30 வயதாகிவிட்டால் கருப்பை நீக்கத்தை கட்டாயப்படுத்தவும் ஹைகுடா பரித்துரைத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
I want you to know the current state of Japanese politicians.Naoki Hyakuta, leader of the far-right Conservative Party of Japan with 3 seats in the House of Representatives@BBCWorld @bbcnewsjapan @BBC @CNN @NBCNews @ABC @CBSNews @FoxNews pic.twitter.com/utP5Y29veU
— ⁑リコマイ ⁑ (@sakuraironoharu) November 10, 2024
இதனையடுத்து தனது கருத்துக்காக நவோகி ஹைகுடா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசிய கருத்துகள் கடுமையானவைதான் என்றும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்குத் தான் வாதிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.
- தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம்.
- யாரும் அழிக்க வேண்டாம், அது தானாகவே அழிந்து விடும்
மக்கள் தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால் இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியைப் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன.
குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

மக்கள் தொகை குறைந்த சமூகத்தை அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் மோகன் பகவத்தின் கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மோகன் பகவத் கருத்துக்கு பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும்
- சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால் இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியைப் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன.
குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.
மக்கள் தொகை குறைந்த சமூகத்தை அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் மோகன் பகவத்தின் கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் மோகன் பகவத் கருத்தை காட்டமாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி, "நாங்கள் (பெண்கள்) தொடர்ந்து இனப்பெருக்கம் செய்யும் முயல்களா? வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் ஏன் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று மோகன் பகவத் சொல்ல வேண்டும். மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தால், பள்ளிக் கட்டணம், விமானக் கட்டணங்கள் மற்றும் பள்ளிக் கல்விச் செலவுகளை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், "முதலில் உங்கள் பாஜக உறுப்பினர்களுக்கு இந்த அறிவுரையை சொல்லுங்கள். உங்கள் அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறது. அதே சமயம் குழந்தை பிறப்பை அதிகரிப்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். பேசுகிறது. இது ஒரு பாசாங்குத்தனமான கொள்கை. ஆர்எஸ்எஸ் தலைவர் ஏன் பெண்கள் பாதுகாப்பு போன்ற இந்த விஷயங்களைப் பற்றி பேசவில்லை?" என்று தெரிவித்தார்.
மோகன் பகவத் கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய ஐதராபாத் எம்.பி. ஒவைசி, "நான் மோகன் பகவத்திடம் கேட்க விரும்புகிறேன். அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மக்களுக்கு அவர் என்ன கொடுப்பார். அதிக குழந்தைகளைப் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் ₹1500 கொடுப்பாரா? இதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்துவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
- ஜப்பான் மக்கள் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஜப்பானில் 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவானது.
ஆகவே ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.
2025 ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் கவர்னர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.
- 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன்[7 கோடி] உயர்ந்துள்ளது.
- ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும், 2 பேர் இறப்பார்கள்.
உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் [ஜனவரி 1] 8.09 பில்லியனாக [809 கோடியாக] இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று [திங்களன்று] வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் [7 கோடி] உயர்ந்துள்ளது . 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் [2024] மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.
மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.
வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும் சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.
- நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகப் பணக்காரருக்குமான எலான் மஸ்க் மக்கள் தொகை வீழ்ச்சி மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகை 2100 க்குள் 110 கோடிக்கும் கீழ் குறையும் என்றும் சீனாவின் மக்கள் தொகை 73 கோடிக்கு வரும் என்று சுட்டிக்காட்டும் 2020 கிராப் ஒன்றை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
2023 புள்ளிவிவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும் சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.
சமீபத்தில் வெளியான ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகிட்டவற்றின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.
Population collapse is our greatest threat to humanity Elon Musk pic.twitter.com/XHsHTfMCCU
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) January 7, 2025
வருங்காலங்களில் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் மக்கள் தொகை வீழ்ச்சியை சமாளிக்க மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைய சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.