search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறப்பு விகிதம்"

    • கடந்த 2022-ல் குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது.
    • சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ரோம்:

    ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதன்மூலம் சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு குடியேறி உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அவர்கள் உதவியாக இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    • பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
    • ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் விதமாக கருத்தரங்கத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது - பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னே ற்றும் வகையில் "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க மற்றும் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும். 2022-2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுக்கவும், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகச் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் நடத்துபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சாரா செலின் பவுல் , சமூக நலத்துறை அலுவலர் கோமதி , அரசு டாக்டர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    • சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது.
    • கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல் குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.

    இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    அதன்படி, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதிக்கப்பட்ட சட்டம் 2015-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அரசு அனுமதி அளித்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

    இதையடுத்து, திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது. இதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி சீன தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்பட நாடு முழுவதும் உள்ள விந்தணு தான கிளினிக்குகள் மாணவர்களை, சில விதிகளுக்கு உட்பட்டு விந்தணு தானம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளன.

    இந்நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா மற்றொரு முயற்சியில் இறங்கியது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிப்பது என்பதே அந்தத் திட்டம். அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

    இதன்படி, பேன் மெய் கல்வி குழுமத்தின் மியான்யாங் பிளையிங் கல்லூரியானது, முதன்முறையாக கடந்த மார்ச் 21-ம் தேதி இந்த விடுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த நாளில் காதலில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, 9 கல்லூரிகளில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மாணவ, மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்துக் காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி உள்ளன.

    ×