ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை இவ்வளவுதான்- அறிக்கை

2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன்[7 கோடி] உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும், 2 பேர் இறப்பார்கள்.
ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை  இவ்வளவுதான்- அறிக்கை
Published on

உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் [ஜனவரி 1] 8.09 பில்லியனாக [809 கோடியாக] இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று [திங்களன்று] வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் [7 கோடி] உயர்ந்துள்ளது . 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் [2024] மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.

மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.

வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com