என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் 22-ந் தேதி நடக்கிறது
- சிறந்த மருத்துவர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்படும்.
- ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.3,100 வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருகிற 22-ந் தேதி ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிறந்த மருத்துவர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்படும். கத்தியின்றி, ரத்தமின்றி பக்க விளைவு இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.3,100 வழங்கப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிக்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.
Next Story






