search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராதனை"

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    வேலாயு தம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே கமலாம்பிகை உடனமர் அருள்நிறை மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கமலாம்பிகை உடனமர் அருள் நிறை மங்களநாதர் சாமிகளுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கமலாம்பிகை உடனமர் மங்களநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
    • புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர நாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்திகேஸ்வரருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில்,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்,மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • இக்கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் மங்களாம்பிகா சமேத ஆகாசபுரீஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இன்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூல மந்திர , காயத்திரி மந்திர ஹோமங்கள், பூர்ணாஹூதி, மங்களாம்பிகை சமேத ஆகாசபுரீஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் , சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    • அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே மேலக்காவிரி படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 68-ம் ஆண்டு கோடாபிஷேக அலங்கார உற்சவம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவிரியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    • பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது.

    கைலாய வாத்தியம் முழக்கத்துடன் தேவாரம், திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை உடன் அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடை பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பரமத்திவேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் மாணிக்கவாசகர் அர்ப்பணி மன்றம் 10-ம் ஆண்டு நிகழ்வாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் விளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

    • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற்றது
    • அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அந்தியூர்,

    நவகிரகங்களில் ஒன்றான குரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னி ட்டு, சிறப்பு குரு பெயர்ச்சி ஹோமங்கள் மங்களகர அபிஷேக, ஆராதனைகள், தீபாரா தனை மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்ப ட்டன.

    இதில் அந்தியூர் மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந்தேதி 60 படிகளுக்கும் பூஜை செய்து பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்.
    • காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் முருகனின் நான்காம் படைவீடாக சுவாமிநாத சுவாமி ஆலயம் உள்ளது.

    இங்கு தமிழ் ஆண்டுகளைக் குறிக்க கூடிய பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 படிக்கட்டுகள் 60 பெயர்களை தாங்கி நிற்கின்றது.

    இங்கு வருடந்தோறும் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி 60 படிகளுக்கும் பூஜை செய்து, பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    முக்கிய விழாவான படி பூஜையை முன்னிட்டு 60 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    • சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.
    • எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளை புனித வெள்ளியாக நேற்று அனுசரிக்கப்பட்டது.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்தநாளை புனித வெள்ளியாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.

    தவக்காலத்தின் கடைசி வெள்ளியாகவும், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியாகவும் இடம் பெறும் இந்த வெள்ளியானது உலகில் உள்ள கிறிஸ்தவர்களால் ஒரே நாளில் துக்கநாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் திரு இருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு பிரார்த்தனை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நேற்றுமாலை நடந்தது.

    முன்னதாக பேராலய வளாகத்தில் சிறப்பு நற்செய்தி வாசகம், மறையுரை, சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.

    பின்னர் இறைமக்கள் பாடுபட்ட இயேசுவின் சிலுவையை முத்தி செய்யும் சடங்கு நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கிய நிகழ்வான சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. முடிவில் இயேசுவின் பாடுபட்ட சொரூபம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடந்தது.

    இதில் இறைமக்கள் ஏராளமானோர் எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

    மரித்த ஆண்டவர் சொரூபம் இறைமக்கள் வழிபாட்டிற்காக புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பரிபாலகர் சகாயராஜ், பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார் மற்றும் குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் தஞ்சையில் உள்ள அனைத்து தேவாலயங்க ளிலும் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது.

    • புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
    • இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கலை அரங்கத்தில்பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை வார்த்தை வழிபாடு,சிறப்பு கூட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    சிலுவையில் அறை யப்பட்ட இயேசுவின் சொரூ பத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் முத்தமிட்டனர்.

    அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன், பாண்டமங்கலம் மகாமாரியம்மன், பகவதி அம்மன், சேளூர் மாரியம்மன்,கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி தீமித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஞாயிற்று சந்தைதோப்பு தேவி திரவுபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 3 -ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது .

    மகாபாரத கதை பாடப்பெற்று நேற்று படுகளம் திரவுபதை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு விரதம் இருந்த பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி நூற்றுக்கானக்கன பக்தர்கள் தீமித்தனர். பின்பு அம்பாள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் , உபயதாரர்கள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    ×