search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thyagaraja Swami"

    • தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது.
    • தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியாகராஜர் சுவாமிகள் . இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள்.

    இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.

    அதன்படி தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. விழாவில் சபையின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி, மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது. அப்போது உலகெங்கிலும் உள்ள சங்கீத வித்வான்கள், இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஆராதனை விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இதில் இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனா்.

    தஞ்சாவூர்:

    சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். அங்கே அவருக்கு சமாதி உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீ சத்குரு தியாகராஜா சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நிறைவு நாளான ஜனவரி 11-ம் தேதி காலை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் ஏராளமான இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனா்.

    இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபை தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கி பந்தல்கால் நட்டு வைத்தார். முன்னதாக தியாகராஜர் சமாதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நாகரத்னம்பாள் சமாதியிலும் வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த விழாவில் அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், கணேசன், பஞ்சநதம், டெக்கான் மூர்த்தி, சுந்தரம், அரித்துவாரமங்கலம் பழனி வேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள் கோவிந்தராஜன், அருண், பாபநாசம் அசோக்ரமணி, ராஜகோபாலன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×