தியாகராஜ சுவாமிகள் 176-வது ஆராதனை விழாவையொட்டி பந்தல்கால் நடும் விழா

ஆராதனை விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனா்.
ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபை தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபை தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது.
Published on

தஞ்சாவூர்:

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். அங்கே அவருக்கு சமாதி உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீ சத்குரு தியாகராஜா சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நிறைவு நாளான ஜனவரி 11-ம் தேதி காலை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் ஏராளமான இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனா்.

இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபை தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கி பந்தல்கால் நட்டு வைத்தார். முன்னதாக தியாகராஜர் சமாதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நாகரத்னம்பாள் சமாதியிலும் வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த விழாவில் அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், கணேசன், பஞ்சநதம், டெக்கான் மூர்த்தி, சுந்தரம், அரித்துவாரமங்கலம் பழனி வேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள் கோவிந்தராஜன், அருண், பாபநாசம் அசோக்ரமணி, ராஜகோபாலன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com