search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abishegam"

    • சாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.
    • சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்தார்.

    தஞ்சாவூர்:

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது.

    வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது.

    அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதையொட்டி சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்தார். பின்னர் பெருமாளுக்கு தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர்.இதில் கவுன்சிலர் மேத்தா, முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன், பிரதிநிதிகள் சிங்காரவேலன், பலராமன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை விசேஷ திருமஞ்சன சேவையும், தீபாராதனையும் நடைபெற்றது. அதை த்தொடர்ந்து பெருமாள் சொர்க்கவாசலை கடந்து வசந்த மண்டபத்தை அடைந்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணிக்கோவில், தெற்குவீதியில் உள்ள கலியுக வெங்கடேசபெருமாள் கோவில், கீழவீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்பட தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • படித்துறையில் காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.
    • குஞ்சித ராஜ விநாயகர், இரட்டை கால பைரவர் ஆகியோர் சன்னதியில் சிறப்பு வழிபாடு.

    கும்பகோணம்:

    அகில பாரதீய சந்நியாசிகள் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பாக தலைக் காவிரியிலிருந்து பூம்புகார் வரை 12 ஆம் ஆண்டு ரதயாத்திரை கஞ்சனூர் வந்தது.

    கஞ்சனூர் வடகாவிரி படித்துறையில் காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் அபிஷேகத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து கிராம மக்கள் காவிரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சுவாமி ராமானந்தா தலைமையிலான துறவியர்கள் காவிரி நதிக்கு மகா ஆரத்தி வழிபாடு செய்தனர்.

    மாணவ -மாணவியர் விளக்கேற்றி காவிரி நதியை வணங்கினர். இதில் கஞ்சனூர் கோட்டூர், துகிலி, மணலூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து கதிராமங்கலம் வடகாவிரி படித்துறையில் குஞ்சித ராஜ விநாயகர், இரட்டை கால பைரவர் ஆகியோர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து படித்துறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் காவிரி அம்மன் மற்றும் ரத யாத்திரை காவிரி அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் சிவராமபுரம் வாயு சித்த ராமானுஜர் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் கதிராமங்கலம், சிவராமபுரம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.
    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன. அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்: வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலபிஷேகம் செய்தால் புத்திரப்பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்: செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் செய்யச் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத் திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:
    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றா மரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் பக்தர் கள் அனைவரும் கைகளா லேயே அவருக்கு விபூதி. அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.
    விநாயகருக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
     
    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநா யகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்: திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மை யான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.

    தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.

    மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம் உண்டாகும்.

    தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.

    கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.

    அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லட்சுமி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.

    எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் போக்கும், துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.

    மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.
    ×