என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95802"

    பொருளாதாரம், வியாபாரத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.
    "ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக''

    - என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.

    அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.

    ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
    தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
    - என்றோ அல்லது அழகு தமிழில்

    ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
    ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
    அழகன் அண்ணா கணேஸ்வரா!
    ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
    பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
    என்றும் மங்களம் கணேஸ்வரா!

    பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.

    ஆதி சங்கரர் அருளிய இந்த கணேச ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி விநாயகரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.
    ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
    மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா!
    விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
    விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!
    குழந்தை வடிவமானவரே!
    தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே!
    பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே!
    பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே!
    கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.

    - ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது.
    அழகர்கோவில் மலை உச்சியில் சோலைமலை முருகன் கோவிலில் உள்ள வித்தக விநாயகர் சன்னதியில் கார்த்திகை மாத சங்கடஹர சதூர்த்தி பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
    அழகர்கோவில் மலை உச்சியில் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள வித்தக விநாயகர் சன்னதியில் கார்த்திகை மாத சங்கடஹர சதூர்த்தி பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

    அருகம்புல், சம்மங்கி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வணங்கினார்கள். மேலும் உற்சவர் சுவாமிக்கும், பூஜைகள் நடந்தது. மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மற்றும் வேல்சன்னதியிலும் பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள, செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமண் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுகாட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    செவ்வாய்க்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியான இன்று நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    சங்கடஹர சதுர்த்தி விரதம் மாதத்துக்கு ஒருமுறை பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம். 'ஹர' என்றால் அழித்தல் என்று பொருள். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை 'சங்கடஹர சதுர்த்தி' விரதத்துக்கு உண்டு. விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், 'சங்கடஹர சதுர்த்தி' மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று. இது, 'மகா  சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கப்படுகிறது.  திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியமும் உண்டாகும். நாள்பட்ட  நோய்கள் குணமாகும். நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உண்டாகும். தோஷங்கள் நீங்கும்.

    செவ்வாய் கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும்.
    சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சியளிப்பார்.

    ஆனால் மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்கு முகமாக விநாயகர் காட்சி அளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபங்கள் நீங்கி திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    முழு முதற்கடவுளான விநாயகரை வழிபாடு செய்த பின்னர் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது நிச்சயமாக வெற்றி அடையும். இன்று சித்தி விநாயகருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
    ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
    வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
    ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

    பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
    திலமோதகை: ஸஹ
    உத்வஹந் பரசுமஸ்து தேநம
    ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

    மூல முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை வழிபடுவதற்காகவே சில விரதங்கள் இருக்கின்றன.
    மூல முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை வழிபடுவதற்காகவே சில விரதங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    * வெள்ளிக்கிழமை விரதம்

    * செவ்வாய்க்கிழமை விரதம்

    * சதுர்த்தி விரதம்

    * குமார சஷ்டி விரதம்

    * தூர்வா கணபதி விரதம்

    * சித்தி விநாயகர் விரதம்

    * துர்வாஷ்டமி விரதம்

    * நவராத்திரி விரதம்

    * வெள்ளிப் பிள்ளையார் விரதம்

    * செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்

    * சங்கடஹர சதுர்த்தி விரதம்
    விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார்.
    விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.

    இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.

    வெள்ளைக்காரர்களால் கடலில் வீசப்பட்ட இந்த ஆலயத்தின் விநாயகர் சிலை, மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த சன்னிதியில் கடற்கரையோரம் உள்ள சிறிய ஆலயத்தில், நான்கு கரங்களுடன் இந்த விநாயகர் அருள்புரிகிறார். ஆலயத்தின் உட்புறச் சுவர்களில், விநாயகரின் புராணங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இவரை வழிபட்டால் காரியத்தடை விலகும். அன்பும், அமைதியும் பெருகும்.
    இந்து சமயத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை இருந்தாலும், அவற்றில் விநாயகர் மூல முதற்கடவுளாக வணங்கப்படுகிறார். பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் உள்ளது, பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயம் வடக்கு பார்த்த சன்னிதியில் குடவரைக் கோவிலாக விளங்குகிறது.

    ஆறு அடி உயரம் கொண்ட விநாயகர், சிறு குன்று போன்ற பாறையில் குடைந்த புடைப்புச் சிற்பமாக அர்த்த பத்மாசனத்தில் பிரமாண்ட உருவமாக காட்சி தருகிறார். விநாயகரின் தும்பிக்கை, வலதுபுறம் திரும்பி ‘வலம்புரி விநாயகராக’ அருள்புரிகிறார். இங்கு அம்பாள் ‘வாடாமலர்’ என்ற பெயருடனும், ஈசன் ‘அர்ச்சுனவனேஸ்வரர்’ என்ற பெயருடனும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இங்கு புதுக் கணக்கு பூஜை போடவும், புதிய செயல் தொடங்கவும் வரும் பக்தர்கள் ஏராளம். ஆயுள் விருத்தி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்துகொள்வதும் சிறப்பு என்பதால், இந்த ஆலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
    ×