search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adoration"

    • இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவால யத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதிகாலை 5 தொடங்கிய திவ்ய நற்கருணை ஆராத னைகள் பல்வேறு தரப்பினரால் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனையை நடத்துகின்றனர்.

    தொடர்ந்து இன்று மாலை தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.

    சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையா கவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

    மேலும் வெளிநாட்டினரும் வருகை தந்துள்ளனர்.

    இதனால் வேளாங்கண்ணி கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்கள் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது.

    பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று.
    • அக்னிசட்டி, காவடி, அலகு காவடி எடுத்து வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மேலக்கொட்டையூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது.

    இந்த கோவிலில் மார்கழி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு மார்கழி திருவிழாவையொட்டி மாவிளக்கு பூஜை பூச்சொரிதல் விழா நடைபெற்று.

    முக்கிய நிகழ்ச்சியான இன்று புறவழிச்சாலையில் காவேரி கரையிலிருந்து கொட்டும் மழையில் நாதஸ்வர மேளதாளங்கள் தாரை தப்பட்டையுடன் பால்குடம் வேல் சக்தி கரகம் அக்னிசட்டி காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்த சந்தன காப்பா அலங்கார மும் அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இரவு 7 மணி அளவில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் உற்சவர் ரிஷப வாகனத்தில் பதினெட்டாம்படி கருப்புசாமி வேலு மாரியம்மன் சக்தி கரகமும் சக்தி கரகமும் மேளதாளம் புழங்க இன்னிசைக் கச்சேரியுடன் வீதி உலா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிராம நாட்டாமைகள் ஊர் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர். 

    • ஒரு கலம் அளவு செப்புக் காசுகளை உருக்கி செய்யப்பட்ட பிள்ளையார் என்பதால் கலக்காசு பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
    • பிரகார வினாயக ர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்மற்றும் ஆராதனைகள் நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலக்காசு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு கலக்காசு பிள்ளையார் வீதி உலா நடந்தது.

    முன்னொரு காலத்தில் நடந்த ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செப்புக்காசுகளில் கும்பாபிஷேக செலவு போக மீதமிருந்த 12 மரக்கால் எனும் ஒரு கலம் அளவு செப்புக் காசுகளை உருக்கி செய்யப்பட்ட பிள்ளையார் என்பதால் கலக்காசு பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    மேலும், ஐயாறப்பர் கோயிலிலுள்ள ஓலமிட்ட வினாயகர், ஆதிவினா யகர், இரட்டை வினாயகர் மற்றும் பிரகார வினாயக ர்களுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம்மற்றும் ஆராதனைகள் நடந்தது.

    திருவையாறு மேட்டு த்தெரு அபீஷ்ட வரத வினாய கருக்கு சந்தணக் காப்பிலும், வடம்போக்கித் தெரு அக்காசாலைகம்மாள வினாயகருக்கு வெள்ளிக் கவசத்திலும், மேலவீதி சக்தி வினாயகர் சிறப்பு அலங்காரத்திலும், வாத்தலையம்மன் கோயில் வினாயகர்சந்தனக் காப்பிலும் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்கள்.

    • இந்த ஆண்டிற்கான விழா கணபதி ஹோமம், நவதான்ய பச்சை கம்பம் நடுதல், அம்மனுக்கு பூச்சாட்டி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • இதில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரித்த ரதத்தில் சமயபுரம் மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில், சமயபுரம் மாரியம்மன் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கணபதி ஹோமம், நவதான்ய பச்சை கம்பம் நடுதல், அம்மனுக்கு பூச்சாட்டி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    இதையொட்டி காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் நவசக்தி வேடம், மாகாளி வேடமணிந்தவாறும், கரகாட்டத்துடனும், வாண வேடிக்கை நடைபெற்றது. இதில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரித்த ரதத்தில் சமயபுரம் மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார்.

    நேற்று மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அபிஷேக ஆராதனைகள், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை, கூழ் வார்த்தல், அம்மன் திருவீதி உலா, தெருக்கூத்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாதம்மாள் மற்றும் திரு நங்கைகள் செய்திருந்தனர்.

    ×