என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்த அம்மன்.
சர்வ அலங்காரத்துடன் மாரியம்மன் பவனி
- இந்த ஆண்டிற்கான விழா கணபதி ஹோமம், நவதான்ய பச்சை கம்பம் நடுதல், அம்மனுக்கு பூச்சாட்டி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
- இதில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரித்த ரதத்தில் சமயபுரம் மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில், சமயபுரம் மாரியம்மன் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கணபதி ஹோமம், நவதான்ய பச்சை கம்பம் நடுதல், அம்மனுக்கு பூச்சாட்டி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
இதையொட்டி காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் நவசக்தி வேடம், மாகாளி வேடமணிந்தவாறும், கரகாட்டத்துடனும், வாண வேடிக்கை நடைபெற்றது. இதில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரித்த ரதத்தில் சமயபுரம் மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார்.
நேற்று மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அபிஷேக ஆராதனைகள், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை, கூழ் வார்த்தல், அம்மன் திருவீதி உலா, தெருக்கூத்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாதம்மாள் மற்றும் திரு நங்கைகள் செய்திருந்தனர்.






