search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengottai"

    • மாணவர்களுக்கு தீபாவளி அன்று பட்டாசை எவ்வாறு கையாளுவது, தீக்காயம் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது
    • சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்புத்துறை துணை அலுவலர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டார்

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

    முகாமில் மாணவர்களுக்கு தீபாவளி அன்று பட்டாசை எவ்வாறு கையாளுவது, தீக்காயம் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது, தீப்பிடித்து எரிந்தால் எவ்வாறு அணைப்பது மற்றும் அவசர உதவிக்கு தீயணைப்பு துறையை அணுக வேண்டிய தொலைபேசி எண் போன்ற மிக முக்கியமான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்புத்துறை துணை அலுவலர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சிவசங்கரன் செய்திருந்தார்.

    • நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்திற்கு சென்று வருகின்றன.
    • அண்மைக்காலமாக போக்குவரத்து நெரிசல் பள்ளி கல்லூரி நேரமான காலை மாலையில் அதிகரித்து காணப்படுகிறது.

    செங்கோட்டை:

    தமிழக கேரளா எல்லையில் மிக முக்கிய பகுதியாகவும் தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த விற்பனை தொழிலுக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் மற்றும் அண்டை மாநில பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இதன் காரணமாக அண்மைக்காலமாக போக்குவரத்து நெரிசல் பள்ளி கல்லூரி நேரமான காலை மாலையில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டை மேலபஜார் மகாத்மா காந்தி சாலை, தாலுகா அலுவலகம் பகுதி, வாஞ்சிநாதன் சிலை பகுதி, பஸ் நிலையம், வனத்துறை சோதனை சாவடி போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் காய்கனி வாரச்சந்தை நாட்களில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தபடுவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இதற்கு முக்கிய காரணம் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்றவற்றை ஓரமாக நிறுத்தாமல், போக்குவரத்து மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூராக கண்ட இடங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உலக முதியோர் தினம் மற்றும் பவ்டா நிறுவன தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ஆதரவற்ற முதியோர்கள் 25பேருக்கு அரிசி, பருப்பு எண்ணெய், சீனி, தேயிலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை பவ்டா நிறுவன அலுவலக வளாகத்தில் உலக முதியோர் தினம் மற்றும் பவ்டா நிறுவன தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைப்பொது மேலாளா் ஆர்தர்ஷ்யாம், முதுநிலை மேலாளா் லிவிங்ஸ்டன்விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். களஆய்வாளா் ரமேஷ் வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடா்ந்து நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ஆதரவற்ற முதியோர்கள் 25பேருக்கு அரிசி, பருப்பு எண்ணெய், சீனி, தேயிலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆதரவற்ற முதியோர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி பைகளை வாங்கி சென்றனா்.

    இதற்கான ஏற்பாடுகளை பவ்டா பணியாளா்கள் ராதா, அருணாசலம், ப்ரியா மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா். களஆய்வாளா் பிரேமா நன்றி கூறினார்.

    • புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை கோவில்களில் அதிகாலை முதலே துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    செங்கோட்டை:

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன், ஆஞ்சநேயர் கோவிலில்களில் புரட்டாசி சனி கருட சேவை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    அதிகாலை முதலே கோவிலில் துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போன்று செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலையிலும், மாலையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பிரானூர் பார்டர் ஆஞ்சநேயர், இலத்தூர் மதுநாதர் அறம் வளர்த்த நாயகி சமேத சனிஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கருட ேசவை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள ராமர், சீதை, ஆஞ்சநேயர் அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதர் சனிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது.

    • செங்கோட்டை குலசேகரநதார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
    • சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநதார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் உள்ள சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    மாலையில் சுவாமி , அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் சுவாமி அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார். மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    • செங்கோட்டை மேலூரில் நகர வாணியா் சமுதாய 24-ம் ஆண்டு கல்வி நிதி பரிசளிப்பு மற்றும் காந்தி் ஜெயந்தி விழா நடந்தது.
    • 10, 12ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மேலூரில் நகர வாணியா் சமுதாய 24-ம் ஆண்டு கல்வி நிதி பரிசளிப்பு மற்றும் காந்தி் ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட காந்தி படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனா். விழாவிற்கு நகர வாணியா் சமுதாய தலைவா் (கல்வி நிதி) குமரேசன் தலைமை தாங்கினார்.

    குற்றாலம் வாணியா் பவனம் டிரஸ்ட் தலைவா் துரைராஜ், மேலூர் சமுதாய தலைவா் ரவி, தஞ்சாவூர் தெரு சமுதாய தலைவா் முருகன், எஸ்.ஆர்.கே. தெரு கிழக்கு சமுதாய தலைவா் மோகன்ராஜ், எஸ்.ஆர்.கே. தெரு மேற்கு சமுதாய தலைவா் முருகையா, தஞ்சாவூர் தெரு துணைத்தலைவா் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    துணைச்செயலாளா் மாடசாமி இறைவணக்கம் பாடினார். செயலாளா் செண்பகக்குற்றாலம் வரவேற்றார். துணைத்தலைவா் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளா் முருகன் வரவு செலவு கணக்கு வாசித்தார்.

    தொடா்ந்து 10, 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவமாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்ற ஹரீஸ்கார்த்திக் என்ற மாணவனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிலக்கிழார் சுப்பையா செட்டியார் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் வாணியா் பவனம் டிரஸ்ட் முன்னாள் தணிக்கையாளா் செல்லப்பா, துணைச்செயலாளா் குருசாமி, மாவட்ட வாணியா் பேரவை தலைவா் குருவிகுளம் ஆனந்தராஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனா். மேலுார் வாணியா் சமுதாய செயலாளா் செந்தில்ஆறுமுகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


    • செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாத சுவாமி கோவில், ஓம் சக்திகோவில் உட்பட ஏராளமான கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 26-ந்தேதி தொடங்கிய விழா தொடர்ந்து 9 நாட்கள் நடந்து வருகிறது.

    செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாத சுவாமி கோவில், ஓம் சக்திகோவில் உட்பட ஏராளமான கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.பெரும்பாலான வீடுகளில் கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் திருவுருவ காட்சிகள், முளைப்பாரி செட், பொங்கல் செட், ஐஸ்வரேஸ்வரர் செட், கல்யாண செட், அழகர் செட் உள்ளிட்ட பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.

    நவராத்திரி சிறப்பு பற்றி செங்கோட்டையை சேர்ந்த வனராணி கூறுகையில், புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் இந்த பூஜை தொடங்கி 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. அமாவாசை அன்று கலசத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அதில் அரிசி நிரப்பி மாவிலை வைத்து அதன் நடுவில் தேங்காய் வைத்து தேவியை மனதில் தியானித்து கொலு தட்டில் வைத்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்றார்.

    • செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
    • அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதனை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் போது தோண்டப்படும் பள்ளங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மேலும் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரகணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தற்போதும் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் சென்று வருகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைமை மாநாடு நடைபெற்றது.
    • மாணவர்கள் டைட்டன் இங்கிலீஷ் குழு, முத்தமிழ் குழு, கணித பைரேட்ஸ் குழு, அறிவியல் அட்வென்சர்ஸ் குழு என பிரிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைமை மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓ2 மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் சரஸ்மீனா கலந்து கொண்டனர். பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார், தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் டைட்டன் இங்கிலீஷ் குழு, முத்தமிழ் குழு, கணித பைரேட்ஸ் குழு, அறிவியல் அட்வென்சர்ஸ் குழு என பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள மாணவர்கள் தங்களுடைய படைப்புகள் பற்றிய விரிவாக்கத்தை பெற்றோரிடம் எடுத்துரைத் தனர்.

    வகுப்புகள் அனைத்தும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது . மழலையர் பிரிவு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற இவ்விழாவில் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான கணித பைரேட்ஸ் குழு முதல் பரிசை தட்டிச் சென்றது.இம்மாநாடு மாணவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்தி அவர்களின் தனித்திறமையை ஊக்கு விக்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.




    • தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இசக்கிராஜ்(வயது 35).
    • இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் மத்தளம்பாறையை சேர்ந்த பத்மாவதி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இசக்கிராஜ்(வயது 35).

    கொலை

    இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் மத்தளம்பாறையை சேர்ந்த பத்மாவதி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று மதியம் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது அங்கு அவரது மாமனார் முருகேசன் வந்துள்ளார். 2 பேரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் முருகேசன் திடீரென பத்மாவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    விசாரணை

    இதுதொடர்பாக புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து முருகேசனிடம் விசாரணை நடத்தினர். முருகேசன் அப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் தெருக்களுக்கு குடிதண்ணீர் திறந்துவிடும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லாததால் இசக்கிராஜை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

    ஆனால் இசக்கிராஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவரது முதல் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு பத்மாவதியை 2-வதாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    வாக்குவாதம்

    இந்நிலையில் வளர்ப்பு தந்தையான முருகேசன் தனது 2-வது மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆனதில் இருந்தே மருமகளை தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது முருகேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் ஆத்திரத்தில் பத்மாவதியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார்.

    பின்னர் அனைவரையும் நம்ப வைப்பதற்காக மருமகள் அடிக்கடி செல்போனில் பேசியதாவும், அவளது நடத்தை சரியில்லை என்றும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
    • சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனை போன்று புரட்டாசி மாதம் ஆறுமுகசாமி ஒடுக்க கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.

    இதனைப்போன்று இலத்தூர், புளியரை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோஷ வாழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் இதனை காண சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    • உலக வங்கியின் நிதியுதவியுடன் நீர் வளம் நில வளம் என்ற திட்டத்தினை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • உலக வங்கி நிதி உதவியால் வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி நிபுணர் குழு வருகை தந்தது.

    செங்கோட்டை:

    உலக வங்கியின் நிதியுதவியுடன் நீர் வளம் நில வளம் என்ற திட்டத்தினை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    உலக வங்கி நிதி உதவியால் வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி நிபுணர் குழு வருகை தந்தது.

    வேளாண்மை துறையின் சார்பாக ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த திருந்திய நெல் சாகுபடி, மண்ணை வளப்படுத்த பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி உள்ளிட்ட சில திட்டங்களை சிற்றாறு வடிநில பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.

    அதன் பின் விளைவுகளை ஆய்வு செய்யும் பொருட்டு உலகவங்கியின் நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ்டோட் ஜீஸ்டிக்மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனுஆய்வு செய்தனர்.

    முதலாவதாக செங்கோட்டை வட்டாரம் இலத்தூர் கிராமத்தில் பெரியகுளத்தில் ஒட்டுமொத்த பின்விளைவுசாகுபடி திடலான தக்கைபூண்டு திடல்களை பார்வையிட்டனர். முக்கிய முன்னோடி விவசாயிகளிடம் கலந்து ஆலோசனை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து செங்கோட்டை கீழூர் கலங்காத கண்டி கால்வாய் பாசன பகுதியில் ஒட்டுமொத்த திருந்திய நெல் சாகுபடி திடல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது உலக வங்கி குழுவினர் முன்னோடி விவசாயி யான சங்கர சுப்பிரமணியன், முத்து சிவ கிருஷ்ணன், அக்பர் அலி, புளியரை விவசாய சங்க தலைவர் செல்லத்துரை உள்ளிட்ட விவசாயிகளிடம் திட்ட செயலாக்கத்தின் விளைவு களை கருத்துப்பரிமாற்றம் செய்தனர்.

    ஆய்வின்போது சென்னையில் இருந்து வருகை தந்த பயிர் நிபுணர் சிவக்குமார், கிருஷ்ணன், பொறியாளர் சந்திரசேகரன், விஜய் சாகர், விஜயராம், ஜூடித் டி சில்வா வருகை தந்தனர். தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர்மற்றும் துணை இயக்குனர் நல்ல முத்துராஜா உலகவங்கி நிபுணர் குழுவிற்கு துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பற்றி விளக்கிக் கூறினார்கள்.

    வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் செங்கோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறிக்கை சமர்ப்பித்தனர். முன்னோடி விவசாயிகள்இலத்தூர் ரமேஷ், பெரிய இசக்கி, அண்ணசாமி ,கருப்பசாமி, புளியரை செல்லத்துரை, செங்கோட்டை சங்கர சுப்பிரமணியன், முத்து சிவ கிருஷ்ணன், அக்பர் அலி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இலத்தூரில் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். செங்கோட்டை பகுதியில் உதவி வேளாண்மை அலுவலர் குமார் மற்றும் ஆத்மா திட்ட உதவி மேலாளர் மாரிராஜ் செய்திருந்தனர்.


    ×