search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengottai"

    • செங்கோட்டை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.
    • அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு, அன்னதான கூடத்தில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை புஷ்பாஞ்லி வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    • கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.
    • நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர்சந்தனம் போன்ற 36 நறுமணம் வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர்சந்தனம் போன்ற 36 நறுமணம் வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கணேஷ பட்டர் செய்தார். பூஜை முடிவில் கேசரி, பொங்கல், தேங்காய் சாதம், லெமன் சாதம், பஞ்சாமிர்தம், சுண்டல் என 6 வகை அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டாக படிதாரர்கள் செய்திருந்தனர்.கொட்டும் மழையிலும் செங்கோட்டை மற்றும்அதன்சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் நூலகர் ராமசாமி வரவேற்று பேசினார்.

    வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம், வாசகர் வட்ட இணைச் செயலாளர் செண்பககுற்றாலம், நூலக போட்டித் தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.


    மதுரையை சேர்ந்த சர்வதேச டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன், செங்கோட்டை காதி நிறுவன மேலாளர் மாரியப்பன், ரோட்டரி கிளப்ஆப் குற்றாலம் தலைவர் திருவிலஞ்சி குமரன், ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை செயலாளர் அபு அண்ணாவி, எஸ்.எம்.எஸ்.எஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சங்கர்ராமன், கடையநல்லூர் வாசகர் வட்ட தலைவர் ஜெயராமன், சுரண்டை புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், வாசகர் அய்யப்பன், மைதீன் பிச்சை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பணியாளர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பது தெரியவந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த மன்றத்தில் சில முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான சிறப்பு தனிப்படை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பதும், உரிமம் இல்லாத 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அந்த மன்றத்திற்கு சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் புன்னைவனம் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
    • சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் புன்னைவனம்(வயது 22). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

    சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது
    • 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தார்

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தையும், 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் 7-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் நடைபெறுகிறது.
    • நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று இரவு சூரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருக பெருமானையும் சூரபத்மர்களையும் வழிபட்டுனர்.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்
    • 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும், 29-ந் தேதி திருமலை குமரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவில் யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் வைபோகம் நடைபெறும்.

    வருகிற 30-ந் தேதி மதியம் 2.00 மணிக்கு முருக பெருமாள் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு முக்கிய ரத வீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பத்கர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்படும். 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குழாய் மூலமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, பாவூர்சத்திரம், வழி சுரண்டை நெடுஞ்சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு குழாய் மூலமாக தாமிரபரணிகூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

    செங்கோட்டை சன்னதி தெரு நடுமுடுக்கு வழியாக புதூர் பேரூராட்சி பகுதி களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் செல்லும் பைப் லயன் செல்லுகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அங்கு சகதிகாடாக காட்சி யளிக்கிறது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது.
    • குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி கா்ப்பகால பராமரிப்பு பற்றியும், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், பொன்னுலிங்கம், பேபிரெசவுபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனா். குழந்தை வளா்ச்சித்துறை திட்ட அலுவலக கண்காணிப்பாளா் சாகுல்ஹமீது வரவேற்று பேசினார்.

    அதனைதொடா்ந்து நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி விழாவை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்தார். குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி கா்ப்பகால பராமரிப்பு பற்றியும், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை துணை அலுவலா் சேக்முகைதீன், சமுதாய நாட்டாமை கிருஷ்ணன், உதவி நாட்டாமை மாதவராஜ், கணக்கப்பிள்ளை கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கா்ப்பிணி தாய்மார்களுக்கு வாழ்த்துரை வழங்கினா்.

    விழாவில் 70கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளா் இருளப்பன், மேற்பார்வையாளா்கள் சிவகாமி, அண்ணாமலை மற்றும் பழனியம்மாள் வட்டார ஒருங்கிைணப்பாளா் உதயராணி, மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார உதவியாளா் சண்முகசுந்தரி நன்றி கூறினார்.

    • செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு செல்லும் முக்கிய சாலையாக திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திகழ்கிறது.
    • பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு செல்லும் முக்கிய சாலையாக திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திகழ்கிறது.

    கேரளாவிற்கு காய்கறிகள், உணவு பொருட்கள் உள்பட சரக்குகளை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் நூற்றுக் கணக்கான லாரிகள், கனரக வாகனங்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான வாக னங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் செங்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அலுவலகம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள தொடர் பள்ளங்கலால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இப்பகுதியில் பருவமழை பெய்து வருவதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    அவ்வப்போது அதிகாரி கள் பள்ளங்களை சரி செய்வதும் பின் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. எனவே இங்கு தரமான சாலை அமைத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர்.
    • முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, பொறியாளா் ஜெயபிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர். பின்னா் அ.தி.மு.க. உறுப்பினா்கள் ஜெகன், முத்துப்பாண்டி, தி.மு.க. உறுப்பினா்கள் ரஹீம், இசக்கித்துரைபாண்டியன் ஆகியோர் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிடத்தில் நிரந்தர காங்கிரீட் மேற்கூரை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பணிகளை நிறுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

    அதனைத்தொடா்ந்து தி.மு.க. உறுப்பினா் ரஹீம் தலைமையில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனா். பின்னா் கூட்டம் முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. உறுப்பினா்கள் நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலக வளாகம் முன்பு முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.



    ×