

செங்கோட்டை:
செங்கோட்டை பவ்டா நிறுவன அலுவலக வளாகத்தில் உலக முதியோர் தினம் மற்றும் பவ்டா நிறுவன தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைப்பொது மேலாளா் ஆர்தர்ஷ்யாம், முதுநிலை மேலாளா் லிவிங்ஸ்டன்விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். களஆய்வாளா் ரமேஷ் வரவேற்று பேசினார்.
அதனைத்தொடா்ந்து நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ஆதரவற்ற முதியோர்கள் 25பேருக்கு அரிசி, பருப்பு எண்ணெய், சீனி, தேயிலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆதரவற்ற முதியோர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி பைகளை வாங்கி சென்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை பவ்டா பணியாளா்கள் ராதா, அருணாசலம், ப்ரியா மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா். களஆய்வாளா் பிரேமா நன்றி கூறினார்.