search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees crowd"

    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் இருமுடி கட்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர பூஜைகளுக்காக கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது.

    அன்று முதல் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்து அய்யப்பனை தரிசித்து செல்கின்றனர். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சபரிமலை மற்றும் பத்தினம்திட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வந்தது.

    இதனால் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்து விட்டதால் பக்தர் களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் இருமுடி கட்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்துள்ளது.

    • புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை கோவில்களில் அதிகாலை முதலே துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    செங்கோட்டை:

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன், ஆஞ்சநேயர் கோவிலில்களில் புரட்டாசி சனி கருட சேவை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    அதிகாலை முதலே கோவிலில் துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போன்று செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலையிலும், மாலையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பிரானூர் பார்டர் ஆஞ்சநேயர், இலத்தூர் மதுநாதர் அறம் வளர்த்த நாயகி சமேத சனிஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கருட ேசவை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள ராமர், சீதை, ஆஞ்சநேயர் அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதர் சனிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். பவுர்ணமி நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியதால் நேற்று முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றவாறு உள்ளனர். இன்று மதியம் 12 மணிக்கு பவுர்ணமி முடிந்தாலும் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வார்கள்.

    இதனால் கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    ஆனால் அந்த மழையை பக்தர்கள் பொருட்படுத்தவில்லை. மழைக்கு நடுவே மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் அவர்கள் கிரிவலம் சென்றனர்.

    கிரிவல பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கிரிவலப் பாதையில் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர்.

    மகா தீபம் ஏற்றப்படும்போது கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் கிரிவலப் பாதையில் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #TirupatiTemple #Tirupati
    திருமலை:

    கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    திருப்பதியில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. டைம் ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கடைவீதிகளில் சுற்றித்திரிகிறார்கள்.

    பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்.

    கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.

    திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது.

    தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு கூறிய தாவது:-

    திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேர ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது.

    கடந்த 3-ந் தேதி இம்முறை முழுமையாக அமலுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை 5 லட்சத்து 43 ஆயிரத்து 308 தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதைப் பயன்படுத்தி, 4 லட்சத்து 2 ஆயிரத்து 11 பேர் மட்டுமே ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளனர். மேலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், 57 மணி நேரத்துக்கு பின் தரிசனம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    எனவே ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.

    பக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்டும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்றார்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 46 ஆயிரத்து 940 பேர் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். #TirupatiTemple #Tirupati
    ×