search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sellur Raju"

    • வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர். போல் விதவிதமாக கோட்-சூட் போட்டுக் கலக்குகிறார்.

    வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இதுபற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமாக குறிப்பிட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர். போல் விதவிதமாக கோட்-சூட் போட்டுக் கலக்குகிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என்றார்.

    • தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.
    • இந்த வரிசையில் விஜய்யும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய்காந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய் தற்போது இணைந்துள்ளார். இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவருக்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் ரசிகர்களின் ஆதரவு காரணமாக அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஷாலே அரசியலுக்கு வரும்போது.. விஜய் வருவதற்கு என்ன..? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.


    விஜய் -விஷால்

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாரும் அரசியல் செய்யலாம். விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுகிறார். ஆனால் விஷால் நான்கு, ஐந்து படங்களில் நடித்ததும் நான் தான் அடுத்த முதல்வர் என்று கட்சி ஆரம்பித்தார். ஆனால் அந்த கட்சி எங்கு போனது என்று தெரியவில்லை.

    கமல்ஹாசன் கூட கட்சி ஆரம்பிக்கும் போது மக்கள் நீதி மய்யம் என்று கூறினார். ஆனால், தற்போது நீதி ,மய்யம் எல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. விஜய்யின் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்களை அவர் ஈர்த்துள்ளார். அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
    • ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு ஆடியோ தான் காரணமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல பி.டி.ஆர். கெட்டுள்ளார். இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என்பதால் சாதாரண இலாகாவை கொடுத்துள்ளனர்.

    நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுக்கள்.

    ஓ.பி.எஸ்., இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்.

    எங்களுடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க. மட்டும் தான். பா.ஜ.க.வும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    நடிகர் கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என்று தெரியவில்லை.

    எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    • தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    10லட்சம் பேர் பார்த்து மகிழும் சித்திரை திருவிழா வில் இந்த ஆண்டு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. 5 பேர் உயிரி ழந்துள்ளனர். இதனை மனவருத்தத்தோடு சொல்கி றேன்.

    வைகை ஆற்றில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு அதிகாரிகளின் கவன குறைபாடே காரணம்.சித்திரை திருவிழா வரலாற்றில் இதுவரை துயர சம்பவங்கள் நடந்ததில்லை. தி.மு.க. ஆட்சியில் மட்டுமே இவ்வாறு நடக்கிறது. வைகை ஆற்றில் 250மீட்ட ருக்கு உட்பட்ட பகுதியில் 3பேர் மூழ்கி உயிரிழந்துள் ளனர்.

    மேலும் சமூக விரோதி களை கண்காணிக்க போலீ சார் தவறியதால் பல இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தண்ணீர் அதிகமாக வந்தபோது கூட உயிரிழப்பு இல்லை. தற்போது தான் உயிரிழப்பு கள் ஏற்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியும், நிர்வாகமும், குளறுபடியும், குழப்பமுமாக உள்ளது.

    வருங்காலங்களில் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி களுக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    ஆற்றுக்குள் இறங்கு பவர்களை காவல்துறை கண்டித்து எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும்.ஆற்றில் அழகர் மட்டும் தான் இறங்க வேண்டும். ஆனால் எல்லோரும் இறங்குகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் சாரம் கட்டி தனி வழியில் பக்தர்கள் சென்றனர். இப்போது அழகருக்கு முன்பாகவே பக்தர்களும் ஆற்றில் இறங்கிவிடுகிறார்கள்.

    தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்க வில்லை. கவர்னரை திமுகவினர் விமர்சனம் செய்யும் போது அவர் எப்படி சும்மா இருப்பார்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கருத்து
    • செல்லூர் ராஜூ தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என அமர் பிரசாத் ரெட்டி பதில்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை, வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி. "இத்தனை நாட்கள் தெர்மோகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது", என அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன், செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மோகோல் மிதக்கவிட்ட படத்தையும் அமர் பிரசாத் ரெட்டி பகிர்ந்துள்ளார்.

    • பாஜகவிலிருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும் என செல்லூர் ராஜூ வலியுறுத்தல்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்களை பாஜகவில் சேர்த்தபோது இனித்தது. இப்போது அங்கே இருந்து இங்கே வரும்போது கசக்கிறதா? பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது.

    கூட்டணி கட்சிகள் தோளில் ஏறி உட்கார்ந்து காதை கடிப்பதையெல்லாம் அதிமுக பொறுத்துக்கொண்டிருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

    • 33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை.
    • நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகி விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை. நமது ஆட்சியில் கொண்டு வந்த ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை. காரில் பவனி வருகிறார்கள்.

    சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண வரி என பல்வேறு வரி உயர்வினாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    விடியல் தருவேன் என கூறி மக்களை ஏமாற்றி 505 வாக்குறுதிகளை தந்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தொகுதியெங்கும் தி.மு.க. காரர்கள் தான் உள்ளனர். கண்ணுக்கெட்டிய தூரம் காங்கிரஸ்காரர்களை காணவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி, அவர் சிலை மீது காவித்துண்டு போடுபவர்கள் மனித பிறவி அல்ல
    • இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்.

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல, ஒரு இழிவான பிறவி. எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும். காவிதுண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும்.

    அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது. அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரின் சிலைக்கு காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் இப்படி செயல் படுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மின்கட்டணம், சொத்து வரி, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மின்கட்டணம், சொத்து வரி, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி அவர் பேசியதாவது:-

    தற்போது தமிழகம் முழுவதும் வீட்டு வரி அதிகளவில் உயர்த்தப்ப ட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா? என தோன்ற வைக்கிறது.

    தமிழகத்திலேயே மக்கள் தி.மு.க. ஆட்சியில் தினமும் அல்லாடி வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியிலும் தி.மு.க. ஆட்சியை அமைய அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் பேசி உள்ளார். தமிழக மக்கள் கஷ்டப்படுவது போதாதா? புதுச்சேரியும் கஷ்டப்பட வேண்டுமா? என்பதை மு.க.ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறை வேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் ஆதார் எண்ணை, மின் அட்டையோடு இணைப்போம் என்று சொன்னீர்களா? மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ளனர்.

    விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின் போது முதல்வர் சரி செய்வேன் என ஞான உதயம் வந்து அறிவிக்க வேண்டும் என மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

    உதயநிதிக்கு பட்டாபிஷேகம், மக்களுக்கு வரி சுமையா? கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி ஆகிவிட்டது தி.மு.க. கட்சி. நாளைய தினம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய உள்ளார்கள்.

    முன்பு மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அது போல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்துவரி, மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    முடிசூட்டு விழாவின் போதாவது மக்களுக்கு இனிப்பான செய்தியை சொல்ல வேண்டும் தி.மு.க. அரசு.

    இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.

    • பள்ளிகளுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடிக்கின்றனர்.

    தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் பரவை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு தலைமை தாங்கிய பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது:

    குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு சொந்த ஊர். எனவே அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருகிற கட்சி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். அது பா.ஜ.க கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

    கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். பின்னர் இப்போது தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி மாறுவார். அ.தி.மு.க.வில் இருந்து கட்சி மாறியவர்கள் கூட தி.மு.க.வில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். தற்போது தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை, எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலை இருந்தது.

    ஆனால் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர். பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. இதை பார்க்கும் போதும், கேட்கும் போதும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

    மதுரை

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந் தேதி கடை பிடிக்கப்படுகிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அன்றைய தினம் மவுன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.துணை செயலாளர் வில்லா புரம் ராஜா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு ஆலோ சனைகள் வழங்கி பேசிய தாவது-

    அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை, என்று அனைத்து நலத்திட்டங்களை யும் ரத்து செய்துவிட்டு மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை குறை கூற என்ன தகுதி இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொன்ன அவர்கள் தற்போது ஆதாரை இணை யுங்கள் என்று பிரச்சினை யை திசை திருப்பு கிறார்கள்.

    மது கடையை மூடுவோம் என்றார்கள். ஆனால் டார்கெட் வைத்து மதுவை விற்பனை செய்கிறார்கள். தி.மு.க. எப்போதும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

    புரட்சி தலைவியின் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் வருகிற 5-ந் தேதி காலை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அன்று மாலை 4 மணி அளவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி ரோடு மேலமாசி வீதி வழியாக மேலமாசி வீதி-வடக்கு சந்திப்பு வரை ஊர்வலமாக வந்து புரட்சித்தலைவி அம்மாவு க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்ல. தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்ட மதுரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தி.மு.க. அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட ஓரணியில் திரள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சோலை ராஜா, சண்முக வள்ளி, சுகந்திஅசோக், குமார், பாஸ்கரன், மாயத்தேவன், கே.வி.கே.கண்ணன், பார்த்திபன், பரமேஸ்வரன், கறிக்கடை முத்துகிருஷ்ணன், கலைச் செல்வம், புதூர் அபுதாகிர், ரமேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாஜக ஒற்றுமை கூட்டம் என்றும் மாற்றத்தை தரக்கூடிய சக்திபடைத்த கூட்டம் என்றும் கரு.நாகராஜன் கூறினார்.
    சென்னை:

    முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று விமர்சித்தார். 

    “பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும்.சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம்” என்றார் செல்லூர் ராஜூ.

    “எல்லா கட்சிகளும் தனித்தே போட்டியிடுவோம். எல்லா கட்சியும் தயார் என்றால் அதிமுக தயார். 2016ல் அதை நிறைவேற்றியிருக்கிறோம். 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் வந்திருக்கிறோம். யாருடனும் கூட்டணி கிடையாது. அதேபோல் எங்கள் தலைவர்கள் எடப்பாடியாரும், ஓபிஎஸ்-ம் சொல்ல தயாராக இருக்கிறார்கள். நாளைக்கே தேர்தலை வைக்க தயாரா? மக்கள் யார் பக்கம் என்பதை பார்த்துவிடுவோம். இதை அதிமுக வாய்சாகவே எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

    செல்லூர் ராஜூவின் இந்த கருத்து குறித்து பாஜக துணை தலைவா கரு. நாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
     
    காக்காவின் மகத்துவம் அவருக்கு (செல்லூர் ரலாஜூ) புரியாது. நமது முதாதையர்கள் எல்லாம் காக்காவாக இருப்பதால்தான் எல்லா சாமியையும்  கும்பிடும்போது காக்காவுக்கு முதலில் சாப்பாடு வைத்துவிட்டு சாப்பிடும் ஊரில் நாம் இருக்கிறோம். காக்காவை மட்டமாக பேசக்கூடாது. பல கட்சிக்கு போய் வந்துகொண்டிருக்கும் காக்கா கூட்டம் பாஜகவில் இல்லை. 

    காக்கா கூட்டத்தை பாருங்க, ஒண்ணா இருக்க கத்துங்கங்க... என்று பாட்டு உள்ளது. அதை செல்லூர் ராஜூ மறந்துவிட்டார். நாங்கள் விரட்டிவிட்டதும் ஓடும் காக்கா கூட்டம் அல்ல. பாஜக ஒற்றுமை கூட்டம். மாற்றத்தை தரக்கூடிய சக்திபடைத்த கூட்டம். எளிதாக அவர் இதை கடந்துபோக முடியாது. தனித்து போட்டியிடுவது குறித்து அவர் கூறுகிறார். நாங்கள் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். தனித்து போட்டியிட பாஜகவுக்கு சக்தியில்லாமல் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 488 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். சென்னை மாநகராட்சியில் 17 இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றது. பாஜகவை தனித்து போட்டியிட விட்டது தவறு என அதிமுக நிர்வாகிகளே வருத்தப்பட்டனர். செல்லூர் ராஜூ இப்படி பேசக்கூடாது. 

    இவ்வாறு கரு. நாகராஜன் கூறினார்.
    ×