என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அருகில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, குமார் உள்ளனர்.
பக்தர்கள் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம்- செல்லூர் ராஜூ பேட்டி
- பக்தர்கள் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
- தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
10லட்சம் பேர் பார்த்து மகிழும் சித்திரை திருவிழா வில் இந்த ஆண்டு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. 5 பேர் உயிரி ழந்துள்ளனர். இதனை மனவருத்தத்தோடு சொல்கி றேன்.
வைகை ஆற்றில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு அதிகாரிகளின் கவன குறைபாடே காரணம்.சித்திரை திருவிழா வரலாற்றில் இதுவரை துயர சம்பவங்கள் நடந்ததில்லை. தி.மு.க. ஆட்சியில் மட்டுமே இவ்வாறு நடக்கிறது. வைகை ஆற்றில் 250மீட்ட ருக்கு உட்பட்ட பகுதியில் 3பேர் மூழ்கி உயிரிழந்துள் ளனர்.
மேலும் சமூக விரோதி களை கண்காணிக்க போலீ சார் தவறியதால் பல இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தண்ணீர் அதிகமாக வந்தபோது கூட உயிரிழப்பு இல்லை. தற்போது தான் உயிரிழப்பு கள் ஏற்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியும், நிர்வாகமும், குளறுபடியும், குழப்பமுமாக உள்ளது.
வருங்காலங்களில் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி களுக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆற்றுக்குள் இறங்கு பவர்களை காவல்துறை கண்டித்து எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும்.ஆற்றில் அழகர் மட்டும் தான் இறங்க வேண்டும். ஆனால் எல்லோரும் இறங்குகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் சாரம் கட்டி தனி வழியில் பக்தர்கள் சென்றனர். இப்போது அழகருக்கு முன்பாகவே பக்தர்களும் ஆற்றில் இறங்கிவிடுகிறார்கள்.
தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்க வில்லை. கவர்னரை திமுகவினர் விமர்சனம் செய்யும் போது அவர் எப்படி சும்மா இருப்பார்?
இவ்வாறு அவர் கூறினார்.






