search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "self immolation"

    லாலாப்பேட்டையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற கணவரும் கருகினார்.
    லாலாப்பேட்டை:

    லாலாப்பேட்டை  அருகே உள்ள கொம்பாடிபட்டியை சேர்ந்தவர் அருள்சக்தி. இவரது மனைவி மைதிலி (வயது 37). இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். அருள்சக்தி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி மைதிலியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று இரவும் அருள்சக்தி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மைதிலி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மைதிலியை காப்பாற்றி முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதனால் தீயின் வெப்பம் தாங்காமல் அலறினர்.

    இருவரதும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று  2 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைதிலி பரிதாபமாக இறந்தார். சக்திவேல் தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    விருத்தாசலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(40)கொத்தனார். இவரது மனைவி வேம்பாயி(36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான மோகன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மேலும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு, தகராறு செய்தார். வேம்பாயி தர மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மோகன் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற வேம்பாயி மீதும் தீ பரவியது. படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சென்னை, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மோகன், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து விருத் தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இந்த நிலையில் அரியலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கல்யாணி. இவர் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காசிநாதன் மற்றும் அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோர் தனக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அபகரிக்க பார்ப்பதாகவும், வீட்டை சேதப்படுத்தியதாகவும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை கல்யாணி புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.



    அப்போது அருகில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார், பொதுமக்கள் கொண்டு வரும் பை உள்ளிட்டவற்றை முழுமையாக சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே அனுப்புகின்றனர். எனினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள மேலூர், செங்குந்தபுரம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு 1992-ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அரசு வழங்கிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ரூ.13லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வழங்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு தற்போதைய வழிகாட்டு மதிப்பை விட 2 மடங்கு உயத்தி வழங்குவது குறித்து, நிலம் கொடுத்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

    இந்நிலையில் ஒரே திட்டத்துக்காக நிலங்கள் கொடுத்தவர்களுக்கு, வழிகாட்டு மதிப்பை கொண்டு இழப்பீடு வழங்கப்படும் போது, கிராமத்துக்கு கிராமம் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. எனவே நிலம் கொடுத்த அனைவருக்கும் அப்போது அரசு கொடுத்த இழப்பீட்டு தொகையை விட 25 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என பாதிக்கப்பட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

    இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 550 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    வெம்பாக்கம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    செய்யாறு:

    வெம்பாக்கம் அருகே உள்ள பெருங்காட்டூரை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு 1மகன் 1மகள் உள்ளனர்.

    அபிராமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அபிராமி சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அபிராமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மோரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவரின் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எடையூர் கிராமம் மேலபாண்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

    இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும் செந்தில்குமார் குடித்துவிட்டு வந்ததை தமிழ்செல்வி கண்டித்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த தமிழ்ச்செல்வி மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தாராம். உடன் தமிழ்ச்செல்வியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சமையல் செய்த போது எதிர் பாராதவிதமாக பெண்ணின் சேலையில் தீ பிடித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பிரியா (35) என்பவருக்கும் 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிளஸ்-2 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று பிரியா தனது வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது.

    பலத்த தீக்காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் ராதிகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திசையன்விளையில் தீயில் கருகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    திசையன்விளை சன்னதி தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி செல்வகுமாரி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இது வரை குழந்தை இல்லை.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி செல்வகுமாரி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று செல்வகுமாரி பரிதாபமாக இறந்தார்.

    அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்தாரா? அல்லது சமையல் செய்யும் போது தீயில் கருகினாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேரன் மகாதேவி கோட்டாட்சித் தலைவரும் நேரில் சென்று காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமங்கலம் அருகே மனைவியை கொல்வதற்காக மண்எண்ணை ஊற்றி தீ வைத்த கணவரும் அதே தீயில் சிக்கி இறந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது எஸ்.வலையங்குளம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது29), கூலி தொழிலாளி.

    இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). இவர்களுக்கு 7 வயதில் செல்வகுமார் என்ற மகன் உள்ளார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இரவும் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த இளங்கோ வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து விட்டு கதவை சாத்தி விட்டு வெளியே வந்து விட்டார்.

    அப்போது உள்ளே இருந்த செல்வகுமாரின் அழுகுரல் கேட்டது. உடனே மகனை காப்பாற்ற இளங்கோ கதவை திறந்து கொண்டு உள்ளே போனார். அப்போது உடலில் தீயுடன் அலறி துடித்துக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் கணவரை கட்டிப்பிடித்தார். இதில் அவரது ஆடையிலும் தீ பிடித்தது.

    சிறிது நேரத்தில் அவரும் வலியால் அலறி துடித்தார். கணவன்-மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.

    ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளங்கோ பரிதாபமாக இறந்தார். இன்று அதிகாலை பஞ்சவர்ணமும் இறந்தார். #tamilnews
    குடியாத்தத்தில் குளியலறையில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்த நர்சு பரிதாபமாக இறந்தார்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் நல்லூர் பேட்டை புத்தர்நகரை சேர்ந்தவர் அருணாசலம் மகள் சுஜிதா (வயது 20). நர்சிங் படித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த சுஜிதா குளியலறைக்கு சென்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது உடலில் வேகமாக பரவிய தீ பற்றி எரிந்தது.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். தீயை அணைத்து சுஜிதாவை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிக்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.குடியாத்தம் டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து சுஜிதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி சங்கீதா (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. தம்பதிக்கு 1 மகள் உள்ளார்.

    விஜய், சங்கீதாவிற்கு கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சங்கீதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் உதவி-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகின்றார்.

    திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் ஒரு திபெத்தியர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார்.
    பீஜிங்:

    திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும், புத்த கலாச்சாரத்தை ஒடுக்கும் சீன அரசை கண்டித்தும், தலாய் லாமா நாடு திரும்ப கோரியும் திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து தீக்குளிப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. திபெத் விடுதலைக்காக ஏராளமான புத்த மத துறவிகளும் உயிரை மாய்த்துள்ளனர்.

    இந்நிலையில் பாரம்பரிய திபெத்திய பிராந்தியமான நகாபா கவுண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது ஒரு திபெத்தியர் தீக்குளித்தார். அவர் பெயர் டோர்பே. அவர் தீக்குளிப்பதற்கு முன், தலாய் லாமா நாடு திரும்ப வேண்டும், அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று முழக்கமிட்டுள்ளார். தீயில் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோர்பே, உயிரிழந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.



    2009ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் திபெத் விடுதலைப் போராட்டத்தில் இதுவரை துறவிகள் உள்ளிட்ட 154 திபெத்தியர்கள் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #TibetanProtest #TibetanSelfImmolation

    செய்யாறு அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாணவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்யாறு:

    செய்யாறு டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் அஸ்வின்குமார் (20). பூந்தமல்லி அருகே உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சமீபத்தில் நடந்த தேர்வில் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து கொண்டு செய்யாறு அண்ணா கலைக்கல்லூரி மைதானத்துக்கு சென்றார். அங்கு வைத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். மைதானத்தில் வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து திடுக்கிட்டனர். அஸ்வின்குமார் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    செய்யாறு டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×