search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tried"

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு நீதி முகாம் நடந்தது. அப்போது சென்னிமலை காந்தி நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரது மனைவி வளர்மதி (வயது 43) மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த மண் எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வளர்மதி மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.

    பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் இவரது கணவர் சாமிநாதன் இவரை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சாமிநாதன் வளர்மதியின் தாலிசெயினை பிடுங்கி விட்டு வளர்மதியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி வளர்மதி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் வளர்மதி தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கோவை சரவணம்பட்டி போலீசில் இளம்பெண் பரபரப்பு புகார்
    • வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்ய முயன்றார்

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

    நான் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளாராக பணியாற்றி வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவரின் நண்பரான ஹட்கோ காலனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உன்னி என்ற மதுசூதனன் (36) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்.

    எனது கணவரின் நண்பர் தானே என்ற அடிப்படையில் நான் சகஜமாக பழகி வந்தேன். சம்பவத்தன்று நான் வெளியே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தேன்.

    வீட்டில் நான் தனியாக இருந்த போது உன்னி என்ற மதுசூதனன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். தனியாக இருந்த என்னை அவர் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து நான் சத்தம் போட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கினார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    எனவே வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த என்னை பலாத்காரம் செய்ய முயன்ற எனது கணவரின் நண்பர் உன்னி என்ற மதுசூதனன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் தனியாக இருந்த நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற உன்னி என்ற மதுசூதனன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இந்த நிலையில் அரியலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கல்யாணி. இவர் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காசிநாதன் மற்றும் அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோர் தனக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அபகரிக்க பார்ப்பதாகவும், வீட்டை சேதப்படுத்தியதாகவும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை கல்யாணி புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.



    அப்போது அருகில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார், பொதுமக்கள் கொண்டு வரும் பை உள்ளிட்டவற்றை முழுமையாக சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே அனுப்புகின்றனர். எனினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள மேலூர், செங்குந்தபுரம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு 1992-ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அரசு வழங்கிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ரூ.13லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வழங்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு தற்போதைய வழிகாட்டு மதிப்பை விட 2 மடங்கு உயத்தி வழங்குவது குறித்து, நிலம் கொடுத்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

    இந்நிலையில் ஒரே திட்டத்துக்காக நிலங்கள் கொடுத்தவர்களுக்கு, வழிகாட்டு மதிப்பை கொண்டு இழப்பீடு வழங்கப்படும் போது, கிராமத்துக்கு கிராமம் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. எனவே நிலம் கொடுத்த அனைவருக்கும் அப்போது அரசு கொடுத்த இழப்பீட்டு தொகையை விட 25 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என பாதிக்கப்பட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

    இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 550 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தேர்வு தோல்வி பயத்தால் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். தேர்வு தோல்வி பயம் காரணமாக அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் காந்திரூபன், பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவருடைய மகன் ஷாம்பிரதீப் (வயது 18). ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார். ஆனால் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகிறது. இதனால் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்று மாணவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் அவர் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு வந்துள்ளார். மேம்பாலத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கத்தியால் தனது கையில் வெட்டியிருக்கிறார்.

    பின்னர் சுமார் 30 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவர் ஷாம்பிரதீப்பை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×