search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbed"

    • வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை மருதமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 21). இவர் கோவை அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    மனோஜ்குமார் தனது நண்பருடன் ராம்நகரில் உள்ள நேரு வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் மனோஜ்குமாரை கத்தி முனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ்குமார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உதவியுடன் மனோஜ்குமார் ஒரு வாலிபரை மடக்கி பிடித்தார். மற்ற 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்றனர். இதனையடுத்து அவர் பிடிபட்ட வாலிபரை காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த பிளம்பர் வேலை செய்து வரும் தினேஷ் (23) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் மற்றும் சம்பவம் நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    அதில், மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்றது ரத்தினபுரி 7-வது வீதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வைஷ்ணவ் (24) மற்றும் நியூ சித்தாபுதூரை சேர்ந்த சிங்காராம்(21) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    • ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.
    • சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    கோவை

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார்.

    அப்போது சாமிநாதன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் மேஜையில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    வீடு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாமிநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

    • 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • ரூ. 3 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றனர்.

    கோவை,

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் சந்துரு (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது நவ இந்தியா ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 3 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

    கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் மதுசூதனன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் மதுசூதனனை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணம் ரூ. 600, ஒரு ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இது குறித்து மதுசூதனன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர் கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் நேற்று கோவை வந்தார்.

    தனது அறைக்கு செல்வதற்காக தண்ணீர் பந்தல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 3 சம்பவமும் ஒரே நாளில் நடைபெற்றதால் இதில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் நர்சு உள்பட 2 பேரிடம் நகை பறித்த விருதுநகர் வாலிபரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
    • நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் அனிதா ஆரோக்கிய செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது தாய் நான்சி மற்றும் தோழி கீதாலட்சுமி ஆகியோருடன், பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தேவாயலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் டவுன்ஹால் ரோட்டில் மற்றொரு தேவா லயத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

    அப்ேபாது அவர்களை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். அந்த நபர் திடீரென்று அனிதாஆரோக்கிய செல்வி, கீதாலட்சுமி ஆகி யோர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த 2 பேரும் திருடன்... திருடன்... என கூச்ச லிட்டனர்.அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி நகை பறிப்பு சம்பவத்தை அறிந்து, உடனே கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டார். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை யில் அந்த நபர் பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தியதில் நகை பறிப்பில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (வயது 28) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து அனிதா ஆரோக்கிய செல்வியின் 1 பவுன் 5 கிராம் தங்க சங்கிலி மற்றும் கீதா லட்சுமி அணிந்திருந்த கவரிங் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலூர் பகுதியை சேர்ந்த தங்கமலர் என்பவர் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர் திருடி சென்றார்.

    இதே போல் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற மனோரஞ்சிதம் (62) என்பவரிடம் 2 பவுன் நகையும், பாண்டியம்மாள் (45) என்பவரிடம் 3 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
    • பயந்து போன மூதாட்டி பீரோவை காட்டியுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம்,மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மனைவி வாணி (வயது 56). இவர் தனது மகன் மணிக்குமாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்நேற்று மணிக்குமார் வேலைக்கு சென்று விட்டார் .அப்போது வீட்டில் வாணி மட்டும் தனியாக இருந்துள்ளார். வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த 30 வயது மதிக்கதக்க மர்ம நபர் வாணியை கத்தியை காட்டி மிரட்டி பணம் எங்கே வைத்துள்ளாய் என்று மிரட்டி கேட்டுள்ளார். இதனால் பயந்து போன வாணி பீரோவை காட்டியுள்ளார்.

    பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 90 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வாணி மயக்கம் அடைந்து விட்டார். மாலை வீடு திரும்பிய மணிக்குமாரிடம் சம்பவம் பற்றி வாணி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல்லடம் போலீசில் வாணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையத்தில் வேளாங்கண்ணியை சேர்ந்த மாரியப்பன் (வயது 46) என்பவர் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் அவரது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 4 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று உள்ளார்.திருமண நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டில் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 7 கிராம் தங்ககம்மல் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.
    • காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 49).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மோகனூரில் நிலம் வாங்கியது சம்பந்தப்பட்ட ஒருவருக்கு கொடுப்பதற்காக நேற்று மதியம் பரமத்தி வேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.

    பணம் ரூ.20 லட்சத்தை காரிலேயே வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று உடையை மாற்றிக் கொண்டு மோகனூர் செல்வதற்காக மீண்டும் காரை எடுக்க வந்தார். அப்போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பாலசுப்பிரமணி பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாலசுப்பிரமணி வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் ஏறி வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் செல்லும் வரை அவரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஸ்கூட்டரில் ஒரு நபரும், மோட்டார் பைக்கில் 2 நபரும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணி உடைமாற்ற வீட்டிற்குள் சென்ற உடன் கண் இமைக்கும் நேரத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து உடைத்து காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

    பட்டபகலில்ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். மர்ம நபர்கள் கார் கண்ணா டியை உடைக்கும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே வட கரையில் உள்ள அய்யனார் மற்றும் முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதில் கலந்து கொண்ட ராயபாளையம் கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மனைவி கலைவாணி (வயது37), மேலக்கோட்டை சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி ராம லட்சுமி மற்றும் திருமங்க லத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி தவமணி ஆகிய 3 பேரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், அவர்கள் அணிந்திருந்த தங்க செயினை அேபஸ் செய்தனர்.

    3 பேரிடம் மொத்தம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்தனர்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம், கோவலன் நகரை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 49). இவர் நேற்று இரவு கோவலன் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது ஆண்டாள்புரம், ஓதுவார்மடம் நாச்சியப்பன் மகன் கணேசன் (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ. 1500-ஐ பறித்துச் சென்றார். இதுபற்றி சுந்தரேசன் சுப்பிரமணியபுரம் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

    மதுரை வாடிப்பட்டி, அய்யங்கோட்டை, அம்பேத்கர் நகரைச்சேர்ந்த மாமுண்டி மகள் ஹரிணி மனோன்மணி (23). இவர் நேற்று இரவு விளாங்குடி பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஹரிணி மனோன்மணியிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள ரெயில் நிலையத்தில் இரண்டு ராணுவ வீரர்களின் உடைமைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புது டெல்லி :

    தலைநகர் டெல்லியில், பழைய டெல்லி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள், அங்குள்ள ஓய்வறையில் ஒன்றில் இன்று காலை தூங்கிக்கொண்டிருந்தனர். அந்நேரம், ராணுவ வீரர்களின் பெட்டிகள், அடையாள அட்டை, கைக்கடிகாரம் மற்றும் செல்போன்களை அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.

    இதுதொடர்பாக ரெயில்வே காவல் நிலையத்தில் ராணுவ வீரர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகமும்  விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    தலைநகர் டெல்லியில் வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் 35 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ளது மாடல் டவுன் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் தாமிரம் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், அந்த வியாபாரி நேற்று 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு காரில் சென்றார். அவருடன் டிரைவரும், மேனேஜரும் சென்றனர்.

    அப்போது அவர்களது காரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், காரை வழிமறித்தது. தங்களது கைகளில் இருந்த துப்பாக்கியால் மிரட்டி, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளையில் வியாபாரிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். #Tamilnews
    ×