என் மலர்
செய்திகள்

டெல்லியில் துணிகரம் - துப்பாக்கி முனையில் ரூ.35 லட்சம் கொள்ளையடித்த கும்பலுக்கு வலை
தலைநகர் டெல்லியில் வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் 35 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ளது மாடல் டவுன் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் தாமிரம் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அந்த வியாபாரி நேற்று 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு காரில் சென்றார். அவருடன் டிரைவரும், மேனேஜரும் சென்றனர்.
அப்போது அவர்களது காரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், காரை வழிமறித்தது. தங்களது கைகளில் இருந்த துப்பாக்கியால் மிரட்டி, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளையில் வியாபாரிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். #Tamilnews
Next Story