search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery"

    • போலீசார் ஆதரவின்றி சுற்றித்திரிபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரையும் மீட்டு உணவு மற்றும் உடை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்து யாசகம் பெறுபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ரெயில்வே இருப்புப்பாதை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஏட்டு சரவண செல்வம் மற்றும் போலீசார் ஆதரவின்றி சுற்றி திரிபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன்படி சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 53), திருவண்ணாமலை மாவட்டம் அத்திஅந்தன் போஸ்ட் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் ( 51) ஆகிய 2 பேரையும் மீட்டு உணவு மற்றும் உடை வழங்கினர்.

    பின்னர் அவர்களை தஞ்சாவூர் மாதாகோட்டையில் உள்ள விக்டோரியா முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்து நல்ல முறையில் பராமரிக்க கேட்டுக் கொண்டனர்.

    • ரூ.60 லட்சம் மதிப்பிலான 3 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது
    • அறநிலையத்துறையினர் அதிரடி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளியில் 3 ஏக்கர் நிலம் விவசாயி ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் செல்வராஜ், பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணன் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவர்களது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், குன்னம் ஆய்வாளர் சுசிலா, பேரளி (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், நில அளவையாளர் கண்ணதாசன் மற்றும் பேரளி கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக பேரளியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலமும் விரைவில் மீட்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.
    • அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி வள்ளியம்மாள் கோவில் கட்டளை பயன்பாட்டுக்காக 1963ல் தானமாக வழங்கியுள்ளார்.

    அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர். அதன்பின் அவர்களை அப்புறப்படுத்தி தனியார் ஆக்கிரமித்தனர். பின் பயன்பாடு இன்றி புதர்மண்டிய நிலமாக இருந்து வந்தது. கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு கோவில் சுவாதீனத்துக்கு நிலத்தை எடுத்துள்ளது.

    • ரூ.21.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு
    • மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உரியவர்களிடம் ஒப்படைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடா்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த செல்போன்களை மீட்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சைபர் கிரைம் போலீசார் மூலம் 105 செல்போன்களை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.21½ லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை மீட்ட போலீசாரை பாராட்டி, வெகுமதியும் வழங்கினார்.

    • திருப்பாதம்மா வேகமாக ஓடிவந்து ரெயிலில் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தவர் பிளாட்பாரத்துக்கும் ரெயிலுக்கும் இடையே சிக்கினார்.
    • படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீராலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கரேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பாதம்மா. இவர் தனது கணவருடன் உலவபாடு செல்வதற்காக தெனாலி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    விஜயவாடாவில் இருந்து கூடூர் செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ரெயில் பாபட்லா அடுத்த சீராலா ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    அப்போது திருப்பாதம்மா கழிவறைக்கு செல்ல ரெயிலில் இருந்து கிழே இறங்கினார். அவர் மீண்டும் வருவதற்குள் ரெயில் புறப்பட்டது.

    இதனைக் கண்ட திருப்பாதம்மா வேகமாக ஓடிவந்து ரெயிலில் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தவர் பிளாட்பாரத்துக்கும் ரெயிலுக்கும் இடையே சிக்கினார்.

    இதனைக் கண்ட ரெயில் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    ரெயில்வே போலீசார் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருப்பாதம்மாவை மீட்டனர்.

    படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீராலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓங்கோல் ட்ரீம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையே பெண் சிக்கியதால் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. 

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.
    • 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருகே, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் காயத்துடன் நேற்றிரவு மயங்கி கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.

    இதில், மயங்கி கிடந்த வாலிபர் மணியனூர் கந்தாயம்மாள் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்தி (வயது 33) என்பது தெரியவந்தது. கார்த்தி 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே வந்து சுற்றிதிரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கார்த்தி தவறி விழுந்து காயம டைந்தாரா? அல்லது வேறு யாராவது தாக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவின்றி தவித்த மூதாட்டியை போலீஸ் சூப்பிரண்டு மீட்டனர்.
    • கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமானது. மேலும் உணவு கிடைக்காமல் உயிருக்கு போராடிய அந்த மூதாட்டி ஒரே இடத்தில் கிடந்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று பார்த்து மூதாட்டியின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஆம்புலன்சு மூலம் மூதாட்டியை மீட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவருக்கு உதவியாக ஒரு பெண் போலீசையும் நியமித்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வயது மூப்பு காரணமாக மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் அவரை பார்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். ெதாடர்ந்து அவரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததை பொதுமக்கள் பாராட்டினர்.

    • அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார்.
    • இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம்.


    கடலூர்:

    அண்ணா கிராமம் ஒன்றியம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம்அண்ணாகிராமம் ஊராட்சிஒன்றியம் அழகுபெருமாள்குப்பம்ஊராட்சியில் ஊத்து குளம் உள்ளது இந்த குளம் மற்றும்குளத்திற்கு நீர் வரும் நீர்வரத்துவாய்க்கால் ஆகியவைஆக்கிரமிப்புசெய்யப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலையில் ரமேஷ் என்பவர் செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமாருக்கு மின்னஞ்சல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை தலைமையில் அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வீரன் (வயது58), செல்வி (46), மகேஸ்வரி (29), குணா (22), திருமூர்த்தி (21), பிரகாஷ் (17), முத்துக்கருப்பன் (39), கயல்விழி (22), விஜயசாந்தி (17) உள்ளிட்ட 9 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரிய வந்தது.

    உடனடியாக 9 பேரும், அவர்களுடன் இருந்த 5 குழந்தைகளும் உடமைகளுடன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான மதுரை மாவட்டம் புலிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தென் சிங்கம்புணரி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆய்வின்போது சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கிருஷ்ண மூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறையினர் உடனிருந்தனர். 

    • பள்ளத்தில் அடிபட்டு கிடந்த குதிரையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
    • குதிரைக்கு மரு–த்துவ சிகிச்சை அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ–ட்டம் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு அருகே உள்ள பள்ளத்தில், குதிரை ஒன்று முன்பக்க கால்கள் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலை–யில் விழுந்து கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தில் அடிபட்டு கிடந்த குதிரையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் தகவலின் பேரில் கால்நடை டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் அங்கு வந்த கால்நடை மருத்துவ குழுவினர், குதிரைக்கு மரு–த்துவ சிகிச்சை அளித்தனர்.

    • நெல்லையில் மீட்கப்பட்ட பெண் யானை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது
    • திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதியின்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது இந்து, சந்தியா, ஜெயந்தி, மலாச்சி, இந்திரா, கோமதி, சுமதி, கிரபி, ரூபாலி ஆகிய 9 யானைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 9 யானைகளுக்கு தலா ஒரு பாகன் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.இந்த நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அனுமதியின்றியும், போதிய பராமரிப்பு இல்லாமலும் வளர்க்கப்பட்ட யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்துவதாக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.இதன்படி வனத்துறையினர் சுமார் 67 வயதான சுந்தரி என்ற பெண் யானையை மீட்டு திருச்சியை அடுத்த எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். மறுவாழ்வு மையத்தின் புதிதாக வந்துள்ள சுந்தரி யானையை தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின் படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.மேலும் வனக் கால்நடை மருத்துவ அலுவலர் யானையை பரிசோதித்து அதன் வயது, உடல் நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைக்கு வழங்க வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிக்கை கொடுக்க இருக்கிறார். அதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அது மட்டுமின்றி யானைக்கு காச நோய் உள்ளிட்ட ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை அறிய யானையின் சளி, சாணம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு சில நாட்களில் ஏற்கனவே மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுடன் இந்த யானையும் சேர்க்கப்படும். அதுவரை சுந்தரி யானை தனிமையில் வைத்து பராமரிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.புதிதாக வந்துள்ள யானை சுந்தரியை சேர்த்து மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.நெல்லையில் இருந்து மீட்கப்பட்ட யானை சுந்தரி திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி.

    • மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×