search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rains"

    • கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
    • திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் (நேற்று மற்றும் இன்று) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றார்.

    இதற்கிடையே இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை 10 மணி வர இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    • தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமை ந்துள்ள குமுளி, தேக்கடி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.70 அடியாக உள்ளது. வரத்து 725 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2394 மி.கனஅடி.

    கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது. நீர்வரத்து 1406 கனஅடியாகவும், நீர் இருப்பு 6219 மிகனஅடியாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.17 அடியாக உள்ளது. வரத்து 7 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1640 மி.கனஅடி.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 49.80 அடியாக உள்ளது. இதன் மொத்த உயரம் 57 அடியாகும். மழை மேலும் நீடிக்கும் என்பதால் விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணைக்கு 41 கனஅடி நீர் வருகிறது. இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.85 அடியாக உள்ளது. வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 37.67 மி.கனஅடி.

    • கடந்த 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை
    • வீடுகளில் முதல் தளங்கள் வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் தத்தளிப்பு

    மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை காரணமாக பலர் வெளியேறிய நிலையில், வெள்ளத்தில் அளவு அதிகரிக்க மீட்புப்படையினர் வீட்டில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

    இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.

    கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை பெய்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது
    • இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக 231 பேர் உயிரிழந்துள்னர்

    இமாச்சல பிரதேசத்தில கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சிர்மாயுர் மாவட்டத்தில் உள்ள போயன்ட்டா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    மலாகி கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் ஞாயிறு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பான விபத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். 6731 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    • மதுரையில் மழை பெய்தால் சகதிக்காடாகும் மாநகர சாலைகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்



    செல்லூர் 60 அடி ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த 2 வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 11-ந்தேதி நகரில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஏற்கனவே மதுரை நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மேலும் சாலைகள் மோசமாகி தண்ணீர் தேங்கியும், சகதிகளாக மாறியும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

    இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். மதுரையில் சாலைகளில் திடீர் திடீரென உருவாகியுள்ள புதிய பள்ளங்களால் விபத்துகளும் ஏற்படுகிறது. பெண்கள், குடும்பத்துடன் செல்வோர் அடிக்கடி சாலைகளில் பள்ளத்தில் விழுந்து சிக்குவதை காண முடிகிறது. மதுரை நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் சாலை வசதி சரியாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    சிறிது நேரம் கனமழை பெய்தாலே மதுரையின் மையப் பகுதிகளான பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள். மேல வெளி வீதி, விளக்குத்தூண், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, அவனியாபுரம், காமராஜர் சாலை, மாட்டுத்தாவணி- ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீர் மறுநாள் காலை வரை வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அண்மையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகள், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலைகள் போடப்பட்டன. ஆனால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகதியில் பணிகள் நடைபெற்றதால் தற்போது மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தால் கூட முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.

    தொடர்மழை காரணமாக குலமங்கம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, காளவாசல்-தேனி பிரதானசாலை, புதுராமநாதபுரம் ரோடு, மேலமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்கள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    அந்த வழிகளில் செல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்தபடியே வாகனத்தில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் சரியாக குப்பைகள் அள்ளப்படாததாலும் பல இடங்களில் துர்நாற்றம் வீசியபடி இருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்காத வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    • கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி, பாலப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்து வருகிறது. மேலும் கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும், ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 81.04 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,062 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அலிகர் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

    இந்நிலையில் மழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுதல், வீடு இடிந்து விழுதல், இடிமின்னல் போன்ற விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

    அலிகர் மாவட்டத்தில் மூன்று நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதால், சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை முதல் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 140 மி.மீ மழை பதிவானதாக எட்டாவா வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆக்ராவிலும் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.

    வடகிழக்கு பருவ மழை இன்னும் 5 நாட்களுக்குப் பிறகுதான் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon #Rain
    சென்னை:

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் அதிக மழை கிடைக்கும்.

    வழக்கமாக தென்மேற்கு பருவமழை முடிந்ததும் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தம் காரணமாக இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. ஆனால் பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் எற்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களுக்குப் பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.



    தற்போது தமிழகத்தையொட்டி மன்னார் வளைகுடா பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இதற்கிடையே வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வருகிற 29-ந்தேதி புதிதாக காற்றழுத்த பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon #Rain


    தமிழகத்தில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்திருப்பதாகவும், பருவமழை குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #TNRain #MinisterUdhayaKumar
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 15 செமீ மழை பெய்துள்ளது. மானாமதுரையில் 13 செமீ, சித்தம்பட்டியில் 12 செமீ, ராமேஸ்வரத்தில் 9 செமீ, பரமக்குடியில் 8 செமீ மழை பதிவாகி உள்ளது.

    அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் சில மீனவர்களுக்கு இந்த தகவல் கிடைக்காததால் அவர்கள் கரை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக வருவாய்த்தறை அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து மழை நிலவரம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.



    தமிழகத்தில் இந்த சீசனில் 29 மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பருவமழை குறித்து மக்கள் அச்சப்ட தேவையில்லை. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடலுக்கு சென்று திரும்பாத 132 படகுகளில் 86 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 46 படகுகள் தகவல் தொடர்பின்றி இருக்கின்றன. 15 படகுகளுக்கு தகவல் தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ‘லுபான்’ என்ற புயலாக மாறி ஓமனை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார். #TNRain #MinisterUdhayaKumar

    கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். #Keralarains
    கோழிக்கோடு:

    கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது.

    தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிரிடப்பட்ட பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

    நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் மாயமானார்கள். இதையடுத்து சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

    அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அதிகாலை அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இது பற்றி அறிந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் மீட்பு பணிகளை விரைந்து செய்யுமாறு மந்திரிகள், தலைமை செயலாளர், கலெக்டர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு அறிவுறுத்தினார். கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    நிலச்சரிவால் கோழிக்கோடு-கொள்ளேகால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பலத்த மழை, நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் தங்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  #KeralaRain
    இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பல ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். #Rohingyarefugee
    டாக்கா:

    மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையில் ரோஹிங்கியா என்ற இஸ்லாமிய இன மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பாலான அகதிகள் வங்கதேசத்திற்கு சென்றனர். சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் நாட்டில் குடியேறி உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் அதிகம் வாழும் பகுதியான தென்கிழக்கு வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதனால் ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 30 ஆயிரம் கூடாரங்கள் வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் அழிக்கப்பட்டன.  9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #Rohingyarefugee
    ×