என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohingya refugee"

    • ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
    • வங்க தேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

    நைப்பியிதோ:

    மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, வங்க தேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கடல் வழியாக இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லும் முயற்சியிலும் ரோகிங்கியாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வங்க தேசத்தின் கோக்ஸ் பசார் அகதிகள் முகாமில் வசித்து வந்த ரோகிங்கியாக்களில் 267 பேர் படகு மூலம் இந்தோனேசியாவுக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது அவர்கள் சென்ற படகு மியான்மர் கடற்பகுதியில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 201 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 66 பேர் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் கடந்த 9-ம் தேதி நடந்துள்ளது.

    அதற்கு அடுத்த நாளான 10-ம் தேதி 247 ரோகிங்கியா அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மற்றொரு படகு கடலில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 226 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 21 பேர் உயிர் பிழைத்தனர். இந்த இரு நாட்களில் நடந்த படகு விபத்துகளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பல ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். #Rohingyarefugee
    டாக்கா:

    மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையில் ரோஹிங்கியா என்ற இஸ்லாமிய இன மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பாலான அகதிகள் வங்கதேசத்திற்கு சென்றனர். சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் நாட்டில் குடியேறி உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் அதிகம் வாழும் பகுதியான தென்கிழக்கு வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதனால் ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 30 ஆயிரம் கூடாரங்கள் வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் அழிக்கப்பட்டன.  9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #Rohingyarefugee
    ×