search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway gate"

    • பண்ருட்டி-சென்னை சாலையில் ெரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் கேட் லாட்சை நிரந்தரமாக மூடரயில்வே நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பராமரிப்பு பணியினால் தற்காலிகமாக ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே கேட்டை மூடினார். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரதிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தண்டவாள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
    • பள்ளி மாணவிகள் இந்த பகுதியை கடக்க சிரமப்படுகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி - நெல்லை சாலையில் உள்ள பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்களுக்கு இடையே சாலையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பராமரிப்புக்காக அகற்றப்பட்டன. பணிகள் முடிந்த பிறகும் சாலையில் பதிக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் சரி செய்யப்படாமல் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவ்வழியே வாகனங்களை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தண்டவாள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    ஏற்கனவே இந்தப் பகுதியில் நான்கு வழிச்சாலை மேம்பால பணிகள் நடந்து வருவதால் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட இந்த பகுதியை கடப்பதற்கு மிகுந்து சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சிமெண்ட் சிலாப்புகளை சீராக அமைத்து தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடுமலை வழியாக விரைவு ரயில்கள் செல்லும் பொழுது இந்த கேட் மூடப்படுகின்றது.
    • இந்த பகுதியில் ரோடு போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டு குழியுமாக காணப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் அருகில் உள்ள ராமசாமி நகர் செல்லும் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. உடுமலை வழியாக விரைவு ரயில்கள் செல்லும் பொழுது இந்த கேட் மூடப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் ரோடு போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டு குழியுமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால் சுமார் இரண்டு மணி நேரம் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் சென்றன.

    • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அங்குள்ள ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அன்று ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

    எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தென்காசி செய்தி மக்கள் தொ டர்பு அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்ப ட்டுள்ளது.

    • மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்பட்டது.
    • இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் தற்போது மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் - பசுமலையை இணைக்கும் அழகப்பன் நகர் ரெயில்வே கேட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்து தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    எனவே அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ரெயில்வே கேட், தண்ட வாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 8 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதனால் தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தென்காசி யில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேர பட்டணம், சடையப்பபுரம், பாவூர்சத்திரம் வழியாகவும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வ விநாயகபுரம் வழியாக தென்காசி சாலையில் வந்தடைந்து வழக்கமான சாலையில் சென்றது. இதனால் வாக னத்தில் செல்வோர் சிரமத்திற்குள்ளானார்கள்.

    • திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது
    • இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த சாலை வழியாக பஞ்சந்தாங்கி, தபால்புள்ளி, கிணற்றுப்பட்டி, குருந்தம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு விவசாயிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    மேலும் வடமதுரையிலிருந்து நத்தத்திற்கு செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள ரெயில்வேகேட் ஏற்கனவே 2 முறை உடைந்து விழுந்து ள்ளது. தற்போது மீண்டும் சாலையில் உடைந்துள்ளது. பயணிகள் செல்லாததால் சேதம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளோம். மேலும் முறையாக பராமரிக்காத தால் மழை காலத்தில் கேட் உடைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விசயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பிச்சையா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • ரெயில்வே கேட் அருகே பிச்சையா இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி சுண்ணாம்பு கால் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற பிச்சையா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    உடனே அவரது மனைவி சண்முக வடிவு சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார்.

    இதற்கிடையே அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே பிச்சையா இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அங்கே விரைந்து சென்று பிச்சையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகளுக்காக குளித்தலை ரயில்வே கேட் அடைக்கப்பட்டது
    • வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவிப்பு

    கரூர்:

    பராமரிப்பு பணிக்காக இன்று குளித்தலை ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதற்காக வாகனங்கள் செல்ல மாற்று வழித்தடம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் குளித்தலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று (ஆக. 30) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்பதால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழியே செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து குளித்தலையிலிருந்து மணப்பாறை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், பள்ளி பேருந்துகள் தண்ணீர்பள்ளி, பரளி, கோட்டமேடு வழியாக சென்று வரவேண்டும். மணப்பாறையிலிருந்து குளித்தலை வரும் கனரக வாகனங்கள் அய்யர்மலையிலிருந்து சிவாயம், வளையப்பட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, குமாரமங்கலம் வழியாக குளித்தலை சென்றடையலாம். இலகுரக வாகனங்கள் கோட்டைமேடு, எழுநூற்றிமங்கலம், கண்டியூர், வதியம் வழியாக குளித்லை செல்லலாம். அதி கனரக வாகனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்படி வழித்தடங்களில் செல்ல அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

    • திருமங்கலம்-விமான நிலைய சாலையில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைகின்றனர்.
    • அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான சாலையில் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. தென் மாவட்டங்களில் இணைக்க கூடிய முக்கிய பகுதியாக விளங்கும் திருமங்கலம் ரெயில் பாதையில் நான் ஒன்றுக்கு 75-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்கின்றன.

    இதனால் ரெயில்வே கேட் குறைந்தது 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

    திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட காமராஜர்புரம், விடத்த க்குளம், விருச்சங்குளம், ஆலங்குளம், வளைய ப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    எனவே இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூமிபூஜையை நடத்தினார்.

    ஆனால் தற்போது வரை மேம்பாலம் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த நிலையில் நேற்று 7 மணி வரையில் ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது விருதுநகரில் இருந்து 70 வயது மூதாட்டியை உடல்நலக்குறைவு காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 20 நிமிடத்திற்கு மேலாக காத்துகிடந்தது. இதனால் மூதாட்டி பரிதவிப்புக்குள்ளானார்.

    தொடர்ந்து 3 ரெயில்கள் சென்ற பின் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன்பின் ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்றது.

    இதுபோன்று அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ெரயில்வே மேம்பாலம் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ெரயில்வே மேம்பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
    • தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தாராசுரம் ரயில்வே கேட் அருகே திருச்சியில்இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயில் சென்று கொண்டி ருந்தது அப்போது திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, அரித்துவாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (24) தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில், ரயில் வந்து கொண்டிருக்கும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அப்போது எதிர்பாரா விதமாக இக்காட்சியை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இதை பார்ப்பவர்கள் கல் நெஞ்சையும் பதை பதைக்க செய்கிறது.

    தகவலறிந்த இரும்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரும்புபாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு மாத்திகேட் பகுதியில் ஐடி துறையில் பணியாற்றும் கோபிநாத் (28) என்ற இளைஞர் ரயிலில் சிக்கி பலியான நிலையில் மற்றொரு இளைஞரும் பலியானதால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • சங்கரன்கோவிலில் வாகனம் மோதியதில் ரெயில்வே கேட் சேதம் அடைந்தது.
    • சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ரெயில் நிலையம் அருகே புளியங்குடி சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கிராசிங்கில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் ஒருபுறத்தில் இருந்த ரெயில்வே கேட் சேதமடைந்தது. இன்று காலை 8 மணிக்குள் 4 ரெயில்கள் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தை கடக்கும் சூழ்நிலை இருந்ததால், ரெயில்வே பணியாளர்கள் மற்றும் ெரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்து செயின்களை வைத்து தடுப்பு அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ரெயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்வே கேட்டை சேதப்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பயணிகள் ரெயில் மற்றும் தாம்பரம் முதல் நெல்லை வரை செல்லும் அதிவிரைவு ரெயில் ஆகிய 2 ரெயில்களும் ஒரே நேரத்தில் வந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ரெயில்வே கேட் சேதமான நிலையில் செயின் மூலமாக வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

    ×