search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே கேட் உடைந்து விழுந்தது"

    • திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது
    • இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த சாலை வழியாக பஞ்சந்தாங்கி, தபால்புள்ளி, கிணற்றுப்பட்டி, குருந்தம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு விவசாயிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    மேலும் வடமதுரையிலிருந்து நத்தத்திற்கு செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள ரெயில்வேகேட் ஏற்கனவே 2 முறை உடைந்து விழுந்து ள்ளது. தற்போது மீண்டும் சாலையில் உடைந்துள்ளது. பயணிகள் செல்லாததால் சேதம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளோம். மேலும் முறையாக பராமரிக்காத தால் மழை காலத்தில் கேட் உடைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விசயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×