search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

    • திருமங்கலம்-விமான நிலைய சாலையில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைகின்றனர்.
    • அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான சாலையில் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. தென் மாவட்டங்களில் இணைக்க கூடிய முக்கிய பகுதியாக விளங்கும் திருமங்கலம் ரெயில் பாதையில் நான் ஒன்றுக்கு 75-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்கின்றன.

    இதனால் ரெயில்வே கேட் குறைந்தது 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

    திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட காமராஜர்புரம், விடத்த க்குளம், விருச்சங்குளம், ஆலங்குளம், வளைய ப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    எனவே இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூமிபூஜையை நடத்தினார்.

    ஆனால் தற்போது வரை மேம்பாலம் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த நிலையில் நேற்று 7 மணி வரையில் ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது விருதுநகரில் இருந்து 70 வயது மூதாட்டியை உடல்நலக்குறைவு காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 20 நிமிடத்திற்கு மேலாக காத்துகிடந்தது. இதனால் மூதாட்டி பரிதவிப்புக்குள்ளானார்.

    தொடர்ந்து 3 ரெயில்கள் சென்ற பின் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன்பின் ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்றது.

    இதுபோன்று அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ெரயில்வே மேம்பாலம் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ெரயில்வே மேம்பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×