search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Professor"

    • சாகிர்உசேன் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. முதல்வர் முஹம்மது முஸ்தபா வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

    கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் பேசினர். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.

    ஊட்டி அரசு கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது.

    புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

    மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியாவிடம் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலி சான்றிதழ் சமர்ப்பித்த நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    புதுவை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கல்லூரி குடியிருப்பில் வசிக்க தடை விதிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை குரும்பாபேட்டில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் அங்குள்ள ஆசிரியர் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். இதன் அருகே மாணவிகள் விடுதி உள்ளது. அந்த மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    அந்த கல்லூரியில் மும்பையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவர் நடந்து சென்றபோது பேராசிரியர் ஆபாச சைகை செய்தார். இதை ரகசியமாக படம் பிடித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

    இதுசம்பந்தமாக டீன் ராம்குமார் மேற்பார்வையில் விசாரணை நடத்து வருகிறது. இதற்கிடையே பேராசிரியரை குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி நிர்வாகத்தினர் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.

    இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்து மாணவியின் பெற்றோர் மும்பையில் இருந்து வந்துள்ளனர். அவர்களும் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

    தவறு செய்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரை சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கொண்டு போலீசில் புகார் கொடுப்பதா? இல்லையா? என்பது பற்றியும் முடிவு எடுக்க உள்ளனர்.

    இதுபற்றி டீன் ராம்குமாரிடம் கேட்டபோது, இது சம்பந்தமாக ஸ்ரீகுமார் தலைமையில் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதற்கிடையே மேலும் சில ஆசிரியர்கள் மீதும் மாணவிகள் புகார் கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்மீதும் விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கிய தலைமை பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #StudentHarassment #ProfessorDismissed
    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறை தலைவராக பேராசிரியர் கோவிந்த ராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார்.

    இது தொடர்பாக ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர், மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அந்த குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இதுபோல பல்கலைக்கழக ஆங்கில துறையில் பணிபுரிந்த துணை பேராசிரியர்கள் பூவலிங்கம், ரமேஷ், உதவி பேராசிரியர் ஜெனிதா ஆகிய 3 பேர்களும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று பாடம் நடத்தாமலும், துறை தலைவரின் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாகவும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் 3 பேராசிரியர்களும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடந்தது. அப்போது ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    பூவலிங்கம், ஜெனிதா, ரமேஷ்

    இதில் பாலியல் புகார் கூறப்பட்ட தலைமை பேராசிரியர் கோவிந்தராஜுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து பணி நீக்கம் செய்வது என்றும், மற்ற 3 பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்வது என்றும் ஆட்சிமன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர், 4 பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். பல்கலைக்கழகத்தில் 4 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #StudentHarassment #ProfessorDismissed
    ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய நெல்லை பல்கலைக்கழக பேராசிரியரை சஸ்பெண்டு செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜூ. இவர் கல்லூரி வளர்ச்சி குழு தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவர் சங்கம் சார்பில் ஒரு செல்போன் உரையாடல் அடங்கிய ஆடியோ சி.டி. மற்றும் புகார் மனு பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் மற்றும் பதிவாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட முக்கிய துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து துணை வேந்தர் பாஸ்கர் உத்தரவின் பேரில் இந்த புகார் குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பேராசிரியர் கோவிந்தராஜூ மற்றும் அந்த ஆராய்ச்சி மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பேராசிரியர் மீது கூறிய புகாரில் உண்மை தன்மை இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் கோவிந்த ராஜூ மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவியும் விடுமுறையில் உள்ளார்.

    இந்த நிலையில் விசாரணையின் அடிப்படையில் மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக புகார் கூறப்பட்ட பேராசிரியர் கோவிந்தராஜூவை இன்று சஸ்பெண்டு செய்து துணை வேந்தர் பாஸ்கர் உத்திரவிட்டுள்ளார்.

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். பேராசிரியர் படுகாயம் அடைந்தார்.

    திருவெண்ணைநல்லூர்:

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசபாபு. இவரது மகள் சாய்மானஷா (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி படித்து வந்தார்.

    அதே கல்லூரியில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பென்திலிப் (30) என்பவர் பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு சாய்மானஷாவும், பென்திலிப்பும் சுற்றுலா செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து கேரளா மூணாறுக்கு புறப்பட்டனர். அந்த மோட்டார் சைக்கிள் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அடுத்த அரசூர் பகுதியில் வந்த போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது திடீரென மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சாய்மானஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பென்திலிப் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பென்திலிப்பை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அரக்கோணத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல் கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,342 மாணவ, மாண விகள் படித்து வருன்றனர்.

    கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர் ஒருவர் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வேலூர் கலெக்டர் ராமனுக்கு புகார் சென்றது.

    இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு, பேராசிரியர் மீதான பாலியல் புகார் விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

    மேலும், பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது. பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூ ரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தவுடன் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஊர்வலமாக சென்று காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் உள்ள சேந்தமங்கலம் ரெயில்வே கேட்அருகில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

    தகவலறிந்துவந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லிங்கம் மற்றும் போலீசார், கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் மாணவ, மாணவிகளை கலைந்து கல்லூரிக்கு செல்லுமாறு எச்சரித்தனர்.

    போராட்டத்தை கைவிட மறுத்தால், கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரித்தனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், மாணவிகளுக்கு ஆதரவாக திரண்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்டுவதில் அர்த்தமில்லை. உங்கள் வீட்டு பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினை என்றால் ‘சும்மா விட்டு விடுவீர்களா’ என்று கேள்வி எழுப்பிய பெண்கள், புகார் சம்பந்தமாக பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீதான புகார் குறித்து துணைவேந்தர் முருகன் விசாரணை நடத்தினார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

    இக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் ‘வாட்ஸ் அப்’ மூலமும், நேரிலும் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த மாணவி அதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.

    மாணவியின் புகார் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்த பேராசிரியர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவி திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், ஆட்டுப்பாக்கம் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதுகுறித்து துணைவேந்தர் முருகன் கூறியதாவது:-

    பேராசிரியர் மீது கூறப்பட்ட புகார் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழக கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் என்றார்.

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறி பின்னர் திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்ட மாணவி, அங்கு செல்ல மறுத்து பழைய கல்லூரிக்கு சென்ற நிலையில் அவருக்கு எதிராக மாற்ற மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

    மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழு முதற்கட்ட விசாரணையோடு மாணவி புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர்.

    இதையடுத்து, சமீபத்தில் திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவி திடீரென மாற்றப்பட்டார். அதேபோல் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியைகள் மைதிலி திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கும், புனிதா கோவை வேளாண் கல்லூரிக்கும் மாற்றப்பட்டனர்.


    இந்த நிலையில், திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்ட ஆணையை மாணவி ஏற்க மறுத்துவிட்டார். நீதி கிடைக்கும் வரை கல்லூரியை விட்டு வெளியேற மாட்டேன் என திட்டவட்டமாக மாணவி கூறினார். கல்லூரிக்கு தினமும் சென்றார்.

    ஆனால், வகுப்பறைக்குள் மாணவி சென்ற உடன் மற்ற மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு பேராசிரியர், பேராசிரியைகள் வெளியில் சென்றுள்ளனர். இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு எதிராக மாணவர்கள், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், தவறு இழைத்தவர்களை தண்டிக்காமல் என்னை வேறு கல்லூரிக்கு மாற்றுவது, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்களை தப்பிக்க வைக்கும் முயற்சி.

    நான் திருவண்ணாமலை கல்லூரியில் தான் தொடர்ந்து படிப்பேன். எனக்கு எதிராக போராட்டம் தூண்டி விடப்படுகிறது. சில மாணவர்கள் என்னை கிண்டலடிக்கும் விதமாக ‘கேலடி கண்மணி.... வெல்லும் எங்கள் போராட்டம்’ என கோ‌ஷமிடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க செயல். எனக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். வேறு கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்றார்.  #ChennaiStudentharassment #AgriCollege

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை ராகிங் செய்து வீடியோ எடுத்த சக மாணவிகள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருக்கும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. பேராசிரியர்கள் பேசியதாக வெளியான ஆடியோக்கள் ‘குரல் மாதிரி’ சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    ‘குரல் மாதிரி’ சோதனை முடிவில் ஆடியோவில் பேசி இருப்பது பேராசிரியைகள் தான் என தெரியவந்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில், உதவி பேராசிரியர் சிக்காமல் இருக்க பேராசிரியைகளுக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் முதலில் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஏனெனில் மாணவிகள் விடுதிக்குள் பேராசிரியர்கள், ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. வேளாண்மை பல்கலை கழக விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. பேராசிரியரின் ‘லீலைகள்’ குறித்து மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தான் முதலில் புகார் கூறியுள்ளார்.

    அப்போது, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டார். கல்லூரி பெயர் கெட்டு போய்விடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் புகாரை மூடிமறைக்க திட்டமிட்டுள்ளது.

    கல்லூரி நிர்வாகத்தின் சமரசத்தை ஏற்று கொள்ளாத மாணவி, வெளிப்படையாக பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்க போவதாக கூறினார். இதையடுத்து தான் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மாணவியை சமரசப்படுத்த அனுப்பப்பட்டனர்.

    மாணவி கட்டளைக்கு அடிப்பணியாததால், ஆத்திரமடைந்த பேராசிரியைகள் 2 பேரும், மிரட்டியுள்ளனர். மாணவிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்துள்ளனர். இதற்காக, விடுதியில் உள்ள சக மாணவிகள் 2 பேர் மூலம் மாணவியிடம் ‘ராகிங்’ செய்து சின்னசின்ன இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    இப்படி செய்வதால், உதவி பேராசிரியர் மீது புகார் அளிக்கவிடாமல் மாணவியை தடுக்க முடியும் என பேராசிரியைகள் நினைத்தனர். ஆனால், மாணவி ‘ராகிங்’ கொடுமைக்கு அஞ்சவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    அதன்பிறகு, மாணவியை அதிகமாக டார்ச்சர் செய்தனர். விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையின் உள் தாழ்ப்பாள், வெளித் தாழ்பாள் உடைக்கப்பட்டது. மாணவியுடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    தனிமைப்படுத்தப்பட்ட மாணவி இரவில் அறையை பூட்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவித்தார். நள்ளிரவில் மாணவி தூங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த 2 மாணவிகள் மூலம் பேராசிரியைகள் மாணவியை பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

    மாணவி வெளியிட்ட ஆடியோவில் பேராசிரியைகள் தங்களிடம் உன்னை பற்றிய ரகசியங்கள் உள்ளன. அதை வெளியிடுவோம் என்று மிரட்டியதும் இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து தான் என்று தெரிய வந்துள்ளது.

    வாணாபுரம் போலீசார் மாணவியை போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து பேராசிரியர்களுக்கு உடந்தையாக இருந்த மாணவிகள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவில் தூங்கும்போது மட்டும் வீடியோ, போட்டோ எடுத்தனரா? அல்லது குளிக்கும் போது, உடைகளை மாற்றும் போது ரகசியமாக போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளனரா? என்று மாணவிகளிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், விடுதியில் உள்ள மற்ற மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், கல்லூரியை சுற்றி உள்ள கிராம மக்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனித உரிமை குழுவும் விசாரணை நடத்துவதற்காக திருவண்ணாமலைக்கு விரைவில் வருகின்றனர்.

    மாணவி பாலியல் புகாரில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவி குற்றம்சாட்டிய பேராசிரியர் ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கியவர் என்பது தெரியவந்துள்ளது. #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருக்கும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகிய 2 பேரும் தங்க பாண்டியனுக்கு சாதகமாக பேசிய ஒர்ஜினல் ஆடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் ஏ.டி.எஸ்.பி. வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார்.

    இந்த நிலையில், தனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. உண்மையை மறைக்க பார்க்கிறது. போலீஸ் விசாரணை மேம்போக்காக தன் மீதே பழி சுமத்துவதை போல் இருப்பதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக மனித உரிமை அமைப்பு, முதல்வரின் தனிப்பிரிவு, பெண்கள் ஆணையம், தாழ்த் தப்பட்டோர் ஆணையம் என பல்வேறு தரப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் மாணவி புகார் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய உதவி பேராசிரியர் தங்க பாண்டியனை பற்றி புதிய புகார்கள் பூதாகரமாக வெளியாகியுள்ளன. தங்கபாண்டியனின் பின்னணி குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

    அவர், ஏற்கனவே பணியாற்றிய கல்லூரியிலும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்டாமல் திருவண்ணாமலை கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இங்கு வந்த பிறகும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

    இதே கல்லூரியில் பணியாற்றிய, வாணாபுரத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் பணியாளர் ஒருவரும் தங்கபாண்டியன் மீது ஏற்கனவே புகார் அளித்துள்ளார். கல்லூரி நிர்வாகம், தங்க பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.

    இதனால், அந்த பெண் பணியாளர் ‘ராஜினாமா’ கடிதம் கொடுத்து விட்டு வேலையில் இருந்து நின்று விட்டார். இந்த நிலையில், தற்போது சென்னை மாணவி கொடுத்த புகாரில் பேராசிரியர் தங்க பாண்டியன் சிக்கியுள்ளார்.

    மாணவி மீது திருட்டுபட்டம் கட்டி, பாலியல் புகாரை திசை மாற்ற முயற்சிப்பதாகவும் மாணவி தரப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். மாணவி தங்கியிருந்த விடுதியில் பெரும்பாலான அறைகளில் உள் தாழ்ப்பாள், வெளி தாழ்ப்பாள் இல்லை.

    இந்த விடுதியில் மொத்தம் 150 மாணவிகள் 72 அறைகளில் தங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான அறைகளில் தாழ்ப்பாள்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாணவி குற்றம் சாட்டுகிறார். பாலியல் புகார் கூறிய மாணவி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,127 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இவ்வளவு மதிப்பெண் பெற்ற மாணவி பென்சில், பேனா திருடினார் என்றால் எவராலும் ஏற்க முடியாத குற்றச்சாட்டாக இருக்கிறது.

    ஆனால், மாணவி கூறிய பாலியல் குற்றச்சாட்டில் இதுவரை பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஏ.டி.எஸ்.பி. வனிதா விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டும் பேராசிரியைகள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் கல்லூரிக்கே நேரில் சென்று பேராசிரியைகளிடம் விளக்கம் கேட்டு விசாரித்து வருகின்றனர்.

    ஒரு புகாரில் சிக்கியவர்கள் மீது எப்.ஐ.ஆர். (முதல்தகவல் அறிக்கை) பதிவு செய்து கைது செய்தோ? அல்லது காவலில் வைத்து விசாரணை நடத்துவது தான் நடைமுறை. ஆனால், பேராசிரியர்கள் விவகாரத்தில் போலீசாரின் விசாரணை வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

    போலீசாரின் இது போன்ற விசாரணையால், மாணவிக்கு மிரட்டல் வருவதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பேராசிரியைகளிடம் வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் இன்றும் கல்லூரிக்கே சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவி கொடுத்த 6 நிமிட ஆடியோவை ஓட விட்டு பேராசிரியைகளிடம், அதுப்பற்றி கேள்வி எழுப்பினர். மாணவி புகாருக்கு பேராசிரியைகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மாணவி பாலியல் புகாரில் புதிய புதிய குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெளியாகி வருவதால், வேளாண்மை கல்லூரியில் நாள்தோறும் பரபரப்பு நீடிக்கிறது. இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் நிம்மதியிழந்து செயவதறியாமல் திகைப்பில் உள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege

    பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா? என்று அறிவதற்காக குரல் பரிசோதனைக்காக நேற்று அவர் சென்னை அழைத்துவரப்பட்டார். #NirmalaDevei
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ‘செல்போன்’ உரையாடல் அவருடைய குரல் தானா? என்று பரிசோதனை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி நிர்மலாதேவிக்கு சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்காக ஐகோர்ட்டு மதுரை கிளையில் போலீசார் அனுமதி பெற்றனர். இதற்காக நிர்மலாதேவியை ஜூன் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்துச்செல்வதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவியை தனி வேன் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மாலை சென்னை அழைத்துவந்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடயவியல் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட உள்ளார். அங்கு அவருடைய குரல் பரிசோதனை நடைபெற உள்ளது. அப்போது அவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபோது, என்ன பேசினாரோ? அதை அப்படியே சிலமுறை பேசச்சொல்லி, தடய அறிவியல் நிபுணர்கள் ஆடியோவில் பதிவு செய்வார்கள்.

    அதன்பின்னர் நிர்மலாதேவி ஏற்கனவே பேசி வெளியான செல்போன் உரையாடலுடன், தற்போது பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒப்பிட்டுப்பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும்.

    இந்த சோதனை முடிந்தவுடன் நிர்மலாதேவியை மீண்டும் தனி வேன் மூலம் மதுரை மத்திய சிறைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து செல்ல உள்ளனர்.  #NirmalaDevei
    ×