search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspendu"

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #Vigilance

    வேலூர்:

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தவர் கே.எஸ்.முரளிபிரசாத் (வயது 55). இவர் தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் 11 பேரிடம், அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பள நிலுவை தொகையில் கமி‌ஷன் கேட்டுள்ளார்.

    அதற்கான கமி‌ஷனை செயலர் (பொறியியல்) சேகர் என்பவர் வசூல் செய்து நேற்று முன்தினம் பொது மேலாளர் அலுவலகத்தில் வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முரளிபிரசாத் காரில் இருந்த ரூ.11 லட்சம், சேகரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம், அருகில் தோட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.1 லட்சம் என ரூ.14 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முரளிபிரசாத்தை சென்னை ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். #Vigilance

    ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய நெல்லை பல்கலைக்கழக பேராசிரியரை சஸ்பெண்டு செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜூ. இவர் கல்லூரி வளர்ச்சி குழு தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவர் சங்கம் சார்பில் ஒரு செல்போன் உரையாடல் அடங்கிய ஆடியோ சி.டி. மற்றும் புகார் மனு பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் மற்றும் பதிவாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட முக்கிய துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து துணை வேந்தர் பாஸ்கர் உத்தரவின் பேரில் இந்த புகார் குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பேராசிரியர் கோவிந்தராஜூ மற்றும் அந்த ஆராய்ச்சி மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பேராசிரியர் மீது கூறிய புகாரில் உண்மை தன்மை இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் கோவிந்த ராஜூ மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவியும் விடுமுறையில் உள்ளார்.

    இந்த நிலையில் விசாரணையின் அடிப்படையில் மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக புகார் கூறப்பட்ட பேராசிரியர் கோவிந்தராஜூவை இன்று சஸ்பெண்டு செய்து துணை வேந்தர் பாஸ்கர் உத்திரவிட்டுள்ளார்.

    ×