search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஸ்மிஸ்"

    • யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
    • ஊழியர்கள் மீது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணியாற்றிய மேலும் 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், 40 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

    கடந்த 14ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் நடவடிக்கையாக, மதுபோதையில் பணியாற்றிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது.
    • அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
    • சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும்

    கிராமங்கள் தன்னிறைவு பெற்றதால் நாடு வளர்ச்சி அடையும் என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்று. அதன்படி கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் அரசு மிகுந்த கவனம் காட்டி வருகிறது. கிராம மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு தடையின்றி நடத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சி சமுதாயத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டுமென்றால் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியை பெற வேண்டும். இதனை மனதில் வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர், ஊராட்சி செயலாளரால் எட்டி உதைக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

    இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்றும், அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுமக்கள் முன்னிலையில் குறைகளை சபைக்கு எடுத்துவைத்த விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்வதோடு மட்டுமின்றி, டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. இந்த கோரிக்கை வலுத்தும் வருகிறது.

    • போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார்.

    மும்பை:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற சென்ட்ரல் அதிவிரைவு ரெயிலில் கடந்த 31-ந்தேதியன்று ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் சேத்தன்சிங் சவுத்ரி என்பவர் தன்னுடன் பயணம் செய்த போலீஸ் அதிகாரி திகாரம் மீனா மற்றும் 3 பயணிகள் என 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி னர். அவருக்கு மனநல மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார். 

    • சுங்க இலாகா மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால் தான் தங்கம் கடத்தல் நடப்பதாகவும் புகார் எழுந்தது.
    • கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புகார்கள் உள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் கேரளாவில் தான் தங்கம் கடத்தல் பெருமளவில் நடந்து வருகிறது.

    இதனை தடுக்க சுங்க இலாகாவினரும், வருவாய் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தங்கம் கடத்தல் குறைந்தபாடில்லை. சுங்க இலாகா மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால் தான் தங்கம் கடத்தல் நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர். அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கடத்தல் தொடர் கதையாகவே உள்ளது.

    இந்நிலையில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கூடுதல் நடவடிக்கையாக அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கோழிக்கோடு விமான நிலைய சூப்பிரண்டுகள் ஆஷா, கணபதி, இன்ஸ்பெக்டர்கள் யோகேஷ், யாசர் அராபத், சுதீர் குமார், நரேஷ் குலியா, மினிமோள் மற்றும் காவலர்கள் அசோகன், பிரான்சின் ஆகிய 9 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • சங்க துணை விதிகளுக்கு புறம்பாக உள்ளூர் பால் விற்பனையை குறைத்து காண்பித்து நிதியிழப்பு முறைகேடு செய்தது உறுதியானது
    • சங்க செயலாளர் பணிக்கு வராமல், ஆள்மாறாட்டம் செய்து கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை சங்க துணை விதிகளுக்கு முரணாக சங்க பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் நித்யா. இவர் பல முறைகேடுகள் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சங்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை பதிவாளர் ஜெயபாலன் (பால்வளம்) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்க உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய கொள்முதல் பதிவேட்டை பராமரிக்காதது தெரியவந்தது. மேலும் உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் எவ்வளவு பால் கொள்முதல் செய்யப்பட்டது? என்ற விவரம் இல்லை. உள்ளூர் விற்பனை எவ்வளவு, ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பால் அளவு விவரம் குறித்தும் பதிவேடுகள் இல்லை.

    சங்க துணை விதிகளுக்கு புறம்பாக உள்ளூர் பால் விற்பனையை குறைத்து காண்பித்து நிதியிழப்பு முறைகேடு செய்தது உறுதியானது. அது மட்டுமல்லாமல் சங்க செயலாளர் பணிக்கு வராமல், ஆள்மாறாட்டம் செய்து கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை சங்க துணை விதிகளுக்கு முரணாக சங்க பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது. தனியார் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்தது. சங்க கணக்குகள் 1.4.2022 முதல் 20.1.2023 தேதி வரையான ஆவணங்களை சமர்பிக்காமல் தற்காலிக கையாடல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து சங்க செயலாளராக இருந்த நித்யாவை தற்காலிக பணி நீக்கம் செய்தும், சங்கத்தின் தலைவர் சாந்தி புஸ்பவள்ளியை டிஸ்மிஸ் செய்தும் மாவட்ட துணை பதிவாளர் ஜெயபாலன் உத்தரவிட்டார்.

    ×