search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prize"

    • புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள் எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

    சிவகிரி:

    புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள், எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர். பெண்கள் பிரிவில் வட்டார அளவில் 29 புள்ளிகள் எடுத்து, 2-வது இடத்தையும் பெற்று கோப்பை வென்றது. மாவட்ட அளவில் 6 மாணவிகளும் தேர்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை மாணவ - மாணவிகளுக்கு வழங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர அறிவுரைகள் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்வி குழு உறுப்பினர்கள், அறப்பணி குழு உறுப்பினர்கள், வீரகுமார், காசிராஜன், மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

    • பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மொத்தம் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவிய போட்டி 'தூரிகை 2023'-க்கான ஆன்லைன் ரிஜிஸ்டர் ரேஷனில் 865 மாணவ மாணவிகள் பதிவு செய்திருந்தனர். மேலும் பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில் 6 பிரிவு களில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 7 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம், நான்காம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என 24 பிரிவினர்களுக்கு மொத்தம் ரூபாய் 1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் திலீப் குமார் , மண்டல இணைப்பதிவாளர் நந்த குமார் , வங்கியின் பொது மேலாளர் (பொறுப்பு) , உதவி பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள், கலந்து கொண்டார்கள். 

    • 12 பேருக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கினார்.
    • இலவச பஸ் பயணத்திற்கான அரசாணைகள் வழங்கி சிறப்பித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ்மன்றம் சார்பில் கவிதை, கட்டுரைப் பேச்சுப் போட்டிகள், அண்ணல் அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாள்களின் கொண்டாட்டத்திற்கான பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் 34 பேருக்கு பரிசுத்தொகை களு க்குரிய காசோலைகளும் சான்றிதழ்களும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    மேலும், திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவிக்குப் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் மற்றும் தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்கள் 12 பேருக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கினார். மொத்தமாக 47 பேருக்கு ரூ. 2,19,000 பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள் வழங்கினார். அத்துடன் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு இலவச பஸ் பயணத்திற்கான அரசாணைகள் வழங்கி சிறப்பித்தார்.இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை முறைகாரர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். அம்பலகாரர் சக்திவேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி விழாவிற்கு வரவேற்றார். பள்ளியின் செயலர் சங்கர் ஒலிம்பிக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி உட்பட ஏராளமான போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    பள்ளியின் தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன், உறுப்பினர் ஜெகன் உள்பட நிர்வாக குழுவினர் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியைகள் திருவளர்ச்செல்வி, மீனு பிரியங்கா ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • விழாவின் முதன்மை விருந்தினராக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்றார்.
    • கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளிகளின் ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. இரு பள்ளிகளின் தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.

    டாக்டர் ரோஸ்லின் தினேஷ் மற்றும் டாக்டர் ஸ்டீவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் முதன்மை விருந்தினராக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், சிறப்பு விருந்தி னர்களாக முருகன் (திருவம்பலபுரம்), வின்சி மணியரசு (கூடங்குளம்), சகாயராஜ் ( விஜயாபதி), செல்வி வளர்மதி (கூத்தங்குழி), பொன் மீனா ட்சி அரவிந்தன்(ராதாபுரம்), கந்தசாமி மணிகண்டன் (உதயத்தூர்) ஆகிய பஞ்சா யத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். இரு பள்ளி முதல்வர்கள் முருகேசன் மற்றும் செல்வராணி பள்ளி ஆண்டு அறிக்கையை வாசித்தனர்.

    கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. துணை முதல்வர் ஜெனி நன்றி கூறினார். மேலும் துணை முதல்வர்கள் டேனியல் மற்றும் ஷைலா கலந்து கொண்டனர்.

    • ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
    • சூரனூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி அணி 4-ம் இடத்தை பிடித்தது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த வடுவூர் விளையாட்டு அகாடமி அரங்கில் மாவட்ட கபடி கழகம், கோவை ஈஷா யோகா மையம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தியது.

    இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.

    ஆண்கள் பிரிவில் வடுவூர் புதுகை நண்பர்கள் கபடி குழு B அணி முதல் இடத்தையும், வடுவூர் புதுகை நண்பர்கள் A அணி 2-ம் இடத்தையும், வானவில் கபடி குழு பரவாக்கோட்டை அணி 3-ம் இடத்தையும், கட்டக்குடி விளையாட்டு கழக அணி 4-ம் இடத்தையும் பிடித்தது.

    இதேபோல், பெண்கள் பிரிவில் கட்டக்குடி விளையாட்டு கழக அணி முதல் இடத்தையும், மன்னார்குடி அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் இடத்தையும், கட்டக்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளி அணி 3-ம் இடத்தையும், சூரனூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி அணி 4-ம் இடத்தையும் பிடித்தது.

    பின்னர், வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ராசராசேந்திரன் தலைமை தாங்கினார்.

    கோவை ஈஷா யோகா மைய ஸ்வாமி தவமோளா வெற்றிபெற்ற அணிகளுக்கு கேடயம், பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் பொன் கோவிந்தராசு, அசோகன், வடுவூர் ஊராட்சி தலைவர் பாலசுந்தரம், வடுவூர் தென்பாதி ஊராட்சி தலைவர் பாமா, வடுவூர் வடபாதி ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் விஜய், வடுவூர் விளையாட்டு அகாடமி செயலாளர் அக்ரி சாமிநாதன், இணைச்செயலாளர்கள் சேகர், வேலுமணி, ரங்கநாதன், ஈஷா மைய பொறுப்பாளர் அசோகன் மற்றும் ராஜேந்திரன் கோவை ஈஷா மைய திவ்யா, பிரியா சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • தடகள் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் வட்டார பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையிலான குழு மற்றும் தடகள போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆடவர் மற்றும் மகளிருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

    டி.டி.என். கல்வி குழு மத்தின் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கி போட்டிகளை தொடக்கி வைத்தார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை உரை யாற்றினார். தொடர்ந்து மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளாடிஸ் லீமா ரோஸ் தேசிய கொடியையும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் கொடியை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் மற்றும் ஒலிம்பிக் கொடியினை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் ஏற்றினர்.

    குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், ராதாபுரம் குறு வட்டார செயலாளருமான பெஞ்சமின் வரவேற்று பேசினார். வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் வாழ்த்தி பேசினார். ஆண்களுக்கான தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி பெற்றது.

    2-வது இடத்தை இடிந்தகரை பிஷப்ரோச் மேல்நிலைப்பள்ளியும், 3-வது இடத்தை திசையன் விளை பொதிகை பப்ளிக் மேல்நிலைப்பள்ளி அணியும் பெற்றது. மகளிருக்கான தடகள் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட த்தை கூடங்குளம் ஹார்வர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெற்று சென்றது. 2-வது இடத்தை திசையன்விளை ஹோலி ரெடிமேர்ஸ் மேல்நி லைப் பள்ளியும், 3-வது பரிசை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியும் பெற்றது.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற தடகள் போட்டியில் 35 பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாட்டி னை ஹை-டெக் பாலி டெக்னிக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.
    • தொடாந்து, ஏனங்குடி அணியினர் 3-து பரிசும், கல்லார் அணியினர் 4-வது பரிசும் பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் ஈஷா கிராமோத்சவம் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் நடத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியில், திருமருகல் ஆலங்குடி, நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பெரியதும்பூர், நாகூர், நாகை வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவை சேர்ந்த 40, அணி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    திருமருகல் மற்றும் ஆலங்குடி வீரர்களுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதைப்போல் நாகை மற்றும் வேதாரண்யம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் நாகை அணியினர் கூடுதல் வெற்றி புள்ளிகள் பெற்று வேதாரண்யம் அணியினரை தோற்கடித்தனர்.

    இதில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் அணியினர், செப்டம்பர் மாதம் திருச்சி மற்றும் கோவையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நம்பியார் நகர் முதல் பரிசு, கீச்சாங்குப்பம் 2-வது பரிசு, ஏனங்குடி 3-து பரிசு, கல்லார் 4-வது பரிசு பெற்றனர்.

    • விழாவில் திருவாதிரைக்களி நடனம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். யதீஸ்வரி முகுந்த பிரியா அம்பா சிறப்புரை வழங்கினார். குழுப்பாடல் (மலையாளம்), திருவாதிரைக்களி நடனம், கவிதை வாசித்தல் (மலையாளம்) ஆகிய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பேரவை தலைவி தமயந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு பார்வதி தேவி ஏற்பாடு செய்திருந்தார்.

    சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் உடற்கல்வி, விளையாட்டு அறிவியல் மற்றும் யோகா துறையால் கொண்டாடப்பட்டது. கோ-கோ, டேபிள் டென்னிஸ், கயிறு தாண்டுதல், செஸ், வாக் ரோஸ், பந்தய போட்டிகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி அம்பா மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கினர். இப்போட்டியில் மொத்தம் 147 மாணவர்களும், 29 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது.
    • 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவி லான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது. போட்டிகளை நகர செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. முடிவில் முதல் பரிசு பெற்ற ஆரல்வாய்மொழி அணிக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையும், 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற திசையன்விளை அணிக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுவீகர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பார் அண்ரூ ஜேசன் ஆகியோர் சார்பில் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-வது பரிசு பெற்ற அணிக்கு தங்கையா ஸ்வீட்ஸ் சார்பில் ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப் பட்டது. விழாவில் ராதாபு ரம் ஒன்றிய துணை அமைப் பாளர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மகளிர் கபடி போட்டியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
    • இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டிபாளையம் அணியும், அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, பீகார், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

    பிரமாண்ட கேலரியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது கைதட்டியும், விசில் அடித்தும், ஆரவா ரத்துடன் போட்டியை கண்டுகளித்தனர். இரவில் நடந்த இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டி பாளையம் அணியும் அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    இதில் கோபிசெட்டி பாளையம் 27 புள்ளிகள் பெற்றது. அந்தியூர் அணி 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து முதல் பரிசை அந்தியூர் பள்ளி மாணவிகளும், 2-வது பரிசை கோபிசெட்டி பாளையம் கல்லூரி மாணவிகளும், 3-வது பரிசை மேற்கு ெரயில்வேயும் 4-வது பரிசை சென்னையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 2 லட்சமும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சமும், 3-வது பரிசாக ஒரு லட்சமும், 4-வது பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பைகள் சிறப்பு பரிசுகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அந்தியூர் அணியில் 34 முறை பிடிபடாமல் சென்ற கவுந்தர்யாவை அமைச்சர் மற்றும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

    இந்த போட்டியில், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலா ளருமான சண்முக வடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சந்திரயான்-3 வெற்றி விழா, ஆசிரியர் தினவிழா மற்றும் இலவச கல்வி மையம் தொடக்க விழா நடந்தது.
    • மாணவர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த தேசிங்குராஜ புரத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் சந்திரயான்-3 வெற்றி விழா, ஆசிரியர் தினவிழா மற்றும் இலவச கல்வி மையம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் நாகை அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி கலந்து கொண்டு மாணவர்கள் அறிவியலை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.விழாவில் சமூக ஆர்வலர் துரைமுருகன் மற்றும் கல்வி ஆர்வலர் ரவி, முருகவேல் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

    முடிவில் தன்னார்வலர் ரேவதி நன்றி கூறினார்.

    விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனை வருக்கும் இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    ×