பள்ளி விளையாட்டு விழா

கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி விளையாட்டு விழா
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை முறைகாரர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். அம்பலகாரர் சக்திவேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி விழாவிற்கு வரவேற்றார். பள்ளியின் செயலர் சங்கர் ஒலிம்பிக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி உட்பட ஏராளமான போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

பள்ளியின் தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன், உறுப்பினர் ஜெகன் உள்பட நிர்வாக குழுவினர் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியைகள் திருவளர்ச்செல்வி, மீனு பிரியங்கா ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com