என் மலர்
நீங்கள் தேடியது "Department of Tamil Development"
- 12 பேருக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கினார்.
- இலவச பஸ் பயணத்திற்கான அரசாணைகள் வழங்கி சிறப்பித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ்மன்றம் சார்பில் கவிதை, கட்டுரைப் பேச்சுப் போட்டிகள், அண்ணல் அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாள்களின் கொண்டாட்டத்திற்கான பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் 34 பேருக்கு பரிசுத்தொகை களு க்குரிய காசோலைகளும் சான்றிதழ்களும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
மேலும், திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவிக்குப் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் மற்றும் தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்கள் 12 பேருக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கினார். மொத்தமாக 47 பேருக்கு ரூ. 2,19,000 பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகள் வழங்கினார். அத்துடன் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு இலவச பஸ் பயணத்திற்கான அரசாணைகள் வழங்கி சிறப்பித்தார்.இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






