search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூர்  குருகுலம்  மேல்நிலைப்  பள்ளியில் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்
    X

    ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.

    வடலூர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்

    • பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மொத்தம் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவிய போட்டி 'தூரிகை 2023'-க்கான ஆன்லைன் ரிஜிஸ்டர் ரேஷனில் 865 மாணவ மாணவிகள் பதிவு செய்திருந்தனர். மேலும் பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில் 6 பிரிவு களில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 7 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம், நான்காம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என 24 பிரிவினர்களுக்கு மொத்தம் ரூபாய் 1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் திலீப் குமார் , மண்டல இணைப்பதிவாளர் நந்த குமார் , வங்கியின் பொது மேலாளர் (பொறுப்பு) , உதவி பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள், கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×