search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prize"

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் காந்தி பிறந்த நாளையொட்டி

    வருகிற 31-ந்தேதியும், நேரு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 3-ந்தேதியும் காலை 9.30 மணிக்கு நெல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் (டவுன்) நடக்கிறது.

    காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் பள்ளி மாணவர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள்,வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்பிலும், கல்லூரிகளுக்கு காந்தியடி கள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறு கிறது.

    நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளிகளுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், கல்லூரிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேரு வின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்பு களில் போட்டி நடைபெறும்.

    நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை மாவட்ட அளவில் நடக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

    மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவல கத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண்: 0462 2502521) தொடர்பு கொள்ளலாம்.

    நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் இடம் பிடித்த குழந்தைக்கு தங்க பதக்கமும், முறையே 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

    விழாவில் கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும், கலந்து கொண்ட அனைத்து குழந்தை களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையில்:-

    போட்டியானது குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.
    • சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் இன்று கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி நடத்தும் 3-ம் ஆண்டு சிலம்பப் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்திய குழந்தைகள் நல சங்கம் ஆற்றுப்படுத்துனர் டென்னிஸ் மேரி வரவேற்புரை ஆற்றினார்.

    மானோஜிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி தலைமை தாங்கினார்.

    மேம்பாலம் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

    நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பேராசிரியர் சுகுமாறன், இந்திய குழந்தைகள் நல சங்கம் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார், கண்காணிப்பாளர் நாராயணசாமி ராஜா, நேரு யுவ கேந்திரா கணக்காளர் பவுன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதையடுத்து சிலம்பப் போட்டியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட ங்களை சேர்ந்த 5 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர், மாணவிகளுக்கு தனி தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.

    அவர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் சுற்றினர். தொடர்ந்து சிலம்ப போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    போட்டி நடுவராக ஆசான் ஐயப்பன் செயல்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து மாலையில் பாராட்டு விழா மற்றும் சிறந்த சிலம்பாட்ட ஆசான்களுக்கான கலைப்புலி கோவிந்தராஜ் விருது வழங்கும் விழா, ஆண்டு விழா நடைபெற உள்ளது.

    இதில் ஆசான்களுக்கான விருதை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் தொழில்நுட்ப குழு சேர்மன் சந்திரசேகரன் வழங்குகிறார். சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசுகளை இந்திய குழந்தைகள் நல சங்கம் கௌரவ செயலாளர் ரகுராமன் வழங்கி பாராட்டுகிறார்.

    முடிவில் தஞ்சாவூர் கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி பயிற்சியாளர் துளசிராமன் நன்றி கூறுகிறார்.

    • மீலாடி நபி விழாவை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான கேள்வி பதில் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் பங்கேற்ற 25 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ஜூலானி பள்ளியில் மீலாடி நபி விழாவை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான கேள்வி பதில் போட்டி நடைபெற்றது.இதில் ஜம் ஜம் ஆயிஷா முதல் பரிசை பெற்றார்.2-வது பரிசை செய்யது ஹலீமா, 3-வது பரிசை அப்துல் பாசித் ஆகியோரும் பெற்றனர். மேலும் போட்டியில் பங்கேற்ற 25 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழாவிற்கு முகம்மது தலைமை தாங்கினார்.ஜெய்லானி பள்ளியின் தலைவர் ரஹமத்துல்லா மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெசிமுதீன் வரவேற்று பேசினார். மன்னர் பாதுல் அஸ்ஹப் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஹாஜி மலாங் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முகம்மது ஷமீம் குழுவினர் செய்திருந்தனர்.

    • ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.

    கும்பகோணம்:

    பாபநாசம் திராவிடர் சமுதாய நலக்கல்வி அறக்கட்டளை, இமயம் கல்வி சமூகப்பணி அறக்கட்டளை, தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கட்டுரை போட்டிகள் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

    போட்டியில் கணினி அறிவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மாதவன் முதல் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    தொடாந்து, பேச்சு போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.

    அவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மாதவி பாராட்டி வாழ்த்தினார்.

    அப்போது தேர்வு நெறியாளர் சுந்தரராசன், வேதியல் துறை தலைவர் மீனாட்சி சுந்தரம், புவியியல் துறை தலைவர் கோபு, கார்த்தி, சவுந்தர்ராஜன், கல்லூரி நூலகர் சங்கரலிங்கம், கவின் கலை மன்ற பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், விவேகா னந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இறகுபந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் பிருந்தாவன் உள் விளை யாட்டரங்கில் நடை பெற்றது.போட்டிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழு வதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்க னைகள் கலந்து கொண்ட னர். போட்டிகள் 9 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வர்கள் என பல்வேறு பிரிவு களில் ஆண், பெண் தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்பட்டன.பரிசளிப்பு விழாவில் மாவட்ட தலைவர் ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அபுதாஹிர் வரவேற்றார். மாவட்ட செயலர் பாரூக் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் தமிழ்நாடு அணி சார்பில் தேசிய போட்டியில் பங்குபெற்ற மகரிஷி பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரிக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தனர். வெற்றி பெற்றவர்கள் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்க தாகும். மாவட்ட சேர்மன் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

    • சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
    • எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி யின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசு கையில், கலைஞர் நூற்றா ண்டு விழாவை ஒரு வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும். அவரது சாத னைகள் மற்றும் எல்லாத்து றையிலும் முத்திரை பதித்ததை நாட்டு மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்ட திற்கி ணங்க வடக்கு மாவட்ட தி.மு.க. விற்குட்பட்ட எல்லா பகுதி களிலும் நலத்திட்ட உதவி களுடன் பல்வேறு நிகழ்ச்சி கள் நடை பெறுகின்றன. ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதனையடுத்து சிறுவர், சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி நடத்தப் பட்டுள்ளது. இந்த போட்டியும் திறமைகள் அதிகம் தேவைப்படுகின்ற விளையாட்டாகும். எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழு மையாக தன்னை ஈடுப டுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியும், விளையாட்டும் நமக்கு அவசியமானது என்பதை உணர்ந்து எதிர்கால தலைமுறை யின ராகிய நீங்கள் நல்ல பழக்க வழக்க ங்களுடன் எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமை ப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்ப ழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோ க்கிய ராபின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
    • அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை மேற்கு ஒன் றிய அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் ஊராட்சியில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. துவக்க விழாவில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    இரண்டு நாட்கள் பகல் மற்றும் மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் ஐம்பது அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் காரைக்குடி கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், எஸ்.ஆர்.சதீஷ் நினைவு கீழத்தெரு அணியும் மோதின. பரப ரப்பான இப்போட்டி யில் சதீஷ் நினைவு கீழத்தெரு அணி டைபிரேக்கரில் வென்று முதலிடத்தை பெற் றது.

    தெற்குதெரு அணி இரண்டாமிடத்தையும், அப் பாஸ் மெமோரியல் காட்டுத் தலைவாசல் மூன்றாமிடத் தையும், முத்துப்பட்டினம் அணி நான்காமிடத்தையும் வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கம் மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், சாக் கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங் கினர்.

    இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள் மகேந்திரன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், அம்மா பேரவை ஊரவயல் ராமு, ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சி.கே.நாகராஜ், சங்கராபுரம் ஊராட்சி உறுப்பினர் ரஞ்சித்குமார், கிளை செயலாளர்கள் நம்பிராஜன், கைலாசநாதன், வீரப்பன், மனோகரன், மாரியப்பன், கபிலன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி திவாகர் நன்றி கூறினார்.

    • திருவருட்பா, தெய்வமணிமாலை பாடல்களை மாணவர்கள் இசையோடு பாடினர்.
    • சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை களைய அரும்பாடு பட்டார் வள்ளலார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மேலகோபுரவாசலில் உள்ள வள்ளலார்அறச்சாலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார். வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவருட்பா, தெய்வமணிமாலை பாடல்களை மாணவர்கள் இசையோடு பாடி வடலூர் ராமலிங்க அடிகளுக்கு அவல், நாட்டு சர்க்கரை, பொட்டுக்கடலை வைத்து படையலிட்டு வழிபாடு நிகழ்த்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் பேசுகையில்:- சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை களைய அரும்பாடு பட்டார் வள்ளலார் என்றார்.

    பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் ராசகணேசன் பேசுகையில், உலக அமைதிக்கான வள்ளலாரின் ஜீவகாருண்யம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுகளை கடைபிடிக்கவேண்டும் என்றார். உயிரிரக்கமும், ஒழுக்கமுமே உண்மையான கடவுள் வழிபாடு இதுவே வள்ளலாரின் சன்மார்க்க நெறிகள் என்றார்.

    வள்ளலார் அறச்சா லையினர் மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மேலும், தமிழில் காலாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாண வர்களுக்கு வள்ளலாரின் நூல்களை வள்ளலார் சத்திய தருமசாலையினர் பரிசாக வழங்கி பாராட்டினர்.

    • பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
    • ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நெல்லை மாவட்ட அளவில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி வருகிற 6-ந்தேதி யும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந்தேதியும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள், நெல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

    அதன்படி அண்ணா பிறந்த நாள் போட்டிகளாக பள்ளி மாணவர்களுக்கு காஞ்சி தலைவன், அண்ணா வும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாள ராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா என்ற தலைப் பிலும், கல்லூரி மாணவர்க ளுக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிகள் நடை பெறுகிறது.

    இதே போல் பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்கரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி கள் நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் வழங்க வேண்டும்.

    ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் நடை பெறும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கிடை யேயான போட்டியில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    மேலும் போட்டியில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரி யரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வரவேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக (0462-2502521) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. 

    • தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது
    • முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் வழ்ஙகப்பட்டது.

    தாராபுரம்:

    தாராபுரத்தை அருகேயுள்ள உப்பாறு அணை அருகே பூளவாடி_தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக., சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்திற்கு பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், சென்னிமலை, முத்தூர் ,ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், கரூர், அரவக்குறிச்சி ,கன்னிவாடி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

    200 மீட்டர் மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசு 3/4 தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஐந்தாவது பரிசு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.

    300 மீட்டர் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு 3/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம்- கோப்பை வழங்கப்பட்டது.நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

    உப்பாறு அணை அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை காண குண்டடம் ,கொடுவாய் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ,காங்கேயம் பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    • போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது.
    • இதில் 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு கேரம் கழகம் சார்பில் மாநில அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது.

    இதில் தஞ்சை,சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 24 மாவட்ட ங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 192 பேர், ஆண்கள் இரட்டையர் பிரிவில் 73 பேர், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 50 பேர் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது.

    நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப் போட்டி யில் இறுதி ஆட்டம் நடை பெற்றது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அசோக்குமார், டில்லி பாபு அணியினர் முதல் இடத்தை பிடித்தனர்.

    அதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை சேர்ந்த டில்லி பாபு முதலிடத்தையும் சென்னையை சேர்ந்த அருள் கார்த்தி 2-ம் இடத்தையும் பிடித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் மதுரையை சேர்ந்த மித்ரா முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த பரக்கத் நிஷா 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசு தொகையை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கேரம் கழக துணை தலைவர் ராஜகோபால், செயலாளர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் விக்னேஷ், நிர்மல்குமார், ரெத்தினவேல் மற்றும் பலர் செய்திருந்தனர்

    ×