search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
    X

    நெல்லை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

    • பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
    • ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நெல்லை மாவட்ட அளவில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி வருகிற 6-ந்தேதி யும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந்தேதியும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள், நெல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

    அதன்படி அண்ணா பிறந்த நாள் போட்டிகளாக பள்ளி மாணவர்களுக்கு காஞ்சி தலைவன், அண்ணா வும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாள ராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா என்ற தலைப் பிலும், கல்லூரி மாணவர்க ளுக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிகள் நடை பெறுகிறது.

    இதே போல் பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்கரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி கள் நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் வழங்க வேண்டும்.

    ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் நடை பெறும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கிடை யேயான போட்டியில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    மேலும் போட்டியில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரி யரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வரவேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக (0462-2502521) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×